Content feed Comments Feed



பழம் பெரும் நடிகைகள் வரிசையில் சேர்ந்துள்ள ஊர்வசி, டைரக்ஷனில் குதிக்கப் போகிறாராம்.
சமீப காலமாக முன்பு போல நடிப்பதில்லை ஊர்வசி. நிறையப் படங்களை அவர் ஒப்புக் கொள்வதில்லை. குடும்பத்தில் நிலவும் குழப்பம், கணவருடனான வழக்கு விவகாரம் உள்ளிட்டவற்றால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான வாமனன், சிவா மனசுல சக்தி ஆகியவற்றின் மூலம் மீண்டும் வெளிப்பட்டுள்ள ஊர்வசி, இப்போது மீண்டும் பழையபடி நடிக்கத் தொடங்கியுள்ளாராம்.

பேராண்மை படத்தில் அவர் முக்கிய வேடமேற்றுள்ளாராம். இந்த கேரக்டர் பேசப்படும் என்கிறார்கள்.

இந்த நிலையில், படம் இயக்கும் ஆசை வந்துள்ளதாம் ஊர்வசிக்கு. இதற்கான முன்னேற்பாடுகளில் அவர் இறங்கியுள்ளாராம்.

ஊர்வசிக்கு நடிப்பு மட்டும்தான் தெரியும் என்றில்லை. அவர் ஏற்கனவே தமிழில் பஞ்சமி என்ற தொடரைத் தயாரித்தவர். அதேபோல மலையாளத்தி்ல் ஒரு படத்தையும் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் இயக்கத்தையும் ஒரு கை பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் ஊர்வசி.

0 comments

Post a Comment

About Us