Content feed Comments Feed

மண்ணுலகில் பூக்களையே
மனந்திறந்து படைத்தவனே..
என் எண்ணம் சொல்கிறேன்
என்னை மன்னித்து விடு..
உன்னைப்போல ஒரு குருடன்
உலகத்தில் இருப்பானோ..?

உருவங்களில் இரண்டை
ஒரு ஜாதி என்றாய்
பருவங்களை நீ வகுத்து
பாகுபடுத்தினாய்
பாராட்டுகிறேன் அதற்காக
உன்னை ....!

சீராட்டும் தாய் மடியில்
அந்த
சிட்டு உறங்கிவிட்டு...
வாட்டும் வறுமையினால்
முட்டை விற்கப் போகையிலே
எட்டி பிடித்திழுத்து
பட்டுபோக வைத்தானே
ஒரு பாவி ..

தாலாட்டும் வயதினிலே
அவன் தாய்
தாய்மையைத் தான்
புதைத்தாளோ...!
தனிக் காமத்தைத்தான்
விதைத்தாளோ..?

காதல் தோல்வியா..?
கண்ணில்லாக் காமமா.?
என்னைப் பொறுத்தவரை
அவனை நீயோ......
கருவிலே கலைத்திருக்கலாம்.

இனவெறி ஈழத்தில்
இழையோடி இருக்கலாம் .
என்
இளைய பிஞ்சைச் சிதைத்ததோ
ஒருவன் மனவெறியல்லவா...!

வைகறையை முதல்
வாங்கும்
கிழக்குமாகாணமா.....?
இன்னும்
வெளுக்காமல்
இருக்கிறது ...

பாமடி அணைக்கட்டில்
எங்கள் பால்நிலவைக் குத்தி
பாறாங்கல் போட்டானாம்
பரதேசி ஒருவன்...

ஆடையின்றிக் கிடந்ததாம்
எங்கள் பாவாடைப் பூ
அதன்
பிஞ்சு வயிற்றை
பிதுக்கி எடுத்தானாம்
அந்தப் பெண்மையை
உணராப் பேடி..
போதவில்லை என்று
பாதிக் கழுத்திலும்
பல்லைப் பதித்தானாம்..

எங்கள்
முல்லைக் கொடி மீது
முரட்டுக் காமத்தை
முத்தத்திலும் வைத்தானாம்.
அந்தப்
பித்தன் ....!

சித்தன் போல
நீயங்கே....
சிருஷ்டிக்க வேண்டாமடா
பத்து மனிதன் என்றாலும்
பரவாயில்லை
பார்த்து அனுப்பி வையடா...!

நேற்று சிதைத்த
எங்கள் பிஞ்சை
சொர்க்கத்திலாவது
சேர்த்துவிடு
அந்தப் பாவியும் அங்கே
வந்துவிட்டால்
எங்கள் பக்கத்திலாவது
நீயும் சேர்த்துவிடு..!

எடுக்கத் தெரிந்த உனக்கின்று
திருப்பித் தரவும் தெரியாதே..
இருகண் இருந்த போதிலுமே
இன்னும் நீயும்
குருடனடா..!!


கண்ணீரோடு
இளங்கவிஞர்
ஈழபாரதி

0 comments

Post a Comment

About Us