பருத்திவீரனில் சொந்தக் குரலில் பேசினார் ப்ரியாமணி. அவருக்கு தேசிய விருது கிடைக்க இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. இந்தியில் நடிக்கும் பல நடிகைகளுக்கு ப்ரியாமணியை விட தடித்த குரல். உதாரணமாக ராணி முகர்ஜி. கட்டைக் குரல் என்பதற்காக வேறு யாரும் அவருக்குப் பதில் டப்பிங் பேசுவதில்லை. அவர் நடிக்கும் படங்களுககு அவரேதான் டப்பிங் பேசுவார். ப்ரியாமணி கேட்கும் கேள்வி, ராணி முகர்ஜிக்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா? இயக்குனர்களே, ப்ரியாமணியின் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? |

0 comments