‘ஏய்’ படத்தில் இவரை வில்லனாக நடிக்க சிபாரிசு செய்தார் சரத்குமார். அதற்கு பின்பு தனது திறமையின் மூலம் ‘6.2’, ‘தொட்டிஜெயா’, ‘தகப்பன்சாமி’, ‘முருகா’ என பல படங்களில் திறமையை நிரூபித்தார் வின்சென்ட் அசோகன். இவரது முழுத் திறமையை நிரூபிக்கும் வண்ணம் ‘யோகி’ படத்தில் நடித்திருக்கிறாராம். இவர் அமீருடன் நடிக்கும் காட்சிகள் ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செய்திருக்கிறாராம். ‘அமீர் தனக்கு மிகவும் இன்ஷ்பிரேஷனாக இருந்தார்’ என்கிறார் வின்சென்ட் அசோகன். சண்டைக்காட்சிகள் மிகவும் தத்ரூபமாக அமைந்துள்ளதாம். காரணம் சண்டைக்காட்சிகள் எல்லாவற்றையும் டூப் போடாமல் படமாக்கி உள்ளார்களாம். இந்தப் படம் வந்துவிட்டால் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று சொல்லும் வின்சென்ட் அசோகன் குட்டி படத்தில் தனுஷை மிரட்டும் வில்லனாகவும் நடித்து வருகிறார். |
‘ஏய்’ படத்தில் இவரை வில்லனாக நடிக்க சிபாரிசு செய்தார் சரத்குமார். அதற்கு பின்பு தனது திறமையின் மூலம் ‘6.2’, ‘தொட்டிஜெயா’, ‘தகப்பன்சாமி’, ‘முருகா’ என பல படங்களில் திறமையை நிரூபித்தார் வின்சென்ட் அசோகன். 
0 comments