Content feed Comments Feed

மீராஜாஸ்மின் கதாநாயகியாக நடித்த ஆதிநாராயணா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஒரு ஆச்சர்யம். காலை பத்து மணிக்கெல்லாம் மேடையில் ஆஜராகியிருந்தார் சிம்பு.
பகல் பத்து மணி என்பது அவருக்கு பெரும்பாலும் அதிகாலைதான்! இரவெல்லாம் விழித்திருந்து பணியாற்றும் இரவு பறவையல்லவா அவர்?

ஆடியோவை வெளியிட்டு பேசிய சிம்புவின் வார்த்தைகளில் அளவு கடந்த யதார்த்தம். “இந்த விழாவுக்கு போக போறேன்னு சொன்னதும் பெரிய பட விழான்னா பரவாயில்லே. ஏன் இதுபோன்ற சின்ன படத்தோட விழாக்களில் கலந்துக்கறீங்கன்னு கேட்டாரு. நான் அவரிடம், பெரிய படம்னா ஆறு மணி நேரம் ஓடுமான்னு கேட்டேன். வெற்றி படமா இருந்தாலும் சரி, தோல்விப்படமா இருந்தாலும் சரி. எல்லாமே மூணு மணி நேரம் ஓடுறதுதான். நிறைய செலவு பண்ணி எடுக்கிற படங்கள் கூட தோல்வி அடையுது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படுகிற படங்கள் ஹிட் ஆகுது. அப்படி பார்த்தா குறைந்த பட்ஜெட்டில் எடுத்து நன்றாக ஓடிய படம்தான் பெரிய படம்”

பேப்பர் விளம்பரங்களில் கூட ரஜினி சார் நடிச்ச படத்திற்கும் ஒரே அளவுதான் டிசைன் பண்ண முடியும். என்னோட படங்களுக்கும் ஒரே அளவுதான் டிசைன் பண்ண முடியும். அதுக்கு மேல நினைச்சாலும் பிரிண்ட் பண்ண அனுமதியில்லை. அப்படி இருக்கும் போது நல்லா ஓடுற படங்கள்தான் பெரிய படம். இந்த ஆதிநாராயணா படமும் பெரிய ஹிட் ஆகி பெரிய படம் லிஸ்ட்டில் இடம் பிடிக்கணும் என்றார்.

பின்னாலேயே பேச வந்த பேரரசு, இப்போதெல்லாம் தங்கள் நடித்த படங்களுக்கான ஆடியோ வெளியீட்டு விழா, வெற்றி விழாக்களுக்கு கூட கதாநாயகிகள் வருவதில்லை. ஆனால் ஆந்திராவில் அப்படியில்லை. எல்லா விழாக்களுக்கும் ஹீரோயின்கள் வராங்க. அந்த நிலை இங்கேயும் வரணும் என்றார் கவலையோடு! இந்த விழாவில் மீராஜாஸ்மின் வரவில்லை என்பதுதான் பேரரசுவின் கவலைக்கு காரணம்.

0 comments

Post a Comment

About Us