குறுந்தாடிய தடவிகிட்டு குறுகுறுன்னு ரூம்லேயே அடைஞ்சு கிடக்க, அவர் என்ன வாட்ச்மேனா? தங்கத்தை பெற்ற தங்கமான ராசாவாச்சே? |
“இனியும் பொறுக்க முடியாது. மூட்டைய கட்டு” என்று கடுப்படிக்கிறாராம் மகளிடம். யாரு என்னன்னு குழம்புறீங்கதானே? அசினோட அப்பாதான் இந்த தங்கமான ராசா.படப்பிடிப்பு எங்கே நடந்தாலும், அசினுடன் ஆஜராகிவிடும் அப்பாவின் லொள்ளு பொறுக்காமல் “இனி அப்பாவோட வர்றதுன்னா பாலிவுட்டை மறந்திரு”ன்னு அட்வைஸ் + மிரட்டல் விடுக்கிறாங்களாம் இவருடன் நடிக்கும் ஹீரோக்கள். வேற வழியில்லாமல் தனியாகதான் போகிறார் அசினும். எவ்வளவு நாளைக்குதான் ரூமில் அடைந்து கிடக்க முடியும்? “பாலிவுட்ல கொடுக்கிற சம்பளத்தை பைசா குறையாமல் கோலிவுட்லேயும், டோலிவுட்லேயும் கொடுக்க தயாராக இருக்கும் போது எதுக்காக இங்கே கிடந்து கஷ்டப்படணும்? கிளம்பு” என்கிறாராம் இந்த அப்பா. ஆனால், அவரது முடிவை தள்ளிப் போட்டதோடு தடை போடவும் முயற்சிக்கிறாராம் அசின். இதற்கிடையில் தனக்கு சொந்தமான சென்னையிலுள்ள அடுக்கு மாடி வீட்டையும் நல்ல விலைக்கு விற்க முயல்கிறாராம். கோவிச்சுட்டு போக ஒரு இடம் இருந்தாதானே கோவமே வரும்? அதனால்தான் இந்த முடிவோ? |
“இனியும் பொறுக்க முடியாது. மூட்டைய கட்டு” என்று கடுப்படிக்கிறாராம் மகளிடம். யாரு என்னன்னு குழம்புறீங்கதானே? அசினோட அப்பாதான் இந்த தங்கமான ராசா.
0 comments