Content feed Comments Feed


யாரைப் பார்த்தாலும் பிகினி, பிகினி என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு வேண்டாமப்பா இந்த நீச்சலுடைக் காட்சிகள் என்று கூறுகிறார் சந்தியா.
காதல் நாயகி சந்தியா இப்போதும் அதே பட்டப் பெயருடன்தான் இருக்கிறார். காரணம், இடையில் அவர் நடித்த படங்கள் அவருக்கு பெரும் பிரேக்கைத் தராததே.

தற்போது இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம், கன்னத்தில் ஆப்தரக்ஷா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறாராம்.

எந்த மொழிப் படங்களாக இருந்தாலும் ஒரு விஷயத்தில் மட்டும் படு தெளிவாக இருக்கிறார் சந்தியா. அது கவர்ச்சிகரமான, நீச்சல் உடைக் காட்சிகளில் நடிப்பதே இல்லை என்பதே.

யாரைப் பார்த்தாலும் பிகினி உடை என்கிறார்கள். கவர்ச்சிப் போட்டி என்கிறார்கள். எனக்கு இதுகுறித்தெல்லாம் கவலையே இல்லை. நான் எல்லை மீறி நடிக்கவே மாட்டேன். குறிப்பாக நீச்சல் உடைக் காட்சிகளில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன்.

எனக்கெல்லாம் அந்த உடை பொருந்துமா என்றே தெரியவில்லை. இதுவரை யாரும் அப்படி நடிக்குமாறு கேட்டதில்லை. கேட்டாலும் நடிக்க மாட்டேன் என்கிறார் தெளிவாக.

இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் படத்தில் வித்தியாசமான காஸ்ட்யூமில் பரதநாட்டியம் ஆடியிருக்கிறாராம் சந்தியா. எப்படி என்று கேட்டால் படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க என்கிறார் சிரித்தபடி.

0 comments

Post a Comment

About Us