| விக்னேஷ்வரன், லக்சனா நடித்திருக்கும் ஈசா கொஞ்சம் சிக்கலான கதை. விக்னேஷ்வரனுக்கு கரடு முரடான கேரக்டர். படத்தில் ஹீரோயினின் கன்னத்தை கடிப்பதுபோல் நடிக்கச் சொன்னதுக்கு நிஜமாகவே கடித்து குதறியிருக்கிறார். உப்பள சண்டைக் காட்சிகள் பேசப்படும் என்கிறார்கள் யூனிட்டில். ஆர்கே ஹீரோவாக நடித்திருக்கும் இரண்டாவது படம் அழகர் மலை. பெயர் பாந்தமாக இருந்தாலும் இதுவும் ஆக்சன் கதைதான். ஆர்கே-க்கு ஜோடி தாமிரபரணி பானு. ஆர்கே-யின் மாமாவாக வரும் வடிவேலு, இசையமைத்திருக்கும் இளையராஜா இருவரையும் அதிகம் நம்பியிருக்கிறது அழகர்மலை. டான்ஸ் மாஸ்டர் ஜான்பாபுவின் மகன் விகாஷ் ஹீரோவாக அறிமுகமாகும் படம் நேசி. சோனியா சூரி ஹீரோயின். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிற்பி இசையமைத்திருக்கிறார். சரவண கிருஷ்ணா இயக்கியிருக்கும் இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்களில் சிலர் கிளைமாக்ஸில் கண்கலங்கிவிட்டனராம். படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்திருக்கிறது. |

0 comments