Content feed Comments Feed


மீண்டும் படம் எடுக்கிறார் கஸ்தூரி ராஜா. ஹீரோ அவரது மகன் தனுஷ். ட்‌ரீம்ஸ் போல் கிளாமரை நம்பாமல் இந்த புதிய படத்தை எடுக்கயிருக்கிறாராம்.
அக்மார்க் கிராமத்து படத்தை எடுத்துக் கொண்டிருந்த கஸ்தூரி ராஜா திசை மாறிப்போனது துள்ளுவதோ இளமை படத்துக்குப் பிறகு. துள்ளுவதோ இளமைக்குப் பிறகு சதைதான் அவரது கதை. இந்த புதிய பார்முலாவில் வந்த எந்தப் படமும் ஓடவில்லை. கஸ்தூரி ராஜா என்றால் காயகல்பம் என்ற இமேஜை மட்டுமே பெற்றுத் தந்தன.

இனி படம் எடுக்காதீங்க என்பது இரு மகன்களின் கட்டளை. அதையும் மீறி அவ்வப்போது கஸ்தூ‌ரி ராஜாவிடமிருந்து பட அறிவிப்பு வரும். ஆனால் அறிவிப்போடு ஆவியாகிவிடும் அந்தப் படங்கள்.

தனுஷை வைத்து மீண்டும் படம் இயக்குவதாக இப்போது அறிவித்திருக்கிறார். படத்தின் பெயர் காதல் வசமாகி. ஹீரோயினை தேடிக் கொண்டிருக்கிறாராம்.

தனுஷ் நடிப்பதாக, இது மாலை நேரத்து மயக்கம் படத்தை அறிவித்திருந்தார் செல்வராகவன். தற்போது அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டது. காதல் வசமாகி எப்படி என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments

Post a Comment

About Us