Content feed Comments Feed

இலங்கைத் தாயே – எம்மை
ஈன்றவள் நீயே – எம்கை
விலங்கை யுடைத்துக் – காலில்
சலங்கை சினுங்க விட மாட்டாயோ ?

கலங்கரை விளக்கே தாயே
கரையறியா தோர்க்கே நீயே
மடைக்குள் அடைபட்ட மக்கள் வெள்ளத்தை
மரணத்தி னின்று நீ காப்பாயோ?

உரலினுள் விழுந்த பரல்களின் மேலே
உலக்கை விழுந்திடித்த கதையாக – உன்
கரங்களின் முன் நீளும் விரல்களின்
சிரக் கண்களைச் சீவி நீ எறிவாயோ?

ஈன்றவளே நீ, அறிவாய் அம்மா
இதயச்சுத்தி யெல்லாம் சும்மா
மடியைப் பங்கிட மாக்கள் கூட்டம் – உன்
மைந்தரை வதைப்பதை உணராயோ?

கோடி மக்கள் சுகமாக – மறு
கோடியில் மக்கள் சவமாக – அதைப்
பாடி உறைகிறேன் மரமாக – நீ
கேட்டு உருகிட வாராயோ?

மூத்தவன் கலைஞன், இளையவன் இராவணண்
கூட்டிலே இடையில், பொது வுடமையும் இணைந்தே
நலிந்தோர் முதுகில் விதைத்த தம் வலிமையை
மாற்றிட வல்லமை தாராயோ?

0 comments

Post a Comment

About Us