Content feed Comments Feed

குடியானவர்கள் என்று ஒருபோதும் கருதாத
குடியரசின் கெடுமையினிலிருந்து விடுபட
விடுதலை வேண்டிபுறப்பட்ட எம்மவர்களை
கெடுதலை செய்தவராகக்கருதிடும் -கொடியவரின்
கையிலே சிக்கித்தவிக்கையிலே -அவர்களை
அடிமைகளாக்கிட அடிபணியவைத்திட எண்ணி
அடிவருடிகளின் துணையுடன் அரங்கேறும் அவலம்

படிப்படியாக கொன்றுகுவித்திட செய்யும்செயல்கள் யாவும்
புரிய முடியர்தவர்களாய் அறிவில் விடியாதவர்களாய் பல
தடியர்களாய் இன்னும் தமிழருள் இருப்பதும் ஏனோ?
ஏம்தமிழினம் செய்தபாவம் தான் ஏதோ?

நிலத்திலே நம்மவர் படும்பாடும்-அவர்கள்
நிம்மதியற்ற வாழ்வுபற்றி நினைவுமின்றி
புலத்திலே சில புண்ணாக்குமனிதர்கள்
புலம்புகின்ற புலம்பல்கள் புரியல்லையே?

மனத்திலே கொண்டதன் சபலத்தையெல்லாம்
மனித்தைமீறிய ஆசைஅலைமோதவலைவீசி
கலையென்று பொல்லாதஇல்லாததெல்லாம்
சொல்லிபுலம்பும்வதையை சொல்லயாற
நல்லோர்கள்இல்லா உலகாச்சே
நம்மினம் செய்த பாவம்தான் என்ன?



ராகவி
நெதர்லாந்து.

0 comments

Post a Comment

About Us