கல்லூரிக்குள்ளேயே தீவிரவாதத்தை வளர்க்கிற ஒரு குரூப்பை கையும் களவுமாக பிடிக்கிறார் சிவகிரி. அதுவும் எப்படி? தானே மாணவராக அட்மிஷன் ஆகி! அட, நல்லாருக்கே என்று நிமிர வைக்கிற மாதிரி சில காட்சிகளும் உண்டு அந்த கல்லூரி கலாட்டாவில். ஈவ் டீசிங் செய்கிற மாணவர்களை கண்டு அஞ்சி நடுங்கும் அந்த மலை மலை ஹீரோ, அவர்கள் சொல்லுவதையெல்லாம் செய்கிற போது தியேட்டரில் சிரிப்பலை. அசமஞ்சம் என்று அவர்கள் நினைத்தால் அடுத்த சீனிலேயே அதிரடி என்ட்ரி கொடுத்து வில்லன்களை வெளுக்கிற போது, பின்னணியில் “சிவகிரி சிவகிரி” என்று ஆர் ஆர் இசைத்து மிரளடித்திருக்கலாம்!பிறகுதான் பிரச்சனையே. நான்தாண்டா இந்த ஊரு ஏசி என்று வேடத்தை கலைக்கிறார் சிவகிரி. அதுவரைக்கும் இருந்த மீசையையும் ஷேவ் செய்துவிடுகிறாரா? அசல் அமுல்பேபி எபெஃக்ட்! காக்கி சட்டைக்குள் எரிமலையை எதிர்பார்த்தால், ஐஸ்கிரீமாக உலா வருகிறார் மனுஷன். அவ்வப்போது வெளிநாடுகளில் இவர் ஆடும் டூயட்டும், அவ்வளவு பெரிய உடம்போடு இவர் கொடுக்கிற மூவ்மென்ட்டும் ரசனை பெப்பர்மென்ட்! கூட இருந்தே குழி பறித்தால் பரவாயில்லை. வெடிகுண்டு, தீவிரவாதம் என்று தமிழ்நாட்டையே மிரள வைக்கிறார் வில்லன் குகன். அவர் ஏன் இப்படி ஆனார் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக். சிவகிரியின் காதல் மனைவி ருக்ஷனாவை இவரும் காதலிக்கிறார். எனக்கு கிடைக்காதவள் உனக்கும் கிடைக்கக் கூடாது என்று அவர் வில்லன் சிரிப்பு சிரிக்க, கடைசியில் சிவகிரியின் புல்லட்டில் தீவிரவாதி கம் நண்பன் அவுட். வெங்கல கடையில் யானை புகுந்த மாதிரி, சிவகிரியின் ஃபைட் சீன்கள் களை கட்டுகிறது. கொஞ்சம் மெனக்கட்டால் குணச்சித்திர வேடங்களில் கலக்கலாம். மூன்று கதாநாயகிகள். யாருமே நடிப்பை நம்பவில்லை என்பதை ஒவ்வொரு கோணத்திலும் உணர்த்துகிறார்கள். தலைமை ஆசிரியர் வெண்ணிறாடை மூர்த்தியும், ப்யூன் நெல்லை சிவாவும் சவசவ என்று பேசினாலும் லேசாக கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.ஒளிப்பதிவாளரை விட, இசையமைப்பாளர் முந்துகிறார். கட்டிடம் கட்டுகிற ஆசையில் கல்லை அடுக்கியிருக்கிறார்கள். அஸ்திவாரத்தில்தான் ஆட்டம்! |
இந்தியில் வந்த பூங்க் என்ற படத்தின் தமிழாக்கமாம். டைரக்ஷன் ராம்கோபால் வர்மா என்பது கூடுதல் அதட்டல்! தன்னுடன் பிசினஸ் பார்ட்னராக இருக்கும் அஸ்வினியை அவமானப்படுத்தி விரட்டியடிக்கிறார் தொழிலதிபர் சுதீப். பிரச்சனையை பில்லி சூனிய உதவியோடு எதிர்கொள்கிறார் அஸ்வினி. எப்படி? சுதீப்பின் பெண் குழந்தை ரக்ஷாவின் கால் மண்ணை எடுத்து பில்லி சூனியம் வைக்கிறார். பள்ளிக்கு போகிற பிஞ்சு, திடீரென்று ஆண் குரலில் சிரிக்க அதிர்ந்து போகிறது ஸ்கூல். இந்த காலத்திலே கூடவா பேய் பிசாசுன்னு பேசுவீங்க. இதுக்கு பேரு என்று புரியாத சில விஷயங்களை எடுத்துவிடுகிறார்கள் மருத்துவர்கள். நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வரும் குழந்தையை கண்டு துடியாக துடிக்கும் நாத்திக அப்பா முதன் முதலாக பில்லி சூனியத்தை நம்புகிறார். அதற்கான ஸ்பெஷலிஸ்டோடு வீட்டுக்கு வந்தால், அங்கேதான் ட்விஸ்ட். இன்னும் கொஞ்ச நேரத்திலே உங்க பொண்ணு இறந்திருவா என்கிறார் அவர். அதற்குள் ஆவியிடமிருந்து பிள்ளையை காப்பாற்ற வேண்டும். எப்படி? தேடி தேடி சூனியத்தை எடுக்கிறார். கடைசியில்...? நுனி சீட்டுக்கு ரசிகனை தள்ளிவிடுகிற க்ளைமாக்ஸ். எல்லா கேரக்டர்களுமே விதிர் விதிர்த்து போகிற அளவுக்கு நடிப்பை வழங்குகிறார்கள். குறிப்பாக குழந்தை ரக்ஷா. இவளையா அந்த பாழாப்போன பேய் வாட்டி எடுக்கணும்? என்று ரசிகர்களை பரிதாப்பட வைக்கிறாள் குழந்தை. திடீரென்று காணாமல் போவதும், ஒரு சீக்கு பிடித்த காக்காய் இவளை கண்ட்ரோல் பண்ணி வைத்திருப்பதும் பகீர். அம்மா, ரொம்ப வலிக்குதும்மா என்று குழந்தை அழும் போது மனசு வலிக்கிறது. தனி அறையில் குழந்தையை படுக்க வைக்கும் மேற்கத்திய கலாச்சாரம் ஓகேதான். அதற்காக பிரச்சனைக்குள்ளான பிறகும் குழந்தையை தனி அறையில் படுக்க வைப்பதுதான் ஏறி மிதிக்கிற லாஜிக். வீட்டு வேலைக்காரியில் இருந்து, குழந்தையின் பாட்டி வரைக்கும் டெரர் எªஃக்ட் கொடுப்பதுதான் புஸ்வாண பில்டப்! இந்த பில்டப் சும்மா கிடக்கிற பொம்மைகளையும் விட்டு வைக்கவில்லை. சவீதாசிங்கின் ஒளிப்பதிவு மிரட்டல். பின்னணி இசைதான் பேய் படங்களின் பலமே. அதை சரியாக செய்திருக்கிறார் இசையமைப்பாளர் பப்பி. பொம்மாயி... ஹையோடா! |
வழக்கமான இந்த கதையை, சொல்லியிருக்கும் விதத்தில்தான் மிரட்டல்! புதுமுக இயக்குனர் பாலகணேசாவுக்கு ஒரு 'பலே' போடுங்கப்பா...எடுத்தவுடனே ஸ்கீரினை ஓப்பன் பண்ணி, இருப்பதையெல்லாம் காட்டாமல், விக்னேஷின் குடிசைக்குள்ளே லக்ஷணா உயிரோடு இருப்பது போல துவங்குகிறது படம். கிடைக்கிற அண்ணாச்சிகளையெல்லாம் அண்ணாசி பழம்போல துண்டு போடுகிறார் விக்கி. இன்டர்வெல்லில்தான் தெரிகிறது, அதுவரை விக்னேஷ் பேசிக் கொண்டிருந்தது லக்ஷணாவுடன் அல்ல. அவரது பிணத்துடன் என்று! ஏன் இந்த கொலை வெறி துரத்தல்? காதலும், கவலையுமாக ஒரு பிளாஷ்பேக். தனது மனைவியின் சாவுக்கு காரணமானவர்களை போட்டுத்தள்ளும் விக்னேஷை துரத்துகிறது போலீஸ். கையில் சிக்கினாரா? விறுவிறுப்பான சுபம். இந்த படமே முதல், அல்லது கடைசி என்ற வெறியோடு உழைத்திருக்கிறார் விக்னேஷ். இப்படி ஒரு வெறித்தனமான ஹீரோ இல்லையென்றால், அந்த க்ளைமாக்ஸ் சண்டையை நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது இயக்குனர். பாம்புகள், தவளைகள் நடுவே ஒரு தவம் போலவே கிடந்து ஊர்ந்திருக்கிறார் விக்னேஷ். மனசு நிறைய பாராட்டலாம். பிதாமகன் விக்ரமை இமிடேட் செய்வதை தவிர்த்திருந்தால் விக்னேஷின் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் கிடைத்திருக்கும். அதுதான் கொஞ்சம் உறுத்தல். லக்ஷணா, நிஜமாகவே லட்சணம். சற்றே அர்ச்சனாவின் சாயல். நடிப்பில் அவரையே மிஞ்சுவார் போலிருக்கிறது. தன்னை காதலிக்கும் விக்னேஷ் அதை வெளிப்படுத்த தடுமாறும்போது தானே முன் வந்து காதலை சொல்வது பேரழகு. இவருக்கும் விக்னேஷ¨க்குமான நெருக்கத்தில் நிழலை மிஞ்சிய நிஜம்.கவனிக்கத்தக்க புதுமுகம் அந்த கருப்பு வில்லன். கடைசி வரை 'டவுசரு...' டயலாக்கை விடாமல் பற்றிக் கொள்வதுதான் சற்றே அலுப்பு. எல்லா ரீல்களிலும் அலட்டிக் கொள்ளாமல் நடந்து, கடைசி ரீலில் ஆக்ரோஷமாக மோதி செத்துப்போகையில் 'ஒழிஞ்சாண்டா துரோகி' என்று நெட்டி முறிக்கிறது தியேட்டர். காமெடிக்கென்று ஒரு லாரி ஆட்களை இறக்கியிருக்கிறார்கள். அதில் ஜம்மென்று முந்தி நிற்பது லொள்ளு மனோகரும், சுவர் முட்டி சுப்புராஜூம்தான். மிகவும் பிரமிக்க வைத்திருக்கிறார்கள் சண்டை இயக்குனர் ட்ரேகன் சிங்லீயும், ஒளிப்பதிவாளர் ஆர்.பி.பாலகணேஷ§ம். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் ஃபைட், ஆங்கில படங்களுக்கு இணையானது.இசை- புதுமுகம் ஹரண். எல்லா பாடல்களும் இனிமை. குறிப்பாக யாரடி நீ மோகினி ரீமிக்ஸ் துள்ளல். பின்னணி இசையும் காட்சிகளை கவுரப்படுத்துகின்றன. அவித்த உப்புமாவையே தாளிக்காமல், தனக்கென்று தனி அடையாளத்தோடு அறிமுகம் ஆகியிருக்கும் புதுமுக இயக்குனர் பாலகணேசாவுக்கு சின்ன சின்ன குறைகளை மறந்து தரலாம் ஒரு பூச்செண்டு. ஈசா- நிச்சயம் லேசா இல்லை! |
கதை மிக மிக சின்ன ஒரு முடிச்சுதான்.உடல்நலம் சரியில்லாத தன் தந்தையை (விஜயகுமார்)அரசு மருத்துவமனையில் ஆபரேஷனுக்காக சேர்க்கிறார் லெனின் (சேரன்). அதே மருத்துவமனையில் தன் தாயைச் சேர்த்துவிட்டு இறுதி நேரத்தில் பணம் கட்ட முடியாமல் தவிக்கிறார் நாதிரா (பத்மப்ரியா). இலக்கியம் படிக்கும் கல்லூரி மாணவி. அந்த இக்கட்டான நேரத்தில் கைகொடுக்கிறார் லெனின். அடிப்படையில் கம்யூனிஸ்ட். தொழில், கொல்கத்தாவில் மெரைன் இஞ்ஜினியர். ஓரிரு நாட்களில் இருவருக்கும் ஏற்படும் பழக்கம், இலக்கியங்களை விவாதிக்கும் அளவு நட்பாகிறது. பின்னர் கொல்கத்தா செல்லும் சேரன், தொடர்ந்து நாதிராவுக்கு கடிதம் அனுப்புகிறார். அவரும் பதிலுக்குக் கடிதம் அனுப்ப, நாளடைவில் அதுவே காதலாகிறது. இந்தக் காதலுக்கு நாகூரைச் சேர்ந்த முஸ்லிம்களான நாதிரா குடும்பம் ஆரம்பத்தில் எதிர்ப்புக் காட்டுகிறது. ஆனால் மகனைக் கூட்டிக் கொண்டு நாகூருக்கே போய் சம்பந்தம் பேசுகிறார் விஜயகுமார். எதிர்பாராதவிதமாக, நாதிராவின் தந்தை இதற்கு ஒப்புக் கொள்கிறார். ஆனால் கொஞ்ச நாள் பொறுத்திருக்க வேண்டும் என்கிறார். தொடர்ந்து கடிதங்கள் எழுதக் கூடாது என்றும் மாதம் ஒன்று என எழுதிக் கொண்டால் போதும் என்றும் நிபந்தனை விதிக்க, சந்தோஷத்துடன் அதற்கு அதற்கு ஒப்புக் கொண்டு கொல்கத்தா செல்கிறார் லெனின். ஆனால் நாதிராவிடமிருந்து தொடர்ந்து கடிதங்கள் வருவது நின்று போக, மனமுடைந்த லெனின் நாகூருக்கே சென்று பார்க்கிறார். அங்கே நாதிரா குடும்பமே இல்லை. எங்கே போனார்கள் என்று சொல்லவும் ஆளில்லை. கடைசி வரை கண்டுபிடிக்கவே முடியாமல் நொந்து போகிறார். தந்தையின் வற்புறுத்தலால் வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். ஒரு மகனுக்குத் தந்தையாகிறார். ஆனால் தன் பழைய காதலியின் தேடலைத் தொடர்கிறார். தனது ஏக்கங்கள், ஏமாற்றங்களை கடிதங்களாக எழுதி வைக்கிறார். ஆனால் கடைசிவரை நாதிராவைப் பார்க்க முடியாத பெருங்குறையுடன் மரித்துப் போகிறார். லெனின் பாத்திரத்தில் சேரன் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. எழுபதுகளில் ஆரம்பமாகிறது கதை. இறந்துபோன சேரனின் டைரி மற்றும் கடிதங்களை அவர் மகன் படிக்க ஆரம்பிக்கும்போது, ப்ளாஷ்பேக் துவங்குகிறது. காதல் நினைவுகள்... அதுவும் தோற்றுப் போன காதல் நினைவுகளை எத்தனை சுவாரஸ்மாகச் சொல்லியிருக்கலாம்... ம்ஹூம்... சேரனிடம் அந்த ஆட்டோகிராப் டச் இந்தப் படத்தில் நூறு சதவிகிதம் மிஸ்ஸிங். தகவல் தொடர்புக்கு வேறு வழியே இல்லாத கடிதப் போக்குவரத்துக் காலத்தில் கதை நடக்கிறது என்பதற்காக படம் முழுக்க இருவரும் மாறி மாறி கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பதையே காட்டுவது பெரும் சலிப்பை வரவழைக்கிறது. தொழில்நுட்ப ரீதியில் சேரனின் மிகச் சிறந்த படம் இது என்றாலும், ஒரு காட்சியில் கூட, மனம் லயிக்க முடியாத அளவுக்கு படு வீக்கான திரைக்கதை. எழுபதுகளில் இருந்த 'கல்கத்தா', ட்ராம் வண்டிகள், கார்கள், தபால் அலுவலகம், தந்தி அலுவலகம், மைக்கூடு, பேனா முனை, தபால் முத்திரை... இப்படிப் பார்த்துப் பார்த்து காட்சிகளுக்குத் தேவையான பின்னணியை கச்சிதமாக வடித்த சேரனால் அழுத்தமான காட்சிகளை அமைக்க முடியாமல் போயிருக்கிறது. தோற்றுப் போன காதல்களே காவியங்களாகின்றன... ஆனால் இந்த காதலில் அழுத்தமான, சுவாரஸ்யமான சம்பவங்களே இல்லை என்பதை எந்தக் கட்டத்திலும் இயக்குநர் சேரன் உணராமல் போனதை என்னவென்பது!. ஒரு நடிகராகவும் இந்தப் படத்தில் சேரனை ரசிக்க முடியவில்லை. மேனரிசம், அழும் பாங்கு, வசன உச்சரிப்பு... எல்லாவற்றிலுமே சேரன் புதிதாய் பிறந்தாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. பத்மப்ரியாவை அழகாகக் காட்ட ரொம்பத்தான் மெனக்கெட்டிருக்கிறார்கள். அந்த அக்கறையை கொஞ்சம் திரைக்கதையிலும் காட்டியிருக்கலாம்.இளவரசு, விஜயகுமார், ஜெய்ப்பிரகாஷ் ஆகியோர் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். வேறு பாத்திரங்களே இந்தக் கதையில் இல்லை. டைட்டானிக், அவள் அப்படித்தான் இசையை மறுபடியும் வாசித்துக் காட்டியிருக்கிறார்கள் சபேஷ் முரளி. பாடல்களில் இரண்டு பரவாயில்லை ரகம். ராஜேஷ்யாதவின் காமிராவும், வைரபாலனின் கலை இயக்கமும் முதல் தரம். தான் தரும் எல்லாமே நல்ல படைப்புகள்தான்... அதை மக்களுக்கு ரசிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற பிடிவாதத்தை இயக்குநர் சேரன் தவிர்க்க வேண்டும். பாத்திரங்களின் இயல்பைத் திரித்து, தனக்கேற்ப அதைச் சிதைக்கும் நடிகர் சேரன் மாறியாக வேண்டும். காரணம், சேரன் என்ற கலைஞனுக்குள் இன்னும் பொக்கிஷமாக புதைந்து கிடக்கும் கலைப் படைப்புகள் இந்த தமிழ் சினிமாவுக்கு நிறைய தேவைப்படுகிறது!. |
முகம்
சில நட்புகள்..
அன்பு
பார்த்து வந்து விடும்
ஒரு சில நட்புகள்..
பணம்
பார்த்து வந்து விடும்
பல பல நட்புகள்..
கஷ்டம்
பார்த்து தெரிந்து விடும்
உண்மையான நட்புகள்......!!
| விஜய் அடிக்கும் அரசியல் ஸ்டண்ட் கூட வேட்டைக்காரனை ஓட வைக்கத்தான் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கும் அளவுக்கு சுமார் படங்களையே அபிரிதமான விளம்பரத்தால் சூப்பர் ஹிட்டாக்கி பலரது வயிற்றில் அமிலத்தை அள்ளி தெளித்து வருகிறது சன் பிக்சர்ஸ். இவர்கள் வாங்கிய அயன் கண்டபடி ஓடி கலெக்ஷனில் சாதனைப் படைத்தது தெரியும். இப்போது வேட்டைக்காரனையும் இவர்களே வாங்கியிருக்கிறார்கள். எப்படி விளம்பரம் செய்வார்கள் என கற்பனை செய்வதே கடினம். சன் வேட்டைக்காரனை வாங்கியதால் படம் எப்படியும் ஓடிவிடும் என்ற தெம்பு விஜய்க்கு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு ஏற்பட்டிருக்கிறதோ இல்லையோ, அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. |
மாந்திரீகமும், சூனியமும் மூடநம்பிக்கை, அது நமக்கு நடக்காத வரை... எனும் பயமுறுத்தும் உண்மையையும், தன் வினை தன்னை சுடும் எனும் பழகிய பழமொழியையும் சொல்லி வந்திருக்கும் மந்திர - தந்திர, மாயா ஜால திகில் படம்தான் பொம்மாயி.
பிரபல பில்டிங் கான்டிராக்டர் ராஜீவ்வாக ஹீரோ சுதிப். அவரது மனைவி ஆர்த்தியாக புதுமுகம் அம்ரிதா. இவர்களது ஆசை பெண் குழந்தை ரக்ஷா. இவர்களது கட்டுமான கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு தம்பதி பெரிய அளவில் ராஜீவ்வுக்கு துரோகம் செய்துவிட, அவர்களை அசிங்கப்படுத்தி வேலையை விட்டு தூக்குகிறார் ஹீரோ. பலர் முன்னிலையில் அவமானப்பட்ட ஜோடி., ஹீரோவின் ஆசை மகளுக்கு பில்லி சூனியம் வைக்கிறார்கள். அதனால் அவரது ஆசைமகள் ரக்ஷாவிற்கு உயிர் போகும் ஆபத்தான நிலை. கடவுளை நம்ப மறுக்கும் ஹீரோ, மாந்திரீகத்தையும் நம்ப மறுத்து மருத்துவத்தை நம்புகிறார். மருத்துவமும் கைவிட, ஹீரோ கடவுளை நம்பினாரா? மகளை காப்பாற்றினாரா? நயவஞ்சக ஜோடியை நசுக்கினாரா, இல்லையா? என்பதற்கு முரட்டு தொனியில் விடை சொல்கிறது மீதி கதை!
காண்ட்ராக்டர் ராஜீவ்வாக தமிழுக்கு புதுமுக நாயகர் சுதீப் பாசமான தம்பியாக பளிச்சிடுகிறார். அம்மாவாக அம்ரிதாவும் குழந்தை பாசத்தால் நம்மையும் கலங்க வைக்கின்றார். ஆவி பிடித்த பெண்ணாகவும், பிடிக்காத பெண்ணாகவும் குழந்தை ரக்ஷாவின் நடிப்பும் திகில் மிரட்டல். பெண் மதன்பாபோ? என கேட்குமளவிற்கு சிரித்தபடியே வந்து ஹீரோவின் குடும்பத்தை சிதறடிக்கப் பார்க்கும் வில்லியும், அவரது கணவர் முட்டைமுழி, மொட்டைத்தலையரும் வித்தியாச விஸ்வரூபம். வேலைக்காரி, கார் டிரைவர் உள்ளிட்ட சஸ்பென்ஸ் பாத்திரங்களுக்காகவே இயக்குனர் ராம் கோபால் வர்மாவிற்கு சபாஷ் சொல்லலாம்.
சாதாரண சுவரைக்கூட திக், திக் திகிலாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குனருக்கு, சவீதா சிங்கின் ஒளிப்பதிவும், அமர்மோஹ்லியின் இசையும், பப்பி துத்துலின் பின்னணி இசையும், சரிவிகிதத்தில் கைகொடுத்து சபாஷ் சொல்ல வைக்கின்றன. நம்ப முடியாத கதையை, தனது திரைக்கதை, இயக்கத்தின் மூலம் நம்ப வைத்திருக்கிறார் ராம்கோபால் வர்மா.
பொம்மாயி - மாயாஜால மந்திரக்காரி!

இதற்கிடையே ட்விட்டர் தளத்தில் பயர்பாக்ஸ் டவுண்லோட் செய்வதனை ஒவ்வொரு விநாடியும் கணக்கெடுத்து எத்தனை டவுண்லோட் ஏற்கனவே மேற்கொள்ளப் பட்டிருக்கிறது என்று காட்டும் வகையில் ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் ஒவ்வொரு விநாடியும் சராசரியாக 20 பேர் வரை டவுண்லோட் செய்வார்கள் என மொஸில்லா எதிர்பார்க்கிறது. இதை எழுதும் நாளில் இருந்து இரண்டொரு நாளில் இந்த 200 கோடி எண்ணிக்கை எட்டப்படும் எனத் தெரிகிறது. இந்த எண்ணிக்கை பயர்பாக்ஸ்பிரவுசரைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அல்ல என்றாலும், இந்த பிரவுசர் மீது நம்பிக்கை கொண்டு அதனைச் சோதித்துப் பார்க்க விரும்புவர்களின் விருப்பத்தினைத் தெரிவிப்பதாக அமைகிறது.
18 மாதங்களுக்கு முன் தான் (பிப்ரவரி 22, 2008) பயர்பாக்ஸ் டவுண்லோட் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் குறுகிய காலத்தில் 150 கோடிப் பேர் டவுண்லோட் செய்கிறார்கள் என்பது இந்த பிரவுசரின் தனித்தன்மைக்கு ஒரு பாராட்டு ஒப்புதல் என்று தான் கொள்ள வேண்டும்.
இந்த செய்தியினை எழுதுகையில் கிடைத்த எண்ணிக்கை தகவல் இதோ தரப்படுகிறது. தளத்தின்முகவரி, நாள், நேரம், டவுண்லோட் எண்ணிக்கை இங்கு காட்டப்படுகிறது.
http://twitter.com/FirefoxCounter 1,024,106,599 downloads at 10.9 per second on 20090823 07:24 UTC

பி.ஓ.பி.3 – போஸ்ட் ஆபீஸ் புரோடோகால் – (Post Office Protocol) இணைய இணைப்பில் இமெயில்களை நம் கம்ப்யூட்டரிலிருந்து அனுப்பவும், நமக்கு வந்துள்ள இமெயில்களை கம்ப்யூட்டருக்கே பெற்று கையாளவும் அமைக்கப்பட்ட ஒரு வழிமுறை.
ட்ராக் அண்ட் ட்ராப் (Drag and Drop) – கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் ஒரு வசதி. இதன் மூலம் திரையில் உள்ள ஒரு பொருள் அல்லது பைலை இழுத்துச் சென்று இன்னொரு இடத்தில் அமைத்துவிடலாம்.
ஹார்ட் டிஸ்க் – (Hard Disk) அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இணைக்கப் பட்டுள்ள அதிகக் கொள்ளவுத் திறன் கொண்ட டிஸ்க் டிரைவ். இதில் தான் ஆப்பரேட்டிங் சிஸ்டம், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் மற்றும் அவற்றின் மூலம் தயாரிக்கப்படும் பைல்கள் ஆகியவை பதியப்பட்டுப் பத்திரமாக வைக்கப்படுகின்றன. தேவைப்படும் போது இவற்றிலிருந்து பைல்களை எடுத்து ராம் மெமரியில் வைத்து எடிட் செய்திடலாம்.
நெட்வொர்க்: (Network) பல கம்ப்யூட்டர் களையும் பிரிண்டர்களையும் இணைந்த அமைப்பிற்கு நெட்வொர்க் என்று பெயர். இதனால் கம்ப்யூட்டரில் உள்ள தகவல் களையும் இணைக்கப்பட்டுள்ள பிரிண்டர் களையும் அனைத்து கம்ப்யூட் டர்களை இயக்குபவர் களும் பகிர்ந்து கொள்ளலாம்.
பி.எம்.பி. – பிட்மேப் (B.M.P. Bit Map என்பதன் சுருக்கம். கம்ப்யூட்டரில் ஒரு கிராபிக் இமேஜ் / படமானது பிட்மேப்களால் அமைக்கப்படுகிறது. இந்த பிட் மேப் என்பது பிக்ஸெல் அன அழைக்கப்படும் சிறிய புள்ளி களால் ஆனது. ஸ்கேன் செய்யப்பட்ட புகைப் படங்கள் மற்றும் படங்கள் இப்படித்தான் அமைகின்றன. படங்களை எடிட் செய்திடும் சாப்ட்வேர் மூலமாக ஒரு படத்தை மிகப் பெரிதாக ஸூம் செய்து பார்த்தால் இந்த புள்ளிகள் நன்றாகத் தெரிய வரும். பிட்மேப் வழி அமைந்த பட பைல்கள் பெரிய அளவில் அமையும் என்பதால் பிற வகை பட பார்மட்டுகளைப் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.
பி.டி.எப். போர்ட்டபிள் டாகுமெண்ட் பார்மட் (Portable Document Format): அடோப் நிறுவனம் வடிவமைத்த ஒரு வகை பைல் வடிவம். கிராபிக்ஸ் மற்றும் டெக்ஸ்ட் அடங்கிய பக்கங்களை அதனை உருவாக்கிய சாப்ட்வேர் தொகுப்பின்றிப் பார்ப்பதற்கு உதவி செய்வதே பி.டி.எப். பார்மட் ஆகும். அடோப் அக்ரோபட் மூலம் உருவாக்கப் பட்ட இந்த பி.டி.எப். பைல்களை இலவசமாகக் கிடைக்கும் அக்ரோபட் ரீடர் என்னும் தொகுப்பின் மூலமே பார்க்க படிக்க முடியும்.
பேண்ட்வித் (Bandwidth): இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.
பயர்வால் (Firewall): நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப் பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சி யைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.
இன்டர்நெட் டெலிபோனி (Internet Telephony): வழக்கமான டெலிபோன் இணைப் பில்லாமல் இன்டர்நெட் மூலம் தொலைபேசி தொடர்பு கொண்டு பேசும் முறைக்கு இந்த பெயர்.
பீர் டு பீர் (Peer to Peer): கம்ப்யூட்டர்களை ஒன்றுக்கொன்று நேரடியாக எந்த சர்வரின் துணையின்றி இணைக்கும் முறைக்கான பெயர்.
போர்ட் (Port): ஒரு அப்ளிகேஷன் புரோகிராமிற்கெனத் தனியாக ஒதுக்கப்பட்டு டேட்டா பரிமாறுவதற்கென உள்ள வழி.
குரோம் தரும் தீம் செட்டிங்ஸ்
கூகுள் நிறுவனம் தன் குரோம் பிரவுசருக்குப் பல புதிய தீம் காட்சிகளை வெளியிட்டுள்ளது. சாதாரண அடிப்படையில் அமைந்த காட்சிகளிலிருந்து மேம்படுத்தப்பட்ட சில காட்சிகள் வரை இதில் கிடைக்கின்றன. மொத்தம் 29 டெம்ப்ளேட்டுகள் தரப்பட்டுள் ளன. இவை அண்மையில் வெளியான குரோம் பிரவுசர் பதிப்பு 3ல் பயன்படுத்த முடியும்.
இவற்றைப் பயன்படுத்த குரோம் பிரவுசர் சென்று, பின் இதன் காலரிக்குச் செல்ல வேண்டும். இதன் முகவரி: https://tools.google. com/chrome/intl/en/themes/index.html இங்கு தீம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, கீழாக உள்ள டவுண்லோட் மேனேஜர் பேன் மூலமாக டவுண்லோட் செய்திடலாம். டவுண்லோட் செய்து முடித்தவுடன் “ணிணீஞுண” என்பதில் கிளிக் செய்திட வேண்டும். உடன் தேர்ந்தெடுத்த தீம் கொண்டு குரோம் பிரவுசர் காட்சியளிக்கும். இதில் என்ன விசேஷம் என்றால், வழக்கமான மாற்றாத டிபால்ட் தோற்றத் தினை உடனடியாக பெர்சனல் ஸ்டப் என்றுள்ள லிங்க்கில் கிளிக் செய்து பெறலாம். இவ்வாறு தேர்ந்தெ டுத்த தீம் மற்றும் டிபால்ட் தோற்றம் என மாற்றிக் கொள்வது எளிதாகும். ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தீம் அமைப்பது குரோம் செயல்பாட்டின் வேகத்தைச் சற்று குறைக்கலாம். இன்னொரு விஷயத்தையும் கூற வேண்டும். பயர்பாக்ஸ் தரும் தீம் காலரியுடன் ஒப்பிடுகையில் இது மிகச் சாதாரணம். அதன் வகைகள் அதிகமானவை; அற்புதமானவை.
நெட்ஸ்கேப் நிறுவனரின் புதிய பிரவுசர்
இன்டர்நெட் உலா வர உதவிடும் பிரவுசர்களில் முதலில் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்து வந்த பிரவுசர் நெட்ஸ்கேப் கம்யூனிகேடர் என்னும் இன்டர்நெட் பிரவுசராகும். ஆனால் 1990 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் நெட்ஸ்கேப் இருந்த இடத்தை எடுத்துக் கொண்டது. அதன்பின் வந்த பிரவுசர்களினால் நெட்ஸ்கேப் பிரவுசர் சந்தையை விட்டே ஏறத்தாழ காணமல் போன அளவிற்கு மறைந்தது.
நெட்ஸ்கேப் நிறுவனத்தை உண்டாக்கிய மார்க் ஆண்ட்ரிசன் தற்போது புதிய பிரவுசர் ஒன்றை உருவாக்கும் முயற்சியில், புதிய நிறுவனமான ராக்மெல்ட் (RockMelt) என்னும் நிறுவனத்தில் முதலீடு செய்து செயல்பட்டு வருகிறார். மைக்ரோசாப்ட்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பை எதிர்த்து பயர்பாக்ஸ் பெற்று வரும் வெற்றியே புதிய முயற்சிக்குக் காரணம் என்று இந்த துறையில் இருப்பவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராக்மெல்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய பிரவுசர் முற்றிலும் புதிய தொழில் நுட்பத்தில் புதியதொரு அனுபவத்தினை அளிக்கும் என்று ஆண்ட்ரீசன் குறிப்பிட்டுள்ளார். இன்டர்நெட் தளங்கள் வேகமாக வளர்ந்த அளவிற்கு அவற்றிற்கான பிரவுசர் வளர்ந்து, மக்களுக்கு உதவவில்லை என்றும், புதியதாக உருவாகும் பிரவுசர் இந்த குறையினைத் தீர்க்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக பிறந்த குழந்தைகள் அதிக நேரம் தூங்கும். பசி எடுக்கும் போது கண் விழித்து பால் அல்லது திரவ உணவு வகைகளை சாப்பிட்ட பின் மீண்டும் தூங்கும் இயல்பு கொண்டவை.
அதுவே ஒரு வயதானால், குழந்தைகளின் தூக்கம் குறையும். திரவ உணவு மாறி, இட்லி, பருப்பு சாதம், பிஸ்கட் போன்ற திட உணவுப் பொருட்களை குழந்தைகள் சாப்பிடத் தொடங்குகின்றன.
ஒரு வயது முதல் 3 வயது வரை அன்றாடம் பகல் நேரங்களில் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தைகள் தூங்க நேரிடும்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளானால், மதியம் பள்ளிக்கூடம் இல்லாத நேரங்களில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பர். மேலும் 12 முதல் 13 மணி நேரம் வரை தூங்கக்கூடும்.
5 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு குறைந்தது 9 மணி நேரமாவது தூங்க வேண்டியது அவசியமாகிறது.
வளர்ந்து பெரியவர்களாகி விட்டாலோ, 7 முதல் 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது.
35 வயதைக் கடந்தவர்கள் 6 மணி நேரமாவது ஆழ்ந்த நித்திரை கொள்ள வேண்டும். அப்போது தான் உடல் நலமும், மன நிலையும் சரிவர செயல்பட்டு. உரிய பணிகளை செவ்வனே செய்ய முடியும்.
மன நலத்துடன் தொடர்புடையது தூக்கம் என்றால் அது மிகவும் சரி.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் அளிக்கப்படும் மருந்து, தூக்கத்திற்கானதே.
போதிய அளவு தூக்கம் இல்லாததே பல நேரங்களில் மனோரீதியாகப் பாதிப்புக்குள்ளாக காரணமாகி விடும்.
மனோநிலை பாதிக்கப்பட்டவர்கள் சில நேரங்களில் புலம்ப நேரிடும். அப்படிப் புலம்புவர்களுக்கு தூக்கமே மிகச் சிறந்த மாற்று மருந்தாகும். எனவே தூக்கத்திற்கான மருந்துகளை, மனோதத்துவ நிபுணர்கள் அளிப்பர்.
அதன் பின்னரே அவர்களுக்கு கவுன்சலிங் எனப்படும் கலந்தாய்வை மேற்கொள்வர்.
எனவே 2, 3 மணி நேர தூக்கம் போதும் என்று எண்ணாதீர்கள். தவிர, சிலருக்கு இரவு வெகுநேரம் டி.வி. பார்க்கும் வழக்கம் இருக்கும். அதுபோன்றவர்கள் காலையில் அதிக நேரம் தூங்குவார்கள்.
பின்னர் அவசரமாக எழுந்து, அலுவலகத்திற்குத் தாமதமாகச் செல்வதையும் பார்க்கிறோம்.
முதலில் இரவில் வெகுநேரம் கண் விழிப்பதால், அவர்களின் உடல் சூடு அதிகரித்து பல்வேறு தொந்தரவுகள் ஏற்படக்கூடும்.
காலையில் தாமதமாக எழுந்திருப்பதால், சரிவர உணவருந்த முடியாமல் போகலாம். அதுவே அசிடிட்டி போன்ற உடல் பாதிப்புகளை ஏற்படுத்த காரணமாக அமைந்து விடுகிறது.
வேலைக்கு அவசரமாகவும், ஒரு டென்ஷனோடும் புறப்பட்டுச் செல்வதால், அன்றைய தினம் மேற்கொள்ள வேண்டிய சில பணிகளை மறந்து விட நேரிடுகிறது. அலுவலகத்திற்குச் சென்றாலும் டென்ஷனே நீடிக்கும். இதனால் உடல் பாதிப்படைகிறது.
எனவே தூக்கமின்மையானது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதோடு மனோநிலை பாதிப்படைய முக்கியக் காரணமாகிறது.
இரவில் போதிய அளவு தூங்குங்கள்! உடல் ஆரோக்கியமாக இருங்கள் !!
பன்றிக் காய்ச்சல் நோயை பரப்பும் எச்1என்1 வைரஸை ஆயுர்வேத மருந்துகளான அபராஜிதா தூபா, நல்லெண்ணெய் (எள் எண்ணெய்) மற்று௦ம் தூமபானா ஆகியவற்றை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக் காய்ச்சல் நோய் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நோய்க்கு இந்தியாவில் இதுவரை 103 பேர் பலியாகியுள்ளனர். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவில் 3 ஆயிரத்தை தொடவுள்ளது.
தொற்று நோயான பன்றிக் காய்ச்சலை பரப்பும் எச்1என்1 வைரஸ், காற்று மூலம் வேகமாக பரவுகிறது. இதனாலேயே இந்நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தான் தற்போது பொதுமக்கள் எங்கு சென்றாலும் முகக் கவசம் அணிந்தே வெளியே செல்வதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில், பன்றிக் காய்ச்சல் நோயை ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, பாரம்பரிய ஆயுதவேத மருந்தான 'அபாராஜிதா தூபா' பன்றிக் காய்ச்சலை பரப்பும் எச்1என்1 வைரஸை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எட்டு வகை மூலிகைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் 'அபாராஜிதா தூபா'வை நெருப்பு கனல்களில் இட்டு, அதன் புகையை வீடு, அலுவலகம் மற்றும் பள்ளி அறைகள் போன்ற நமது சுற்றுப்புற பகுதிகளில் பரவும்படி செய்ய வேண்டும். நாளொன்றுக்கு இருமுறை இப்படி புகை மூட்டம் செய்வதன் மூலம், எச்1என்1 வைரஸ் கிருமிகள் மற்றும் அம்மை நோய் கிருமிகள் போன்றவை அந்த பகுதிக்குள் நிழையாதவாறு தடுக்க முடியும் என்று உலக ஆயுர்வேத காங்கிரஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு செயலரான மருத்துவர் கீதா தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, நல்லெணெய்யும் (எள் எண்ணெய்) எச்1என்1 வைரஸை தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. எள் எண்ணெயை நமது மூக்கு துவாரத்தில் தடவினால், நாம் சுவாசிக்கும் போது மூக்கு வழியாக எச்1என்1 வைரஸ் கிருமிகள் நமது உடலுக்குள் செல்வதை இந்த எண்ணெய் தடுத்து விடுகிறது.
ஒருமுறை நமது மூக்குத் துவாரத்தில் எண்ணெய் தடவினால், குறைந்தது 4 மணி நேரமாவது பன்றிக் காய்ச்சலை பரப்பும் வைரஸ் கிருமிகள் நம்மை அண்டாது என்றும் மருத்துவர் கீதா விளக்கியுள்ளார்.
இதேபோன்று தூமபானா மருந்துப்பொருளும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயுர்வேத மருத்துவ முறையில் பன்றிக் காய்ச்சல் நோயை கட்டுப்படுத்து குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று புதுடெல்லியில் நடந்தது. 'ஆயுஸ்' துறையின் இணை செயலரோ பான்டா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான ம்ருத்துவ நிபுணர்கள் கலந்துக் கொண்டனர்.
இக்கூட்டத்தில், பன்றிக் காய்ச்சல் நோயின் 2வது கட்டத் தாக்குதலில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. எனவே, அதற்கு முன்னதாக அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தேசிய அளவில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த பணியில் அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஈடுபட வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கம்ப்யூட்டரில் வைரசை பரவச்செய்யும் 100 வெப்சைட்டுகளின் பட்டியலை, ஆஸ்திரேலிய நிறுவனம் வெளியிட்டுள்ளது.கம்ப்யூட்டரில் இன்டர்நெட்டின் பயன்பாடு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இதில், “மால்வேர்’ என்ற சாப்ட்வேர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிலர் ஆபாசக் காட்சிகளை சில வெப்சைட்டுகளில் காட்டுகின்றனர்.
இந்த வெப்சைட்டைப் பயன்படுத்தினால், கம்ப்யூட்டரில் வைரஸ் பரவி பல ஆயிரம், பயனுள்ள வெப்சைட்டுகளை பாதிப்படையச் செய்யும் அபாயம் உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் “மால்வேர்’ சாப்ட்வேர் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வெப்சைட்டுகள் பாதிப்படைந்துள்ளதாக ஆஸ்திரேலிய கம்ப்யூட்டர் வைரஸ் தடுப்பு நிறுவனமான “நார்டன் சிமென்டெக்’ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நார்டன் சிமென்டெக் நிறுவன அதிகாரி நடாலி கானர் குறிப்பிடுகையில், ” மால்வேர் சாப்ட் வேர், சில விளையாட்டு வெப்சைட்டுகள் மூலமும் வைரசை பரவச் செய்கிறது. இந்த வைரஸ் பரவுவதால் சிலருடைய தனிப்பட்ட அந்தரங்க தகவல்கள் மற்றவரின் கையில் எளிதாகக் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஆபத்துக்குரிய 100 வெப்சைட்டுகளின் பெயர்களை வெளியிட்டுள்ளோம். இந்த வெப்சைட்டுகளைப் பயன்படுத்தாமல் இருப்பதன் மூலம் வைரஸ் பரவுதல் உள்ளிட்ட பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்’ என்றார்.
செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நோக்கியா நிறுவனம் நெட்புக் தயாரிப்பில் ஈடுபடத் துவங்கியுள்ளது.
கம்ப்யூட்டரும் செல்போனும் உள்ளடக்கிய நெட்புக் சாதனங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக நோக்கியா நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரி கூறியிருந்தார்.இதன் பெயர் புக்லெட் 3G(Booklet 3G) இது விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும். Intel Atom Z530 processor,12 மணி நேர பேட்டரி லைப்,HD Display(1366 x 768 pixels),10.1-inch display with HDMI Port போன்ற சிறப்பம்சங்களுடன் இதன் எடை 1.25 Kg மட்டுமே.நோக்கியா இதனை நெட் புக் என்று ஒத்துக்கொள்ளவில்லை ஏன் என்றால் இதில் 3Gயும் உண்டு.
Wi-fi,Bluetooth,Webcam,SD Card Reader,GPS Chip,Pre installed Ovi Maps என்று கிட்டத்தட்ட எல்லா வசதிகளும் இதில் உண்டு.
புக் லெட் 3G மற்ற நெட்புக்களுக்கு எல்லாம் கடும் சவாலாக விளங்கும்.
பேஸ்புக், ட்விட்டர், மைஸ்பேஸ், பெபூ, ப்ரண்ட்ஸ்டர் மற்றும் ஹாய் 5 போன்ற சமுதாய இணைய தள நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துபவரா நீங்கள்! அப்படியானால் அண்மைக் காலத்தில் வேகமாகப் பரவி வரும் கூப் பேஸ் (Koobface) வைரஸ் குறித்து ஜாக்கிரதையாக இருங்கள்.
இந்த தளங்களின் பேரில் உங்களைத் தூண்டும் மெசேஜ் ஒன்று உங்களுக்கு இமெயில் வழியாக அனுப்பப்படுகிறது. அதில் குறிப்பிட்ட வீடியோ ஒன்றை டவுண்லோட் செய்து பார்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்ளும் தூண்டில் செய்தி ஒன்று கிடைக்கும். வீடியோவிற்கான லிங்க்கைக் கிளிக் செய்தால் யு–ட்யூப் போல தளம் ஒன்று திறக்கப்படும். அங்கே ஒரு வீடியோ காட்சி ஒன்று உள்ளதென்றும், அதனைக் காண சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றை இறக்கிக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டு அதற்கான லிங்க் கொடுக்கப்படும்.
இதற்கு யெஸ் என அழுத்தினால், உங்கள் கம்ப்யூட்டரில் உங்களுடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்பும் புரோகிராம் ஒன்று இறங்கி அமர்ந்து கொள்ளும். பின் உங்களின் யூசர் நேம், பாஸ்வேர்ட், வங்கி சார்ந்த தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு அனுப்பப்படும்.
ஏற்கனவே இந்த வைரஸ் புரோகிராம் உங்களுடைய கம்ப்யூட்டரில் மேலே சொன்ன நடவடிக்கை களினால் இருக்கிறது என்று சந்தேகப்பட்டால் உடனே இந்த கூப் பேஸ் வைரஸ் குறித்த அனைத்து வரிகளையும் ரெஜிஸ்ட்ரியிலிருந்து நீக்கவும். உங்கள் ஆண்ட்டி வைரஸை அப்டேட் செய்து கம்ப்யூட்டரை முழுமையாகச் சோதனை செய்திடவும்.
சந்திரனின் மேற்பரப்பை முப்பரிமானப் படம் பிடிக்கவும் ஆராயவும் என்று இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால், கிட்டத்தட்ட 4 பில்லியன் இந்திய ரூபாய்கள் செலவில் சந்திரனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சந்திரயான் - 1 விண்கலம் அதன் அனைத்துத் தொடர்புகளையும் பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் இழந்ததை அடுத்து அதன் ஆயுள் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு அக்டோபர் திங்களில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் இரண்டு ஆண்டுகள் ஆய்வுப் பணி தீர்மானிக்கப்பட்டு இக்கலம் சந்திரன் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் அதன் ஆயுள் ஓராண்டுக்குள்ளாகவே முடிவுக்கு வந்து விட்டது.
சந்திரயான் - 1 திட்டம் பகுதியாக என்றாலும் வெற்றி பெற்றுள்ளதாகவும் பல பெறுமதி மிக்க தரவுகளை அது சந்திரனில் இருந்து பெற்றுத் தந்திருப்பதாகவும் இத்திட்டத்துடன் சம்பந்தப்பட்ட இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் கூறியுள்ள போதும்.. பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்து (மற்றைய நாடுகளின் சந்திரனுக்கான விண்கலங்களின் பெறுமதியோடு ஒப்பிடும் போது இதன் செலவுத் தொகை குறைவாகும்.) இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதும் பூரண பலனைப் பெற முடியவில்லை என்றே பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள், வெப்பநிலை உயர்வு மற்றும் முக்கிய உணரி சம்பந்தபட்ட பிரச்சனைகள் என்று கடந்த காலங்களிலும் அதன் தொழிற்பாடு சீரற்றே இருந்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த விண்கலத்தில் இந்தியத் தயாரிப்பு பாகங்கள் 5ம் அமெரிக்க, பிரித்தானிய மற்றும் ஜேர்மனியத் தயாரிப்பு பாகங்கள் 6ம் உள்ளடக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை “டீன்-ஏஜ்’ என்கிறோம். இந்த டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம்.
இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால், பெற்றோராகிய நீங்கள், குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்தீர்களோ அதேபோல், இந்தப் பருவத்திலும் கவனிக்க வேண்டியது அவசியம்.
டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன?
* பூப்பெய்துவதில் சில குழந்தைகளுக்கு கால தாமதம் ஏற்படலாம். உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால் 16 வயது வரை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில், உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.
* சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இது எண்ணெய் பசையுள்ள தோல், ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால், இந்த வயதுப் பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர் எனவே, இதுகுறித்து, பெற்றோர்கள் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், பருக்களை கிள்ளாமல் இருக்க அறிவுறுத்துவது அவசியம்.
* அடுத்து, இளம் பெண்களுக்கு, தன் சுத்தம் பற்றி தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது மிக மிக அவசியம். நோய் தொற்று வராமல் இருப்பதற்கு சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்தும் கவனமுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும்.
* தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித்தர வேண்டும். உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால், உணர்வுப் பூர்வமாக பலவிதமான மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே, இந்த பருவத்தில் எல்லோருக்கும் இப்படித் தான் உடல் வளர்ச்சி இருக்கும். இதுகுறித்து கவலைப்பட வேண் டாம் என்பதை பெற்றோர்கள் எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம். அதோடு, வெளியிடங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் கூற வேண்டும்.
* வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின் டீன்-ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும் மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும் பாசத்தையும் மேம்படுத்தும்.
* இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்னைகளால், டீன் ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால்,ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை சரிப் படுத்துவதுடன் ஹீமோகுளோபின் அளவை 10க்கு மேல் வைத்துக் கொண்டால், படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் ஆகியவை மேம்படும்.
நீங்கள்இணையத்தில் அதிகம்வலம் வருபவரா? அதுவும் பாடல்களைஒலிக்க விட்டேஇணையத்தில்இருப்பவரா? மேற்கண்டகேள்விகளுக்கு உங்களின்பதில் “ஆம்” என்றால்உங்களுக்காகவேஇருக்கிறது ஒரு இலவசமென்பொருள். அதன்பெயர் Foxy tunes.
இது Internet Explorer, Mozilla Firefox உடன்வேலைசெய்கிறது. இதைஉங்கள் கணினியில்நிறுவிவிட்டால் உங்களதுமீடியாபிளேயரைஇணைய உலாவில்இருந்துகொண்டேஇயக்கலாம். உங்களிடம்இருக்கும் பாடல்களைஉங்களது மீடியாபிளேயரில் பாடவிடவும், பின்னர் மீடியாபிளேயரை மினிமைஸ்செய்துவிட்டு இணையஉலாவியில் இருக்கும்மூலமாகஇயக்கிக்கொள்ளலாம்.. இதை பயர்பாக்ஸில்உபயோகித்தால் யூ-டியூப்தளத்தின் playlist கூடகையாளமுடியும் என்பதுகூடுதல் சிறப்பு.
டவுன்லோட் லிங்க்
அவருக்காக சிறப்புக் காட்சி ஒன்றை சென்னை ப்ரிவியூ திரையரங்கில் ஏற்பாடு செய்திருந்தார் கலைப்புலி தாணு. படத்தை ரசித்துப் பார்த்த ரஜினி, காட்சிகளை சிறப்பாக படமாக்கியுள்ளதாகவும், நடிப்பிலும் சண்டைக் காட்சிகளிலும் விக்ரம் மிகவும் சிரத்தை எடுத்து உழைத்திருப்பதாகவும் பாராட்டினார். படத்தின் நாயகன், நாயகி, இயக்குநர் , தயாரிப்பாளர் என ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில பாராட்டினாராம் ரஜினி.ரஜினி இந்தப் படம் பார்த்த நிகழ்வை பெரிய அளவில் விளம்பரமாகப் பயன்படுத்த தயாரிப்பாளர் தாணு முடிவுசெய்துள்ளார். ரஜினி படம் பாரத்த செய்தியை மீடியாவுக்கு தெரிவிக்க தாணு முடிவு செய்த போது, ‘இப்போதுதான் கந்தசாமி பற்றிய டாக் நன்றாக உள்ளதே… இன்னும் ஓரிரு நாள் கழித்து இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல செய்தியைத் தாங்கி வந்துள்ள ஒருபடம் இன்னும் அதிக மக்களைச் சென்றடைய நானும் உதவியதாக இருக்கும்’, என்றாராம் ரஜினி. இந்தப் படம் குறித்த தனது கருத்துக்களை வீடியோ பேட்டியாகவும் வழங்கியுள்ளாராம் ரஜினி. "ரஜினி யின் இந்தப் பெருந்தன்மையை, நட்பை வாழ்நாளெல்லாம் மறக்க மாட்டேன்...", என்றார் கலைப்புலி தாணு. |
| காதல் நாயகி சந்தியா இப்போதும் அதே பட்டப் பெயருடன்தான் இருக்கிறார். காரணம், இடையில் அவர் நடித்த படங்கள் அவருக்கு பெரும் பிரேக்கைத் தராததே. தற்போது இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம், கன்னத்தில் ஆப்தரக்ஷா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறாராம். எந்த மொழிப் படங்களாக இருந்தாலும் ஒரு விஷயத்தில் மட்டும் படு தெளிவாக இருக்கிறார் சந்தியா. அது கவர்ச்சிகரமான, நீச்சல் உடைக் காட்சிகளில் நடிப்பதே இல்லை என்பதே. யாரைப் பார்த்தாலும் பிகினி உடை என்கிறார்கள். கவர்ச்சிப் போட்டி என்கிறார்கள். எனக்கு இதுகுறித்தெல்லாம் கவலையே இல்லை. நான் எல்லை மீறி நடிக்கவே மாட்டேன். குறிப்பாக நீச்சல் உடைக் காட்சிகளில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன். எனக்கெல்லாம் அந்த உடை பொருந்துமா என்றே தெரியவில்லை. இதுவரை யாரும் அப்படி நடிக்குமாறு கேட்டதில்லை. கேட்டாலும் நடிக்க மாட்டேன் என்கிறார் தெளிவாக. இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் படத்தில் வித்தியாசமான காஸ்ட்யூமில் பரதநாட்டியம் ஆடியிருக்கிறாராம் சந்தியா. எப்படி என்று கேட்டால் படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க என்கிறார் சிரித்தபடி. |
உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.
ஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த இரண்டு மென்பொருள்கள் உதவும். இந்த மென்பொருள்களை கொண்டு அழிக்கும் போது மறுபடியும் கோப்புகள் கிடைக்காதவாறு துடைத்து விடும்.
| பகல் பத்து மணி என்பது அவருக்கு பெரும்பாலும் அதிகாலைதான்! இரவெல்லாம் விழித்திருந்து பணியாற்றும் இரவு பறவையல்லவா அவர்? ஆடியோவை வெளியிட்டு பேசிய சிம்புவின் வார்த்தைகளில் அளவு கடந்த யதார்த்தம். “இந்த விழாவுக்கு போக போறேன்னு சொன்னதும் பெரிய பட விழான்னா பரவாயில்லே. ஏன் இதுபோன்ற சின்ன படத்தோட விழாக்களில் கலந்துக்கறீங்கன்னு கேட்டாரு. நான் அவரிடம், பெரிய படம்னா ஆறு மணி நேரம் ஓடுமான்னு கேட்டேன். வெற்றி படமா இருந்தாலும் சரி, தோல்விப்படமா இருந்தாலும் சரி. எல்லாமே மூணு மணி நேரம் ஓடுறதுதான். நிறைய செலவு பண்ணி எடுக்கிற படங்கள் கூட தோல்வி அடையுது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படுகிற படங்கள் ஹிட் ஆகுது. அப்படி பார்த்தா குறைந்த பட்ஜெட்டில் எடுத்து நன்றாக ஓடிய படம்தான் பெரிய படம்”பேப்பர் விளம்பரங்களில் கூட ரஜினி சார் நடிச்ச படத்திற்கும் ஒரே அளவுதான் டிசைன் பண்ண முடியும். என்னோட படங்களுக்கும் ஒரே அளவுதான் டிசைன் பண்ண முடியும். அதுக்கு மேல நினைச்சாலும் பிரிண்ட் பண்ண அனுமதியில்லை. அப்படி இருக்கும் போது நல்லா ஓடுற படங்கள்தான் பெரிய படம். இந்த ஆதிநாராயணா படமும் பெரிய ஹிட் ஆகி பெரிய படம் லிஸ்ட்டில் இடம் பிடிக்கணும் என்றார். பின்னாலேயே பேச வந்த பேரரசு, இப்போதெல்லாம் தங்கள் நடித்த படங்களுக்கான ஆடியோ வெளியீட்டு விழா, வெற்றி விழாக்களுக்கு கூட கதாநாயகிகள் வருவதில்லை. ஆனால் ஆந்திராவில் அப்படியில்லை. எல்லா விழாக்களுக்கும் ஹீரோயின்கள் வராங்க. அந்த நிலை இங்கேயும் வரணும் என்றார் கவலையோடு! இந்த விழாவில் மீராஜாஸ்மின் வரவில்லை என்பதுதான் பேரரசுவின் கவலைக்கு காரணம். |
மிஷ்கின் இயக்கத்தில் கமல்! கடந்த மாத செய்திகளில் முதலிடத்தை பிடித்தது இந்த செய்திதான். கிட்டதட்ட உறுதியான இந்த கூட்டணியில் இப்போது விரிசல் என்கிறார்கள். ஏன்? |
ஸ்விங் வோட் என்ற படத்தைதான் அங்கேங்கே திருத்தம் செய்து தமிழுக்காக உருவாக்கியிருந்தாராம் மிஷ்கின். இந்த படத்தின் கதை என்ன? பிரதமர் நிற்கும் தொகுதியில் தேர்தல் முடிந்து வோட்டு எண்ணிக்கை நடக்கிறது. விழப்போகிற ஒரே ஒரு தபால் வோட்டை வைத்துதான் பிரதமர் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலை. அந்த ஒரு வோட்டு ஒரு இராணுவ வீரனுடையது. அவனை எப்படியாவது கன்வின்ஸ் செய்து அந்த வோட்டை தானே பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமரே அவனது வீட்டுக்கு போகிறார். தனது வோட்டு வேண்டும் என்றால் நீங்கள் இந்த திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறான் இராணுவ வீரன். பிரதமர் அவன் கேட்பதையெல்லாம் செய்தாரா? மக்களுக்கு உதவுகிற அந்த திட்டங்கள் நிறைவேறியதா? இதுதான் க்ளைமாக்ஸ். முதலில் இந்த கதையை பிடித்திருப்பதாக சொல்லி நடிக்க ஒப்புக் கொண்ட கமல், அரசியல்வாதிகளுக்கு எதிரான தோற்றத்தை உருவாக்கப் போகும் இந்த கதையில் நடிப்பதா என்று பிறகு யோசித்தாராம். விளைவு? “வேற கதை இருந்தா சொல்லுங்களேன் மிஷ்கின்” என்ற பதில் வந்திருக்கிறது அவரிடமிருந்து. அதுவும் சொந்த கற்பனையாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துவிட்டாராம். இதென்னடா வம்பா போச்சு என்று தவிக்கிறார் மிஷ்கின். டிவிடி இல்லாமல் ஒரு சினிமாவை உருவாக்கணும் என்றால் நடக்கிற காரியமா? |
இந்த பஸ் சென்னை மாநகர் முழுக்க சுற்றிவர இருக்கிறது. கந்தசாமி படத்துக்கு டிக்கெட் வேண்டுவோர் இந்த பூத்திலேயே பதிவு செய்து கொள்ளலாம். இதைத் தவிர, படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலரை இந்த பூத்துக்குள்ளேயே பார்க்கலாம்.இந்த பூத் அறிமுக விழா சென்னை அபிராமி மெகா மாலில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கொடியசைத்து துவக்கி வைத்தார். படத்தில் அபிராமி ராமநாதன், இயக்குநர் சுசி கணேசன், அபிராமி மெகா மால் செயல் இயக்குநர் நல்லம்மை ராமநாதன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கந்தசாமி படத்தின் சென்னை நகர உரிமையை அபிராமி ராமநாதன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. |
மைக்ரோசாப்ட் நிறுவனம் மிகவும் சந்தோஷமாக உள்ளது. கூகுள் நிறுவனத்தின் சர்ச் இஞ்சினுக்கு எதிராகத் தயாரித்து அண்மையில் வெளியிட்ட தன்னுடைய பிங் (BING) சர்ச் இஞ்சின் உலகில் அதிக எண்ணிக்கையில் ஆட்கள் வரும் முதல் 20 இணைய தளங்களில் ஒன்றாக இடம் பிடித்துவிட்டது. அறிமுகமாகி இரண்டு மாதங்களில் இந்த இமாலய வளர்ச்சியை இந்த சர்ச் இஞ்சின் பிடித்தது அனைவரையும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் புதுக் கண்ணோட்டத்துடன் பார்க்க வைத்துள்ளது.
இணைய தளங்களையும் அவற்றை வந்து பார்த்துச் செல்லும் மக்களின் எண்ணிக்கையும் கண்காணித்து வரும் புகழ் பெற்ற அலெக்ஸா அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பிங் சர்ச் இஞ்சினுடைய முன்னோடியான விண்டோஸ் லைவ் சர்ச் இன்னும் ஐந்தாவது இடத்தைக் கொண்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த தளத்திற்கு வரும் தேடல்களெல்லாம் முழுமையாக பிங் தளத்திற்கு திருப்பிவிடப்பட இருக்கின்றன.
முதல் 20 இடத்திற்குள் பிங் வந்துவிட்ட தனாலேயே கூகுள் கலக்கமடையுமா? கூகுள் சர்ச் இஞ்சின் இன்னும் முதல் இடத்திலேயே அதிக பலத்துடன் அமர்ந்துள்ளது. இரண்டாவது இடத்தில் யாஹூவும் அதனை அடுத்து கூகுளின் இன்னொரு சொத்தான யு–ட்யூப் அமர்ந்துள்ளன. இருப்பினும் இரண்டு மாதத்தில் பிங் பெற்றுள்ள வளர்ச்சி குறிப்பிடத்தக்கதுதான்.
ஆனால் கூகுளை அசைக்க இன்னும் அது அசாத்திய வளர்ச்சியைப் பெற வேண்டும். தான் தரும் வசதிகளையும் பெருக்கிக் கொள்ள வேண்டும். மொத்தப் பயன்பாட்டில் கூகுள் இன்னும் பலரும் தொட முடியாத உயரத்தில் உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்ட்வேர்' ஸ்நோ லெபர்ட் 'வருகிற வெள்ளிக் கிழமையன்று விற்பனைக்கு வருகிறது. ஆப்பிஸ் ஆன்லைன் ஸ்டொர்ஸ் இதற்கான ஆர்டர்களை ஆன்லைனில் எடுக்க துவங்கியுள்ளது. மேக் ஓ.எஸண., எக்ஸ் வெர்சன் (10.6) ஆப்பிள் ரீட்டெய்ல் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமை செப்டம்பர் மாதத்தில் தான் அறிமுகப்படுத்துவோம் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது ஆகஸ்ட் இறுதியிலேயே இதை வெளியிடுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த வெர்சன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7ஐ அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வெளியிடுகிறது. இதற்கு முன்னர் ஆப்பிள் தனது ஆப்பரேட்டிங் சிஸ்டமை வெளியிட்டுள்ளது. ஆப்பிளின் புதிய வெர்சன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இ- மெயிலிங், காலண்டர் மற்றும் தொடர்புகள் குறித்த தகவல் ஸ்டோரேஜ் ஆகியவற்றிற்கு பேருதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆப்பிளின் இந்தி புதிய வெர்சன் ஸ்நோ லெபர்ட் இதற்கு முந்தைய வெர்சனை விட பாதி அளவு தான். இதை இன்ஸ்டால் செய்ய 1 கிகாபைட் ரேம் ஸ்டோரேஜ் கெபாசிட்டி தான் தேவைப்படுமாம். | |
| |
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று தவிக்கின்றனர். பல முறை இந்த பக்கங்களில் பைல் பாதுகாப்பு குறித்து எழுதினாலும் இந்த பைல் இழக்கும் விபத்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இழந்த பைல்களை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில, இலவச பதிப்பினையும் கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக இருக்கின்றன.அந்த வகையில் நன்றாகச் செயல்படும் டேட்டா ரெகவரி புரோகிராம் ஒன்று அண்மையில் இணையத்தில் தென்பட்டது. இதன் பெயர் ‘Raid2Raid’.
இந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளிலிருந்து பைல்களை மீட்டுத் தருகிறது. இணைத்து அறியக் கூடிய டிரைவில் உள்ள தொலைந்து போன பைல் எனில் அதனைக் கம்ப்யூட்டருடன் இணைத்து, மீட்கப்படும் பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் பதியும் படி செட் செய்யப்படுகிறது.
பிரச்சினைக் குண்டானது ஹார்ட் டிஸ்க் எனில் சம்பந்தப்பட்ட டிரைவினை ஒரு இமேஜாகவும் கொடுக்கிறது. இந்த இமேஜை எங்கேணும் பதிந்து பாதுகாக்கும் படி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடலாம். பின் இமேஜைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பைல்களைப் பெறலாம். டவுண்லோட் செய்த இந்த புரோகிராமில் டபுள் கிளிக் செய்து இதனை இயக்க வேண் டும். பின் எந்த டிரைவில் இருந்து பைல்களை ரெகவர் செய்திட வேண்டுமோ அதன் மீது டபுள் கிளிக் செய்திட வேண்டும். சில நிமிடங்களில் அந்த டிரைவில் உள்ள அனைத்து பைல்களும், மீட்கப்படக் கூடிய பைல்களின் பெயர்கள் உட்பட, காட்டப்படும்.
எந்த பைல்களை மீட்க வேண்டுமோ அவற்றின் மீது கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ‘Recover this file’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் பைல் மீண்டும் கிடைக்கும். அதற்கு முன் மீட்கப்படும் பைல் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தரவிறக்கம் செய்ய : http://www.diskinternals.com/
Web 3.0 டெக்னாலஜியாம் விரைவில் இணைய உலகை ஆளப்போகிறதாம். இதற்கு முன்னாடி அதாவது தற்போது Web 2.0 அதற்கு முன்னாடி Web 1.0 எனும் தொழில்நுட்பங்கள் இருக்கின்றனவாம், இருந்ததாம். இப்படி அள்ளி விட்டுக்கொண்டு Web 3.0 எனும் புதிய தொழில்நுட்பத்தை பற்றி கொள்கை ரீதியாக(theoritically) பேசிக்கொண்டிருக்கின்றது ஒரு கூட்டம். உண்மையில் Web 1.0, Web 2.0 என்ற தொழில்நுட்பங்கள் இருக்கின்றனவா என பார்த்தால் இவையெல்லாம் வியாபார உத்திகள் போன்றே தோன்றுகிறது. காரணம் தற்போது இணையம் பாவித்து கொண்டு இருப்பதாக சொல்லப்படும் Web 2.0 தொழில்நுட்பம் தனது தனித்துவமான இயல்புகளாலேயே அதாவது முக்கியமாக comments, feedback என்ற இரு இயல்புகளாலேயே அடையாளம் காணப்பட்டது. Web 2.0 கண்டுபிடிக்கபட்டதும் அதற்கு முன்னால் இருந்த தொழில்நுட்பம் அதாவது இணையத்தில் publishing only என்ற தொழில்நுட்பம் Web 1.0 என சொல்லப்பட்டது. எல்லாம் இணையத்தில் கொட்டிக்கிடக்கும் அல்லது கொட்டுவதற்கு தயாரக இருக்கும் பணத்துக்காகவே இந்த புதிய புதிய தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்புகள். ஒரு புதிய தொழில்நுட்பம் என்றவுடன் கையில் பெட்டியை வைத்துக்கொண்டு பலபேர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்காகவே இந்த Web 3.0.
இணையமானது இதுவரை இரு தொழில்நுட்பங்களை கண்டுள்ளது. நான் முன்பு சொன்னது போல் Web 1.0, Web 2.0 என்பன தான் அவை. இதில் Web 1.0 என்ன செய்ததென்றால் இணையத்தில் பதிக்க மட்டுமே வழி செய்தது அதாவது இணையத்தில் நீங்கள் தேடும் தகவல்கள் விதவிதமான தளங்களில் கொட்டிக்கிடக்கும் நீங்கள் அவற்றை தேடி படித்தீர்கள். அவை சரியா, தவறா என சொல்லக்கூட உங்களுக்கு வழி இருக்கவில்லை. அடுத்து வந்த Web 2.0 தொழில்நுட்பம் இந்த குறையை தீர்த்தது இப்போது நீங்கள் ஒரு தகவலை பார்த்தால் அதைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றையும் சொல்கிறீர்கள். முன்பு இருந்த Web 1.0 ல் குறிப்பிட்ட காரை வாங்க வேண்டுமென்றால் அது தொடர்பான தளங்களை தேடி தேடி அந்த கார் உங்களது தேவையை தீர்க்குமா என்று தெரியாமலேயே வாங்க வேண்டியிருக்கும், ஆனால் Web 2.0 ல் உடனே facebook, Twitter போன்ற சமூக வலைதளங்களுக்கோ அல்லது வலைப்பூக்களுக்கோ செல்கிறீர்கள் அங்கே நீங்கள் இப்படி ஒரு காரை வாங்க விரும்புவதாக சொல்கிறீர்கள் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு தேவையான அந்த காரைப் பற்றிய சகல விடயங்களையும் டீடெய்லாக சொல்வார்கள். எப்படியான இடத்தில் எவ்வளவு பெற்றோல் குடிக்கும் என்பது வரையிலான தகவல்களை தெரிந்து கொண்டு நீங்கள் காரை வாங்கலாம். Web 2.0 வின் மிக மிக லேட்டஸ்ட்டான வடிவமே இந்த Facebook போன்ற சமூகவலைத்தளங்களும் tweetter ம். இந்த வடிவங்கள் நம்மை முழுதாக வந்தடையாத. அலுத்துவிடாத நிலையிலேயே அடுத்த இணைய தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சு அடிபடுகின்றது.
Web 3.0 ல் முக்கியமான இயல்பாக சொல்லப்படுவது அதன் intelligent ஆன தேடும் முறை தான். இந்த தொழில்நுட்பத்தில் அமைந்த இணையமானது உங்களது தனிப்பட்ட உதவியாளர் போன்று உங்களின் விருப்பு வெறுப்பு அறிந்து செயல்படும். Web 1.0 ல் இணையம் ஒரு நூலகம் மாதிரி உங்களுக்கு தேவையான தகவலை நீங்களே தேடி எடுத்து கொள்ள வேண்டும். Web 2.0 ல் இணையம் உங்களது நண்பர் கூட்டம் போன்றது உங்களுக்கு தேவையான தகவலை உங்களுக்கு தேவையான வடிவத்தில் நண்பர்கள் தேடி தருவார்கள். Web 3.0 ல் இணையமே உங்களுக்கு தேவையான தகவலை தேடி எடுத்து தரும். Web 3.0 கால இணையம் SEMANTIC WEB என சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க metadata எனப்படும் தகவல்களின் தகவல்களால் ஆனது. உதாரணமாக ஒரு கைக்குட்டையை பார்க்கிறீர்கள் அது நீங்கள் உங்கள் காதலிக்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை போன்ற ஒன்று அதை பார்த்ததும் உங்களுக்கு உங்களின் காதலியின் ஞாபகம் வரலாம் உடனே நேற்று காதலிக்கு தெரியாமல் கடலை போட்ட காதலியின் நண்பியின் ஞாபகமும் வரலாம் நீங்களும் அந்த கைக்குட்டையை படமெடுத்து facebook ல் போட்டு உங்கள் காதலியின் பெயரை tag ம் பண்ணுகிறீர்கள். அதே போல்தான் இணையமும், இப்போ உங்கள் காதலி உங்களை அல்லது உங்கள் Facebook profile ஐ இணையத்தில் தேடினால் உங்கள் facebook profilம் அந்த கைக்குட்டை படமும் காதலியின் நண்பியின் facebook profile ம் முடிவாக வரலாம். உங்களுக்கு பிடித்த, தேவையான தகவல்களை மட்டுமே தந்து நேரத்தை மீதப்படுத்துவதே Web 3.0 இன் முக்கியமான நோக்கம். உங்களது தொடர்ச்சியான இணைய தேடல்களின் மூலம் இணையம் உங்களை பற்றி அறிந்துக் கொள்ளும். RSS எனப்படும் இணைய செயலி மூலமாக இப்போது உங்களுக்கு பிடித்த தளங்களில் இருந்து புதிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது இதே RSS, Web 3.0 ல் உங்களுக்கு பிடித்த தளத்தில் உங்களுக்கு பிடித்த தேவையான தகவலை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கும். உங்களது தொடர்ச்சியான இணைய தேடல் இதை சாத்தியமாக்கும்.
ஒருவரின் Search history ஐ கொண்டு அவரை பற்றியே தெரிந்து கொள்ளும் இந்த தொழில்நுட்பம் பாவனைக்கு வந்தால் எதிர்காலத்தில் திருமண பொருத்தங்கள், வேலைக்கு ஆள் தேடுதல் என்பன இணையத்திலேயே முடிந்துவிடும் அதே நேரம் நீங்கள் ஷகிலாவை பற்றி தேடியிருந்தால் அதுவும் உங்களை பற்றிய தகவலாக, நீங்கள் ஷகிலா ரசிகர் என்று தேடலில் தெரிவிக்கப்படும். முழுக்க முழுக்க Web 1.0 போன்று தகவல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சுகள் ஆரம்பித்திருக்கும் நிலையில் இப்போதே Web 4.0 க்கான குறிசொல்லல்கள் தொடங்கிவிட்டன. அதாவது Web 1.0 தகவல்களுக்கு முக்கியத்துவம் வழங்கியனிலையில் Web 2.0 ஆனது தகவல்களை சிறப்பாக பெற்றுக்கொள்ளும் web applications களுக்கு வழிசமைத்தது தற்போது Web 3.0 ஆனது தகவல்களை சிறப்பன வடிவத்தில் சேமிக்கவும் பெற்றுக்கொள்ளவும் உதவும் என சொல்லப்படும் நிலையில் Web 4.0 ஆனது தற்போது இருக்கும் Facebook, Tweetter தளங்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை தரும் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்பொது கொள்கை அளவிலேயே இருக்கும் இத்தொழில்நுட்பம் வருவதற்கு கொஞ்ச காலம் ஆகும் போலத்தான் தெரிகிறது.
செயற்கையான முறையில் மனிதன் தான் விரும்பிய வடிவில் பரம்பரை அலகுகளை வடிவமைத்து அதன் படி செயற்படக் கூடிய தானே, இனப்பெருக்கம் செய்யக் கூடிய உயிரினங்களை அல்லது உயிர்க் கலங்களை தயாரிக்கும் நிலையை மனிதன் எட்டிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கின்றனர் உயிரியல் ஆய்வாளர்கள்.
ஒரு பக்ரீரியாவின் பரம்பரை அலகுத் தொகுதியை (genome) மதுவம் (yeast) எனப்படும் ஒரு கல பங்கசுவில் செலுத்தி குறிப்பிட்ட பரம்பரை அலகுத் தொகுதியில் தேவையான மாற்றங்களைச் செய்த பின் அதனை மீண்டும் பிறிதொரு வகை பக்ரீரியாவினுள் செலுத்தி அந்த பக்ரீரியா பல்கிப் பெருகும் வகையில் தயாரித்து வெற்றி கண்ட பின் இந்தத் தகவலை உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வகையில் மனிதன் தனக்கு விரும்பிய பொருளாதார உபயோகமுள்ள பரம்பரை அலகுகளை கொண்ட பக்ரீரியா வகை அல்லது உயிர்க்கலங்களை உருவாக்கி உயிர் எரிபொருட்கள் (Biofuel) போன்ற அவசியமான உபபொருட்களை கழிவு சேதன பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஆனால் இந்த ஆராய்ச்சி வழிமுறைகள் தவறானவர்களின் கைகளுக்குப் போயின், மனித இனத்தையே அழிக்கக் கூடிய நுண்ணுயிரிகளை உருவாக்கி மனிதனின் இருப்பையே இந்த உலகில் இருந்து நிரந்தரமாகவும் அழித்து விட முடியும் என்ற பயங்கரமும் இதில் அடங்கி இருப்பதை விஞ்ஞானிகள் உணரத்தான் செய்திருக்கின்றனர். அதனால் எச்சரிக்கையோடு இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளனர்.
தற்கொலைத் தாக்குதல் பயங்கரவாதிகள் உலக அமைதிக்கு எதிரானவர்கள். இவர்களால் ஏற்படும் பெரும் இழப்புகளை நாம் அவ்வப்போது செய்தி களாக படிக்கிறோம். இதுபோன்ற தற்கொலைப் படை யினரை தடுக்க என்ன செய்யலாம் என்று உலக நாடுகள் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கும் வேளையில் மாணவர்கள் இதற்காக புதிய டிடெக்டரை வடிவமைத்து சாதனை படைத்து உள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர் நில்டன் ரென்னோ என்பவர் தலைமையில் இதை வடிவமைத்து உள்ளனர். இந்த டிடெக்டர்கள் ஏற்கனவே உள்ள மேக்னடோ மீட்டர், மெட்டல் டிடெக்டர்கள் போல செயல்படும். இதில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்றால் இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும், கையடக்க அளவு உடையது. நெகிழும் தன்மை உடைய சென்சாரை கொண்டது. இந்த சென்சார் 2 பவுண்ட் எடையே இருக்கும். வயர்லஸ் முறையில் இயங்கும் இந்த சென்சார், வெடிகுண்டுகளை மேஜை, பூ ஜாடி உள்பட எங்கு மறைத்து வைத்திருந்தாலும் எளிதில் அடையாளம் காட்டிவிடும்.
மேலும் இதை உடலில் பொருத்திக் கொண்டு இருந்தால் தற்கொலைப் படையினர், ஆயுதம் தாங்கிய எதிரிகள் அருகில் நெருங்கினாலோ, நமக்கு அருகில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தாலோ சென்சார் எச்சரிக்கை விடுக்கும். இதனால் நாம் உஷாராகிவிடலாம்.
இந்த நவீன டிடெக்டருக்கு ஐ.ஈ.டி. (இம்ப்ரோவைஸ்டு எக்ஸ்புளோசிவ் டிவைசஸ்) என்று பெயரிட்டு உள்ளனர். சமீபத்தில் நடந்த விமானப்படை கண்காட்சியில் இந்த டிடெக்டர் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறந்த கண்டுபிடிப்பாக தேர்வு செய்யப்பட்டது.
இதை உருவாக்கிய மாணவர்கள் 7 பேர். அவர்கள் 1.ஸ்டீவ் போலண்ட், 2.ஆண்ட்ரி சுபைன், 3. பிரைன் கேல், 4.கெவின் குவாங், 5.மைக்கேல் சின், 6.விட்டலி சாட்கோவிஸ்கி, 7. அஸ்வின் லாலன்ட்ரன். இவர்கள் அனைவரும் வெவ்வேறு பாடப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிடெக்டரை ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளின் போர் எல்லையில் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
விழாவில் நடிகர் விஜய், சூர்யா, சசிக்குமார், விவேக், கவுதம் மேனன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, எந்த படத்திற்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்தார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். அவர் இசையமைத்த மற்ற படங்களுக்கு பாடல்களை ஒரே நேரத்தில் அவர் கொடுத்ததில்லை. பகுதி பகுதியாக பிரித்துதான் கொடுப்பார். அவரிடமிருந்து பாடல் வரிகள் வர வர படப்பிடிப்பை நடத்துவார்கள். ஆனால் இந்த படத்திற்கு மட்டும்தான் மொத்தமாக ஒரே நேரத்தில் பாடல்களை கொடுத்தார். எங்களது அடுத்த படத்திற்கும் அவர்தான் இசையமைப்பாளர் என்றார் சந்தோஷமாக. பின்னாலேயே பேச வந்த ஹாரிஸ், “இந்த படத்திற்கு நான்கே மாதத்தில் ஆறு பாடல்களை அமைத்துக் கொடுத்தேன். அதற்கு காரணம் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஆர்க்கெஸ்ட்ராவுக்கு உடனுக்குடன் பணத்தை கொடுத்ததுதான். இப்படி எனது டென்ஷனை தயாரிப்பாளர் குறைத்ததால்தான் ட்யூனில் என்னால் கவனம் செலுத்த முடிந்தது” என்றார். சசிக்குமார் பெயரை சொல்லும் போதெல்லாம் அரங்கமே அதிரும்படி கைதட்டினார்கள் ரசிகர்கள். “பாராட்டுற மனசு வேணும். இங்கே நிறைய பேருக்கு அது இருப்பதில்லை. என்னோட சுப்ரமணியபுரம், பசங்க, நாடோடிகள் படத்தை பார்த்திட்டு உடனுக்குடன் பாராட்டுவார் சூர்யா சார். இப்படி இன்னொருவரை பாராட்டுகிற மனசு இருப்பதால்தான் அவர் மற்றவர்களால் பாராட்டுகிற அளவுக்கு உயர்கிறார்” என்றார் சசி. “வாரணம் ஆயிரம் பாடலை கேட்டுட்டு “மாப்பு... ஸாங் சூப்பர்டா” என்று மெசேஜ் அனுப்பினார் விஜய். ஸ்கிரீன்லே ஆதவன் பாடல் ஓடும் போது என்னோட டான்ஸ்சை விஜய் பார்க்கிறாருங்கிற குறுகுறுப்பு இருந்திச்சு. இந்த விழாவுக்கு வந்த அவருக்கு நன்றி” என்றார் சூர்யா. “சூர்யாவோட ஒவ்வொரு படம் வரும்போது அவரோட அசுர உழைப்பும், பிரமாண்ட வளர்ச்சியும் நல்லா தெரியுது. இந்த படம் பெரிய ஹிட் ஆகணும்” என்று வாழ்த்தினார் விஜய். முன்னதாக திரையிடப்பட்ட இரண்டு பாடல்கள் அசத்தலோ அசத்தல்! |
அதுதான் அவரோட இமேஜ். இந்த பாழாப்போன இமேஜை பள்ளம் தோண்டி புதைக்கிறதுதான் சிம்புவோட இப்போதைய தலையாய கடமையா இருக்கு. சிலம்பாட்டம் படத்திலே நான் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தேன். அதோட பாதிப்பு இப்பவும் இருக்கு. மறுநாள் காலையிலே எழுந்து கொள்ளவே முடியலே. தசைப்பிடிப்பு, நரம்பு கோளாறு என்று ஏகப்பட்ட பிரச்சனையை அந்த ஒரு மூவ்மெண்ட் பண்ணிருச்சு. இப்படி டெடிக்கேட்டிவா ஒரு வேலையை செய்யும்போது சில பிரச்சனைகள் வரதான் செய்யும். விண்ணை தாண்டி வருவாயா ஷ§ட்டிங்கிலே சொன்ன நேரத்துக்கு முன்னாடியே நின்னுருக்கேன் என்கிறார்.த்ரிஷாவுக்கும் இவருக்கும் காதல்னு எழுதி பத்திரிகையாளர்களுக்கும், அப்படி இல்லே இல்லேன்னு மறுத்து சிம்புவுக்கும் அலுத்தே போயிருக்கும். இருந்தாலும் அந்த கேள்விக்கு மறுபடியும் ஒருமுறை பதில் சொல்கிறார் சிம்பு. “எனக்கும் நயன்தாராவுக்கும் இருந்த காதலை வெளிப்படையா ஒத்துக்கிட்டேன். அது மாதிரி காதல் இருந்தா மறைக்காம ஒத்துக்கிற டைப் நான். எதுக்காக இப்போ காதல் வந்தா மறைக்கணும்? அம்மாவிடம் பொண்ணு பார்க்க சொன்னேன். ஆனா பொண்ணு இப்படிதான் இருக்கணும்னு நான் போட்ட கண்டிஷனை கேட்டு அடிக்கவே வந்திட்டாங்க” என்றார். அப்படி என்ன கேட்டாரு? “அது எதுக்கு உங்களுக்கு?” என்கிறார் பொல்லாத சிரிப்புடன். அட ஆமான்ல... |
ஒரு வரியில் படிக்கும்போது இந்தக் கதை பழக்கமான ஒன்றாகத் தெரிந்தாலும், அதை எடுத்துள்ள விதம், கதையின் பின்னணி, நிகழ்விடம், டெக்னிகல் சமாச்சாரங்கள் எல்லாமே சேர்ந்து அதை வெற்றிப் படமாக்கியிருக்கின்றன.இருப்பவனிடம் பிடுங்கி இல்லாதவனுக்குத் தரும் ராபின் ஹூட்தான் கதையின் மையப் புள்ளி. திருப்போரூர் கந்தசாமி கோயில் மரத்தில் மக்கள் தங்கள் குறைகளை, கோரிக்கைகளாக பேப்பரில் எழுதிக் கட்டி வைத்துவிட்டால் போதும், உடனே அவர்களுக்கு கேட்ட உதவி கிடைக்கும். காரணம் கோயிலில் உள்ள சாமி அல்ல... ஒரு ஆசாமி. அவர் பெயரும் கந்தசாமிதான் (விக்ரம்). சேவல் வேடமிட்ட கந்தசாமி இவர். கொஞ்ச நாளிலேயே, அந்த கிராமமும் சுற்றுப் பகுதியும் 'ப வைட்டமின்' புண்ணியத்தில் பசுமையாகிவிட, போலீசுக்கு மூக்கில் வேர்க்கிறது. 'ஏதோ கோக்கு மாக்கு நடக்குதுடோய்!' என்ற உள்ளுணர்வில், விசாரணையை ஆரம்பிக்கிறார் உள்ளூர் டிஐஜி பிரபு. அடுத்த சில காட்சிகளில் நேர்மை, புஜ பல பராக்கிரமம் கொண்ட சிபிஐ பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரி கந்தசாமி (விக்ரம்தான்... ஆனால் இரட்டை வேடமல்ல!) அறிமுகமாகிறார். நாட்டில் நிலவும் அனைத்து குற்றங்களின் அடிப்படையும் பணம், லஞ்சம்தான் என்பதை ஆணித்தரமாக நம்பும் அவர் கறுப்புப் பணத்தை வெளிக் கொணரும் முயற்சிகளில் தீவிரமாகிறார்... அதில் பெரும் பணக்கார தொழிலதிபர் ஆசிஷ் வித்யார்த்தியுடன் மோதுகிறார். அவரது 1000 கோடி கறுப்புப் பணம், அதனுடன் மெக்ஸிகோ வரை நீளும் அந்நியத் தொடர்புகளைக் கண்டுபிடிக்கிறார்.இதற்கிடையே ஆசிஷ் வித்யார்த்தியின் மகள் சுப்புலட்சுமி (ஸ்ரேயா)... தந்தைக்காக கந்தசாமியை பழிவாங்கப் புறப்படுகிறார். காதலிப்பது போல் நடிக்கத் துவங்கி காதலிக்கிறார்... எனப் போகிறது படம். கொஞ்சம் அந்நியன், கொஞ்சம் சிவாஜி என ஏற்கெனவே நாம் பார்த்துப் பழகிய அதே கதைதான். ஆனால் இந்தக் கதைக்காக விக்ரம் ரொம்பவே மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. குறிப்பாக அந்தப் பெண் வேட விக்ரமும், அவரிடம் மாட்டிக் கொள்ளும் மயில்சாமி, சார்லியும் வெடிச் சிரிப்புக்கு உத்தரவாதம். சூப்பர் ஹீரோவாக விக்ரம் கச்சிமாகப் பொருந்துகிறார். சேவல் வேடத்தில் அவர் பறக்கும் காட்சியை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். மெக்ஸிகோ சண்டைக் காட்சியில் லாஜிக் மீறல் நிகழாமல் பார்த்துக் கொண்டிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். படத்தில் இன்னொரு சிறப்பு அம்சம் தேங்காய்கடை தேனப்பனாக வரும் வடிவேலு. வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார் மனிதர். ஸ்ரேயா கிட்டத்தட்ட அரை அல்லது முக்கால் நிர்வாணத்தில்தான் வருகிறார். ஆனாலும், அதைக் கவர்ச்சி என்றோ, கிளுகிளு தோற்றம் என்றோ கூட சொல்ல முடியவில்லை. ஒரு ஆண்பிள்ளை கணக்காகவே திரிகிறார் படம் முழுக்க. உடம்பைத் தேத்துங்க அம்மணி! போலீஸ் ஆபீஸர் வேடத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் பிரபு. சுசி கணேசனும் ஒரு காட்சியில் வந்துபோகிறார். படத்தில் நம்மை மகா எரிச்சலுக்குள்ளாக்குவது தேவையற்ற நீளம். 3.15 மணிநேரப் படம் இது. நியாயமாக இரண்டு இடைவேளை விட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு காட்சியையும் இத்தனை நீளமாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லையே.அதேபோல காட்சியமைப்புகளில் எந்த சஸ்பென்ஸும் இல்லாத தன்மையை ஆரம்பத்திலிருந்தே தொடர்வதைத் தவிர்த்திருக்கலாம் சுசி கணேசன். சீட் நுனிக்கு ரசிகனை வரவழைக்கும் விறுவிறுப்புத் தன்மை இல்லாததும் ஒரு குறைதான். மற்றபடி, ஒளிப்பதிவு, ஒலித் துல்லியம், வித்தியாசமான லொக்கேஷன்கள், இசை என தொழில்நுட்ப ரீதியில் ஏ கிளாஸ் இந்தப் படம் என்றால் மிகையல்ல. தொடர்ந்து இலக்கில்லாமல் வந்து கொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் ஒரு நல்ல செய்தியோடு வந்திருக்கிற இந்த கலர்புல் 'கருத்து' கந்தசாமியை வரவேற்கலாம். கந்தசாமி - பொழுதுபோக்குக்கு உத்தரவாதம்! |
உலகையே ஆட்டிப்படைத்து வரும் பன்றிக் காய்ச்சல் (Swine flu) பற்றிய பீதி அடங்குவதற்கு முதல் பன்றிகளில் இருந்து மனிதருக்கு தொற்றிய (H1N1) வைரஸுக்கள் போன்று நாய்களில் தொற்றைக் காண்பிக்கும் நாய்க் காய்ச்சல் (Dog flu) வைரஸுக்களின் (H3N8) தாக்கம் அமெரிக்காவில் வெர்ஜினியா மாநிலத்தில் நாய்களிடையே அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸுக்களின் தொற்று மனிதர்களிடையே அவதானிக்கப்படாத போதும் தொற்றுள்ள நாய்களில் இருந்து அவற்றுடன் நெருங்கி உறவாடும் மனிதருக்கு தொற்றக் கூடிய வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன.
மேலும் இந்த வைரஸின் தொற்றுக் கண்ட நாய்களில் காய்ச்சல்,பசியின்மை, சுவாசம் சம்பந்தப்பட்ட அல்லது சளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கக் காணப்படும்.
இந்த வைரஸின் தொற்றுக்கண்டு இதுவரை ஒரு நாய் இறந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கல்லூரிக்குள்ளேயே தீவிரவாதத்தை வளர்க்கிற ஒரு குரூப்பை கையும் களவுமாக பிடிக்கிறார் சிவகிரி. அதுவும் எப்படி? தானே மாணவராக அட்மிஷன் ஆகி! அட, நல்லாருக்கே என்று நிமிர வைக்கிற மாதிரி சில காட்சிகளும் உண்டு அந்த கல்லூரி கலாட்டாவில். ஈவ் டீசிங் செய்கிற மாணவர்களை கண்டு அஞ்சி நடுங்கும் அந்த மலை மலை ஹீரோ, அவர்கள் சொல்லுவதையெல்லாம் செய்கிற போது தியேட்டரில் சிரிப்பலை. அசமஞ்சம் என்று அவர்கள் நினைத்தால் அடுத்த சீனிலேயே அதிரடி என்ட்ரி கொடுத்து வில்லன்களை வெளுக்கிற போது, பின்னணியில் “சிவகிரி சிவகிரி” என்று ஆர் ஆர் இசைத்து மிரளடித்திருக்கலாம்!
கூட இருந்தே குழி பறித்தால் பரவாயில்லை. வெடிகுண்டு, தீவிரவாதம் என்று தமிழ்நாட்டையே மிரள வைக்கிறார் வில்லன் குகன். அவர் ஏன் இப்படி ஆனார் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக். சிவகிரியின் காதல் மனைவி ருக்ஷனாவை இவரும் காதலிக்கிறார். எனக்கு கிடைக்காதவள் உனக்கும் கிடைக்கக் கூடாது என்று அவர் வில்லன் சிரிப்பு சிரிக்க, கடைசியில் சிவகிரியின் புல்லட்டில் தீவிரவாதி கம் நண்பன் அவுட்.
வெங்கல கடையில் யானை புகுந்த மாதிரி, சிவகிரியின் ஃபைட் சீன்கள் களை கட்டுகிறது. கொஞ்சம் மெனக்கட்டால் குணச்சித்திர வேடங்களில் கலக்கலாம். மூன்று கதாநாயகிகள். யாருமே நடிப்பை நம்பவில்லை என்பதை ஒவ்வொரு கோணத்திலும் உணர்த்துகிறார்கள். தலைமை ஆசிரியர் வெண்ணிறாடை மூர்த்தியும், ப்யூன் நெல்லை சிவாவும் சவசவ என்று பேசினாலும் லேசாக கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.
நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வரும் குழந்தையை கண்டு துடியாக துடிக்கும் நாத்திக அப்பா முதன் முதலாக பில்லி சூனியத்தை நம்புகிறார். அதற்கான ஸ்பெஷலிஸ்டோடு வீட்டுக்கு வந்தால், அங்கேதான் ட்விஸ்ட். இன்னும் கொஞ்ச நேரத்திலே உங்க பொண்ணு இறந்திருவா என்கிறார் அவர். அதற்குள் ஆவியிடமிருந்து பிள்ளையை காப்பாற்ற வேண்டும். எப்படி? தேடி தேடி சூனியத்தை எடுக்கிறார். கடைசியில்...? நுனி சீட்டுக்கு ரசிகனை தள்ளிவிடுகிற க்ளைமாக்ஸ்.
வழக்கமான இந்த கதையை, சொல்லியிருக்கும் விதத்தில்தான் மிரட்டல்! புதுமுக இயக்குனர் பாலகணேசாவுக்கு ஒரு 'பலே' போடுங்கப்பா...
லக்ஷணா, நிஜமாகவே லட்சணம். சற்றே அர்ச்சனாவின் சாயல். நடிப்பில் அவரையே மிஞ்சுவார் போலிருக்கிறது. தன்னை காதலிக்கும் விக்னேஷ் அதை வெளிப்படுத்த தடுமாறும்போது தானே முன் வந்து காதலை சொல்வது பேரழகு. இவருக்கும் விக்னேஷ¨க்குமான நெருக்கத்தில் நிழலை மிஞ்சிய நிஜம்.
மிகவும் பிரமிக்க வைத்திருக்கிறார்கள் சண்டை இயக்குனர் ட்ரேகன் சிங்லீயும், ஒளிப்பதிவாளர் ஆர்.பி.பாலகணேஷ§ம். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் ஃபைட், ஆங்கில படங்களுக்கு இணையானது.
கதை மிக மிக சின்ன ஒரு முடிச்சுதான்.
பத்மப்ரியாவை அழகாகக் காட்ட ரொம்பத்தான் மெனக்கெட்டிருக்கிறார்கள். அந்த அக்கறையை கொஞ்சம் திரைக்கதையிலும் காட்டியிருக்கலாம்.
படத்தை ரசித்துப் பார்த்த ரஜினி, காட்சிகளை சிறப்பாக படமாக்கியுள்ளதாகவும், நடிப்பிலும் சண்டைக் காட்சிகளிலும் விக்ரம் மிகவும் சிரத்தை எடுத்து உழைத்திருப்பதாகவும் பாராட்டினார். படத்தின் நாயகன், நாயகி, இயக்குநர் , தயாரிப்பாளர் என ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில பாராட்டினாராம் ரஜினி.
ஆறு மணி நேரம் ஓடுமான்னு கேட்டேன். வெற்றி படமா இருந்தாலும் சரி, தோல்விப்படமா இருந்தாலும் சரி. எல்லாமே மூணு மணி நேரம் ஓடுறதுதான். நிறைய செலவு பண்ணி எடுக்கிற படங்கள் கூட தோல்வி அடையுது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படுகிற படங்கள் ஹிட் ஆகுது. அப்படி பார்த்தா குறைந்த பட்ஜெட்டில் எடுத்து நன்றாக ஓடிய படம்தான் பெரிய படம்”
இந்த பஸ் சென்னை மாநகர் முழுக்க சுற்றிவர இருக்கிறது. கந்தசாமி படத்துக்கு டிக்கெட் வேண்டுவோர் இந்த பூத்திலேயே பதிவு செய்து கொள்ளலாம். இதைத் தவிர, படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலரை இந்த பூத்துக்குள்ளேயே பார்க்கலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்ட்வேர்' ஸ்நோ லெபர்ட் 'வருகிற வெள்ளிக் கிழமையன்று விற்பனைக்கு வருகிறது. ஆப்பிஸ் ஆன்லைன் ஸ்டொர்ஸ் இதற்கான ஆர்டர்களை ஆன்லைனில் எடுக்க துவங்கியுள்ளது. மேக் ஓ.எஸண., எக்ஸ் வெர்சன் (10.6) ஆப்பிள் ரீட்டெய்ல் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில் நடிகர் விஜய், சூர்யா, சசிக்குமார், விவேக், கவுதம் மேனன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
சிலம்பாட்டம் படத்திலே நான் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தேன். அதோட பாதிப்பு இப்பவும் இருக்கு. மறுநாள் காலையிலே எழுந்து கொள்ளவே முடியலே. தசைப்பிடிப்பு, நரம்பு கோளாறு என்று ஏகப்பட்ட பிரச்சனையை அந்த ஒரு மூவ்மெண்ட் பண்ணிருச்சு. இப்படி டெடிக்கேட்டிவா ஒரு வேலையை செய்யும்போது சில பிரச்சனைகள் வரதான் செய்யும். விண்ணை தாண்டி வருவாயா ஷ§ட்டிங்கிலே சொன்ன நேரத்துக்கு முன்னாடியே நின்னுருக்கேன் என்கிறார்.
நாட்டில் நிலவும் அனைத்து குற்றங்களின் அடிப்படையும் பணம், லஞ்சம்தான் என்பதை ஆணித்தரமாக நம்பும் அவர் கறுப்புப் பணத்தை வெளிக் கொணரும் முயற்சிகளில் தீவிரமாகிறார்... அதில் பெரும் பணக்கார தொழிலதிபர் ஆசிஷ் வித்யார்த்தியுடன் மோதுகிறார். அவரது 1000 கோடி கறுப்புப் பணம், அதனுடன் மெக்ஸிகோ வரை நீளும் அந்நியத் தொடர்புகளைக் கண்டுபிடிக்கிறார்.