
பி.ஓ.பி.3 – போஸ்ட் ஆபீஸ் புரோடோகால் – (Post Office Protocol) இணைய இணைப்பில் இமெயில்களை நம் கம்ப்யூட்டரிலிருந்து அனுப்பவும், நமக்கு வந்துள்ள இமெயில்களை கம்ப்யூட்டருக்கே பெற்று கையாளவும் அமைக்கப்பட்ட ஒரு வழிமுறை.
ட்ராக் அண்ட் ட்ராப் (Drag and Drop) – கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் ஒரு வசதி. இதன் மூலம் திரையில் உள்ள ஒரு பொருள் அல்லது பைலை இழுத்துச் சென்று இன்னொரு இடத்தில் அமைத்துவிடலாம்.
ஹார்ட் டிஸ்க் – (Hard Disk) அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இணைக்கப் பட்டுள்ள அதிகக் கொள்ளவுத் திறன் கொண்ட டிஸ்க் டிரைவ். இதில் தான் ஆப்பரேட்டிங் சிஸ்டம், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் மற்றும் அவற்றின் மூலம் தயாரிக்கப்படும் பைல்கள் ஆகியவை பதியப்பட்டுப் பத்திரமாக வைக்கப்படுகின்றன. தேவைப்படும் போது இவற்றிலிருந்து பைல்களை எடுத்து ராம் மெமரியில் வைத்து எடிட் செய்திடலாம்.
நெட்வொர்க்: (Network) பல கம்ப்யூட்டர் களையும் பிரிண்டர்களையும் இணைந்த அமைப்பிற்கு நெட்வொர்க் என்று பெயர். இதனால் கம்ப்யூட்டரில் உள்ள தகவல் களையும் இணைக்கப்பட்டுள்ள பிரிண்டர் களையும் அனைத்து கம்ப்யூட் டர்களை இயக்குபவர் களும் பகிர்ந்து கொள்ளலாம்.
பி.எம்.பி. – பிட்மேப் (B.M.P. Bit Map என்பதன் சுருக்கம். கம்ப்யூட்டரில் ஒரு கிராபிக் இமேஜ் / படமானது பிட்மேப்களால் அமைக்கப்படுகிறது. இந்த பிட் மேப் என்பது பிக்ஸெல் அன அழைக்கப்படும் சிறிய புள்ளி களால் ஆனது. ஸ்கேன் செய்யப்பட்ட புகைப் படங்கள் மற்றும் படங்கள் இப்படித்தான் அமைகின்றன. படங்களை எடிட் செய்திடும் சாப்ட்வேர் மூலமாக ஒரு படத்தை மிகப் பெரிதாக ஸூம் செய்து பார்த்தால் இந்த புள்ளிகள் நன்றாகத் தெரிய வரும். பிட்மேப் வழி அமைந்த பட பைல்கள் பெரிய அளவில் அமையும் என்பதால் பிற வகை பட பார்மட்டுகளைப் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.
பி.டி.எப். போர்ட்டபிள் டாகுமெண்ட் பார்மட் (Portable Document Format): அடோப் நிறுவனம் வடிவமைத்த ஒரு வகை பைல் வடிவம். கிராபிக்ஸ் மற்றும் டெக்ஸ்ட் அடங்கிய பக்கங்களை அதனை உருவாக்கிய சாப்ட்வேர் தொகுப்பின்றிப் பார்ப்பதற்கு உதவி செய்வதே பி.டி.எப். பார்மட் ஆகும். அடோப் அக்ரோபட் மூலம் உருவாக்கப் பட்ட இந்த பி.டி.எப். பைல்களை இலவசமாகக் கிடைக்கும் அக்ரோபட் ரீடர் என்னும் தொகுப்பின் மூலமே பார்க்க படிக்க முடியும்.
பேண்ட்வித் (Bandwidth): இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.
பயர்வால் (Firewall): நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப் பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சி யைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.
இன்டர்நெட் டெலிபோனி (Internet Telephony): வழக்கமான டெலிபோன் இணைப் பில்லாமல் இன்டர்நெட் மூலம் தொலைபேசி தொடர்பு கொண்டு பேசும் முறைக்கு இந்த பெயர்.
பீர் டு பீர் (Peer to Peer): கம்ப்யூட்டர்களை ஒன்றுக்கொன்று நேரடியாக எந்த சர்வரின் துணையின்றி இணைக்கும் முறைக்கான பெயர்.
போர்ட் (Port): ஒரு அப்ளிகேஷன் புரோகிராமிற்கெனத் தனியாக ஒதுக்கப்பட்டு டேட்டா பரிமாறுவதற்கென உள்ள வழி.
குரோம் தரும் தீம் செட்டிங்ஸ்
கூகுள் நிறுவனம் தன் குரோம் பிரவுசருக்குப் பல புதிய தீம் காட்சிகளை வெளியிட்டுள்ளது. சாதாரண அடிப்படையில் அமைந்த காட்சிகளிலிருந்து மேம்படுத்தப்பட்ட சில காட்சிகள் வரை இதில் கிடைக்கின்றன. மொத்தம் 29 டெம்ப்ளேட்டுகள் தரப்பட்டுள் ளன. இவை அண்மையில் வெளியான குரோம் பிரவுசர் பதிப்பு 3ல் பயன்படுத்த முடியும்.
இவற்றைப் பயன்படுத்த குரோம் பிரவுசர் சென்று, பின் இதன் காலரிக்குச் செல்ல வேண்டும். இதன் முகவரி: https://tools.google. com/chrome/intl/en/themes/index.html இங்கு தீம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, கீழாக உள்ள டவுண்லோட் மேனேஜர் பேன் மூலமாக டவுண்லோட் செய்திடலாம். டவுண்லோட் செய்து முடித்தவுடன் “ணிணீஞுண” என்பதில் கிளிக் செய்திட வேண்டும். உடன் தேர்ந்தெடுத்த தீம் கொண்டு குரோம் பிரவுசர் காட்சியளிக்கும். இதில் என்ன விசேஷம் என்றால், வழக்கமான மாற்றாத டிபால்ட் தோற்றத் தினை உடனடியாக பெர்சனல் ஸ்டப் என்றுள்ள லிங்க்கில் கிளிக் செய்து பெறலாம். இவ்வாறு தேர்ந்தெ டுத்த தீம் மற்றும் டிபால்ட் தோற்றம் என மாற்றிக் கொள்வது எளிதாகும். ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தீம் அமைப்பது குரோம் செயல்பாட்டின் வேகத்தைச் சற்று குறைக்கலாம். இன்னொரு விஷயத்தையும் கூற வேண்டும். பயர்பாக்ஸ் தரும் தீம் காலரியுடன் ஒப்பிடுகையில் இது மிகச் சாதாரணம். அதன் வகைகள் அதிகமானவை; அற்புதமானவை.
நெட்ஸ்கேப் நிறுவனரின் புதிய பிரவுசர்
இன்டர்நெட் உலா வர உதவிடும் பிரவுசர்களில் முதலில் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்து வந்த பிரவுசர் நெட்ஸ்கேப் கம்யூனிகேடர் என்னும் இன்டர்நெட் பிரவுசராகும். ஆனால் 1990 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் நெட்ஸ்கேப் இருந்த இடத்தை எடுத்துக் கொண்டது. அதன்பின் வந்த பிரவுசர்களினால் நெட்ஸ்கேப் பிரவுசர் சந்தையை விட்டே ஏறத்தாழ காணமல் போன அளவிற்கு மறைந்தது.
நெட்ஸ்கேப் நிறுவனத்தை உண்டாக்கிய மார்க் ஆண்ட்ரிசன் தற்போது புதிய பிரவுசர் ஒன்றை உருவாக்கும் முயற்சியில், புதிய நிறுவனமான ராக்மெல்ட் (RockMelt) என்னும் நிறுவனத்தில் முதலீடு செய்து செயல்பட்டு வருகிறார். மைக்ரோசாப்ட்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பை எதிர்த்து பயர்பாக்ஸ் பெற்று வரும் வெற்றியே புதிய முயற்சிக்குக் காரணம் என்று இந்த துறையில் இருப்பவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராக்மெல்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய பிரவுசர் முற்றிலும் புதிய தொழில் நுட்பத்தில் புதியதொரு அனுபவத்தினை அளிக்கும் என்று ஆண்ட்ரீசன் குறிப்பிட்டுள்ளார். இன்டர்நெட் தளங்கள் வேகமாக வளர்ந்த அளவிற்கு அவற்றிற்கான பிரவுசர் வளர்ந்து, மக்களுக்கு உதவவில்லை என்றும், புதியதாக உருவாகும் பிரவுசர் இந்த குறையினைத் தீர்க்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments