Content feed Comments Feed

இளமை வசந்தம்

Posted by Admin 8/5/09

இளமை வசந்தம்
வாடா மலர்களின்
தேன் துளிகள்
இனிமைச் சாரலுக்குள்
இமைகளை நீந்தவைக்கும்
வர்ணம் மாறா வானவில்லை போன்றது

அள்ளி எடுத்தால் ஆனந்தம்
கொடுத்து எடுத்தால் பேரின்பம்
அடுத்து மீண்டும் ஆரம்பம்
அள்ளக் குறைவதில்லை கோடி இன்பம்
இரவுக்குளதான் இங்கே உதயங்கள் ஆரம்பம்

வாசம் போன பூ என்றால்
வண்டுக்கும் அது தெரிவதில்லை
இறக்கை விரிக்கும் பட்டாம் பூச்சிகள்
இருப்பதில்லை ஏனோ ஒரு மலரில்
இதழ்கள் உதிரா மலரானால்
இளமை வசந்தம் என்றும் உன்னிடமே.



வல்வை சுஜேன்.

0 comments

Post a Comment

About Us