Content feed Comments Feed


தமிழ் செய்தித்தாளைப் புரட்டினால் எங்குப் பார்த்தாலும் கள்ளக் காதல்... கள்ளக் காதலால் ஏற்படும் பிரச்சனைகள் இப்படித்தான் இருக்கிறது..
இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் சினிமாக்காரர்கள் சும்மா இருந்து விடுவார்களா என்ன? கள்ளக் காதலை படத்தின் தலைப்பாகவே ஆக்கி விட்டார்கள்.
இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகர்கள். ஒருவர் சிபிராஜ். மற்றொருவர் விஷால் ஹெக்டே என்கிற புதுமுகம். இவர்களுக்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகிறவர் பிரியங்கா என்கிற புதுமுகம். கள்ளக் காதலன் படத்தின் டைட்டிலுக்குக் கீழே ‘எ ஸ்வீட் பாய்சன்’ என்னும் சப்டைட்டிலையும் போட்டிருக்கிறார்கள்.
இந்தப் படத்தை ரம்யா என்பவர் இயக்குகிறார். ஏற்கனவே கள்ளக் காதல் கதையை மையமாகக் கொண்டு வெளிவந்த ‘திருட்டுப் பயலே’ படம் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து இந்த படம் வெளிவருகிறது. கலாச்சராம் சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தப் படம் மேலும் கள்ளக் காதலை அதிகரிக்குமா? இல்லை குறைக்குமா என்பது படம் வெளிவந்தால் தான் தெரியும்.

0 comments

Post a Comment

About Us