Content feed Comments Feed

மிஷ்கின் இயக்கத்தில் கமல்! கடந்த மாத செய்திகளில் முதலிடத்தை பிடித்தது இந்த செய்திதான். கிட்டதட்ட உறுதியான இந்த கூட்டணியில் இப்போது விரிசல் என்கிறார்கள். ஏன்?
ஸ்விங் வோட் என்ற படத்தைதான் அங்கேங்கே திருத்தம் செய்து தமிழுக்காக உருவாக்கியிருந்தாராம் மிஷ்கின். இந்த படத்தின் கதை என்ன? பிரதமர் நிற்கும் தொகுதியில் தேர்தல் முடிந்து வோட்டு எண்ணிக்கை நடக்கிறது. விழப்போகிற ஒரே ஒரு தபால் வோட்டை வைத்துதான் பிரதமர் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலை. அந்த ஒரு வோட்டு ஒரு இராணுவ வீரனுடையது. அவனை எப்படியாவது கன்வின்ஸ் செய்து அந்த வோட்டை தானே பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமரே அவனது வீட்டுக்கு போகிறார். தனது வோட்டு வேண்டும் என்றால் நீங்கள் இந்த திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறான் இராணுவ வீரன். பிரதமர் அவன் கேட்பதையெல்லாம் செய்தாரா? மக்களுக்கு உதவுகிற அந்த திட்டங்கள் நிறைவேறியதா? இதுதான் க்ளைமாக்ஸ்.

முதலில் இந்த கதையை பிடித்திருப்பதாக சொல்லி நடிக்க ஒப்புக் கொண்ட கமல், அரசியல்வாதிகளுக்கு எதிரான தோற்றத்தை உருவாக்கப் போகும் இந்த கதையில் நடிப்பதா என்று பிறகு யோசித்தாராம். விளைவு? “வேற கதை இருந்தா சொல்லுங்களேன் மிஷ்கின்” என்ற பதில் வந்திருக்கிறது அவரிடமிருந்து. அதுவும் சொந்த கற்பனையாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துவிட்டாராம். இதென்னடா வம்பா போச்சு என்று தவிக்கிறார் மிஷ்கின்.

டிவிடி இல்லாமல் ஒரு சினிமாவை உருவாக்கணும் என்றால் நடக்கிற காரியமா?

0 comments

Post a Comment

About Us