ஆறுமாதத்தில் படத்தை முடிப்பதாகச் சொல்லி பூஜையைப் போட்ட ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இயக்குநர் செல்வராகவன் படத்தை வெளியிட சுமார் ஆயிரம் நாட்கள் எடுத்துக் கொள்வார் போலும். ஒரு வழியாக படத்தின் படப்பிடிப்பை முடித்து ஆடியோ ரிலீஸையும் பிரமாண்டமாக நடத்தி முடித்துவிட்டார்கள்.. அடுத்தது என்ன படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய வேலைதான் பாக்கி... விநியோகஸ்தர்களைக் கூப்பிட்டு உட்கார வைத்து படத்தின் விநியோக உரிமைக்கான தொகையை பேச ஆரம்பித்தார் தயாரிப்பாளர். ஏரியா ஒவ்வொன்றுக்கும் சில கோடிகளைக் கேட்க விநியோகஸ்தர்கள் ‘ஆ...’ என்று பிளந்த வாயை அப்படியே மூடாமல் வைத்திருக்கிறார்களாம். ‘ரஜினிகாந்த், கமல் படங்களைக் கூட இவ்வளவு தொகை கொடுத்து நாங்க வாங்கியது இல்லை... இவங்க என்னடான்ன...’ என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். தயாரிப்பு நிறுவனத்தைக் கேட்டால், ‘போட்ட பட்ஜெட்டை விட எக்கச்சக்கமாகச் செலவாகிப் போச்சு... அதனால தான் படத்தை கொஞ்சம் அதிகமான விலைக்கு வேண்டிய சூழ்நிலை ஆகிருச்சு...’ என்கிறார்கள். இதனால் ஆகஸ்ட்டில் வெளியாக வேண்டிய இந்த படம் செப்டம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. |
ஒரு வழியாக படத்தின் படப்பிடிப்பை முடித்து ஆடியோ ரிலீஸையும் பிரமாண்டமாக நடத்தி முடித்துவிட்டார்கள்.. அடுத்தது என்ன படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய வேலைதான் பாக்கி... விநியோகஸ்தர்களைக் கூப்பிட்டு உட்கார வைத்து படத்தின் விநியோக உரிமைக்கான தொகையை பேச ஆரம்பித்தார் தயாரிப்பாளர். ஏரியா ஒவ்வொன்றுக்கும் சில கோடிகளைக் கேட்க விநியோகஸ்தர்கள் ‘ஆ...’ என்று பிளந்த வாயை அப்படியே மூடாமல் வைத்திருக்கிறார்களாம். 
0 comments