Content feed Comments Feed

எங்கள் தேசம் தேசமாய் இல்லை
எரியும் பிணக்காடு
வேட்டுச் சத்தம் கேட்டு பழகிய செவிகளுக்கு
அதுவே வேணுகானம்
கூட்டி அள்ளும் உடல் தசைகளுக்கு
கொள்ளி வைப்புக்கள் தேவை இல்லை
நின்மதி என்பது நிரந்தரமற்றிட
நீயா---- நானா ----யாரோ------ எவரோ
நேற்றோ இன்றோ நேரமும் உண்டோ
பயத்தோடு வாழும் பாக்கியம்
எமக்கு மட்டும் தான்

ஈழத்தாய் பிரசவ வலியால் முக்குகிறாள் முனகுகிறாள்
பிள்ளை பிறக்கும்முன்னே கொட்டும் தண்ணீர் குடம்
ஆனால் இவளோ ரத்தம் ரத்தமாய் கொட்டோ கொட்டென்று
குடம் குடமாய் கொட்டுகின்றாள்
வாசல் வரை வந்த பிள்ளை வழி தவறிப்போகா

ஆழமாய் நாம் சிந்தித்தால் ஈழம் பிறப்பது உறுதி
ஈழத்தில் கேட்க்கும் ஓலம்
கேட்க யாரும் இல்லை இந்த அவலம்
தினம் தினம் நிகழும் மரணம் இயற்கையின் நியதி

ஒவ்வொரு கணமும் விழும் பல நூறு பிணம்
இது அரக்கரின் சதி
பத்தி எரிகின்றது தேசம் பார்த்து ரசிப்பவர்அதிகம்
கத்தி அழுது கேட்க்கின்றேன் என் கண்ணீர் துடை என்று
அடுத்தவனும் அள்ளி வீசுகின்றான் அனலை
அயலவன் என்று நினைத்தேன்

அவனும் அந்நியன் போல் நடக்கின்றான்
நித்திரையிலும் எமக்கு மட்டும் தான் சித்திரவதை
புத்தம் செய்த போதனையா கொன்ற பிணத்திலும்
இச்சை தீர்த்து இன்பம் காணு என்று
எத்தனை எத்தனை சோகங்கள் எடுத்து நான்
இயம்ப இயலா துயரங்கள்
அச்சம் கொண்டவன் இல்லை தமிழன்
அஞ்சா நெஞ்சம் படைத்தவன் மறத்தமிழன்
அஞ்சி ஒழிய நான் என்ன எலியா அடிபட்ட புலி

பாய்ந்து வருவேன் ஒரு நாள்
பயந்து ஓடுவாய் அதனால்
ஈழத்தாயின் சபதம் இது!

0 comments

Post a Comment

About Us