Content feed Comments Feed

பாப்பு வெட்டி ஜீன்ஸ் போட்டு
உதட்டு சாயம் பூசி
குதிகால் செருப்பு போட்டு
துள்ளி நடை போடுவது--அது
அயல் நாட்டு அழகு

உச்சி வகிடெடுத்து
இரட்டை சடை போட்டு
சின்ன பொட்டும் வெச்சி
பாவாடை தாவணியில்
கொலுசு ஒளி கேட்க
அன்ன நடை போடுவது--இது
நம்ம நாட்டு பேரழகு

கட்டி பிடிக்க கால நேரம்; இல்லை
முத்தமிட கட்டு பாடும் ;இல்லை
தாலி இல்லை பிள்ளை உண்டு
வேலி தாண்டல் வாழ்வும் உண்டு--அது
அயல் நாட்டு வம்பு

கட்டி அணைக்க காலம் நேரம்
முத்தமிட முற்றிலும் தனிமை
தாலி இன்றி பிள்ளை இல்லை
வேலி தாண்டல் வாழ்வும் இல்லை--இது
நம்ம நாட்டு பண்பு

காதலனை வீட்டுக்கே அழைத்து
அப்பனுக்கே அறிமுகமாக்கி
அவன் எதிரிலேயே அறையில் புகுந்து
கதவை சாற்றி கூடி குலாவி
லூட்டி அடிப்பது --அது
அயல் நாட்டு ஜுரம்

ஊர் அறியா காதலித்து
ஊர் அறிய கை பிடித்து
ஈன்றோர் சான்றோர் ஆசியுடன்
சாத்திரம் பார்த்து
சாந்தி முகூர்த்தம்--இது
நம்ம நாட்டு வரம்

0 comments

Post a Comment

About Us