Content feed Comments Feed



'பாங்காக்கில் பரவசம்' என்று தலைப்பு வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் 'சினம்' என்று வைத்துவிட்டார்கள்.
சத்யராஜ், பூமிகா, நவ்தீப் நடித்திருக்கும் இப்புதிய படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு பாங்காக்கில் நடந்திருக்கிறது.

முப்பது நாளு எப்படி போச்சுன்னே தெரியலேங்க. அப்படி ஒரு சந்தோஷம் அங்கே. அதிலும் மசாஜ் கிளப் விடிய விடிய திறந்திருக்கும். நல்லா என்ஜாய் பண்ணினோம் என்றார் சத்யராஜ். இவரிடம் உள்ள பெரிய விஷயமே, திறந்து மனசுதான். மற்ற நடிகர்கள் மூடி மூடி சொல்கிற விஷயத்தை, படார் திடீரென்று போட்டு உடைத்துவிடுவார். தாய்லாந்து நாட்டின் சி.பி.ஐ அதிகாரியாக நடித்திருக்கிறாராம். அங்கே நடக்கும் கொலை ஒன்றை புலனாய்வு செய்து கொலையாளியை கண்டுபிடிக்கும் பெரும் பொறுப்பு இவருக்கு.

நானே புரட்சித் தலைவரு ரசிகன். அவரு பாட்டு ஒன்றை நமக்கு ரீமிக்ஸ் போட்டு கொடுத்திட்டாங்க. அவரு அளவுக்கு இல்லேன்னாலும், அவர பெயரை கெடுத்திடாதபடி ஆடியிருக்கேன் என்றார். அந்த பாடல், குடியிருந்த கோயில் படத்தில் வரும் 'ஆடலுடன் பாடலை கேட்டு...'
தெலுங்கில் சில வெற்றிப்படங்களை கொடுத்திருக்கும் அருண் பிரசாத் இப்படத்தின் இயக்குனர். எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட் அவரு! ஆனால், ஏதோ இந்த படத்திலே நடிச்சுதான் தனக்கு பேரு வரணும்ங்கிற மாதிரி அவ்வளவு அக்கறையாக நடந்துப்பார். காலையிலே ஆறு மணிக்கு ஷாட் வச்சா, நாலரை மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பி, ஒரு மணி நேரம் டிராவல் பண்ணி ஸ்பாட்டுக்கு வந்திருவார். இந்த டெடிக்கேஷன் என்னை ரொம்பவே வியக்க வைச்சுது என்றார் அருண்.

சத்யராஜின் சொந்தக்கார பையனாக இருந்தாலும், இந்த படத்தில்தான் இவருடன் சேர்ந்து முழு நீள காமெடி செய்திருக்கிறாராம் சத்யன். தன்னுடய் எந்த காமெடி நடிகர் சேர்ந்தாலும், அவரையும் சேர்த்து சுமக்கிற சாமர்த்தியசாலி சத்யராஜ். சொந்தக்கார பையனை சும்மா விட்ருவாரா?

0 comments

Post a Comment

About Us