இந்தியில் வந்த பூங்க் என்ற படத்தின் தமிழாக்கமாம். டைரக்ஷன் ராம்கோபால் வர்மா என்பது கூடுதல் அதட்டல்! தன்னுடன் பிசினஸ் பார்ட்னராக இருக்கும் அஸ்வினியை அவமானப்படுத்தி விரட்டியடிக்கிறார் தொழிலதிபர் சுதீப். பிரச்சனையை பில்லி சூனிய உதவியோடு எதிர்கொள்கிறார் அஸ்வினி. எப்படி? சுதீப்பின் பெண் குழந்தை ரக்ஷாவின் கால் மண்ணை எடுத்து பில்லி சூனியம் வைக்கிறார். பள்ளிக்கு போகிற பிஞ்சு, திடீரென்று ஆண் குரலில் சிரிக்க அதிர்ந்து போகிறது ஸ்கூல். இந்த காலத்திலே கூடவா பேய் பிசாசுன்னு பேசுவீங்க. இதுக்கு பேரு என்று புரியாத சில விஷயங்களை எடுத்துவிடுகிறார்கள் மருத்துவர்கள். நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வரும் குழந்தையை கண்டு துடியாக துடிக்கும் நாத்திக அப்பா முதன் முதலாக பில்லி சூனியத்தை நம்புகிறார். அதற்கான ஸ்பெஷலிஸ்டோடு வீட்டுக்கு வந்தால், அங்கேதான் ட்விஸ்ட். இன்னும் கொஞ்ச நேரத்திலே உங்க பொண்ணு இறந்திருவா என்கிறார் அவர். அதற்குள் ஆவியிடமிருந்து பிள்ளையை காப்பாற்ற வேண்டும். எப்படி? தேடி தேடி சூனியத்தை எடுக்கிறார். கடைசியில்...? நுனி சீட்டுக்கு ரசிகனை தள்ளிவிடுகிற க்ளைமாக்ஸ். எல்லா கேரக்டர்களுமே விதிர் விதிர்த்து போகிற அளவுக்கு நடிப்பை வழங்குகிறார்கள். குறிப்பாக குழந்தை ரக்ஷா. இவளையா அந்த பாழாப்போன பேய் வாட்டி எடுக்கணும்? என்று ரசிகர்களை பரிதாப்பட வைக்கிறாள் குழந்தை. திடீரென்று காணாமல் போவதும், ஒரு சீக்கு பிடித்த காக்காய் இவளை கண்ட்ரோல் பண்ணி வைத்திருப்பதும் பகீர். அம்மா, ரொம்ப வலிக்குதும்மா என்று குழந்தை அழும் போது மனசு வலிக்கிறது. தனி அறையில் குழந்தையை படுக்க வைக்கும் மேற்கத்திய கலாச்சாரம் ஓகேதான். அதற்காக பிரச்சனைக்குள்ளான பிறகும் குழந்தையை தனி அறையில் படுக்க வைப்பதுதான் ஏறி மிதிக்கிற லாஜிக். வீட்டு வேலைக்காரியில் இருந்து, குழந்தையின் பாட்டி வரைக்கும் டெரர் எªஃக்ட் கொடுப்பதுதான் புஸ்வாண பில்டப்! இந்த பில்டப் சும்மா கிடக்கிற பொம்மைகளையும் விட்டு வைக்கவில்லை. சவீதாசிங்கின் ஒளிப்பதிவு மிரட்டல். பின்னணி இசைதான் பேய் படங்களின் பலமே. அதை சரியாக செய்திருக்கிறார் இசையமைப்பாளர் பப்பி. பொம்மாயி... ஹையோடா! |
நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வரும் குழந்தையை கண்டு துடியாக துடிக்கும் நாத்திக அப்பா முதன் முதலாக பில்லி சூனியத்தை நம்புகிறார். அதற்கான ஸ்பெஷலிஸ்டோடு வீட்டுக்கு வந்தால், அங்கேதான் ட்விஸ்ட். இன்னும் கொஞ்ச நேரத்திலே உங்க பொண்ணு இறந்திருவா என்கிறார் அவர். அதற்குள் ஆவியிடமிருந்து பிள்ளையை காப்பாற்ற வேண்டும். எப்படி? தேடி தேடி சூனியத்தை எடுக்கிறார். கடைசியில்...? நுனி சீட்டுக்கு ரசிகனை தள்ளிவிடுகிற க்ளைமாக்ஸ். 
0 comments