Content feed Comments Feed



முன்னணி நடிகர்களின் பாடுதான் திண்டாட்டம். புதுமுகங்களுடன் நடிக்க முடியாது, பீல்டு அவுட்டானவர்களையும் ஜோடி சேர்க்க முடியாது. முதல் வ‌ரிசை அசின், த்‌ரிஷா போன்றவர்களோ இந்தியில் பிஸி.
இருப்பது தமன்னாவும், அனுஷ்காவும், நயன்தாராவும், இந்த மூன்று பேருடன் எத்தனை படங்களில்தான் ஜோடி சேருவது?

தனுஷ் நடிக்கும் மாப்பிள்ளை ‌‌ரீமேக்கில் அமலா நடித்த வேடத்தில் அசின் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது இயக்குனர் சுரா‌ஜின் எண்ணம். எண்ணத்தை உடனே செயல்படுத்தும் விதமாக அசினை தொடர்பு கொண்டு கேட்டதற்கு கிடைத்த பதில், நோ கால்ஷீட். அம்மணி இந்தியில் பிஸியாம்.

தமன்னாவுடன் படிக்காதவன் படத்தில் இப்போதுதான் தனுஷ் நடித்தார். ஸ்ரேயாவுடன் குட்டி படத்தில் நடிக்கிறார். த்‌ரிஷாவுடன் ஆடுகளம் இருக்கிறது. ச‌ரி, இலியானாவை கேட்கலாம் என்றால் அவர் படத்தின் பட்ஜெட்டில் 70 சதவீதத்தை சம்பளமாக கேட்டு திணறடித்திருக்கிறார்.

இறுதியில் ஹன்ஷிகாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். மணிசர்மா படத்துக்கு இசையமைக்கிறார். கேமரா வெங்கடேஷ். இத்தேஷ்ஜெபக் படத்தை தயா‌ரிக்கிறார்.

0 comments

Post a Comment

About Us