Content feed Comments Feed


கந்தசாமியில் சுசி.கணேசனின் வொர்க்கிங் ஸ்டைல் தயா‌ரிப்பாளர் தாணுக்கு பிடித்துவிட்டது. சுசி.கணேசன் இயக்கும் மேலுமொரு படத்தை தாணு தயா‌ரிக்கிறார். ஹீரோ?
அனேகமாக ஆர்யா நடிக்கலாம் என்பது சுசி.கணேசன் தரப்பிலிருந்து வந்திருக்கும் செய்தி. கந்தசாமி அதிக நாட்களை எடுத்துக் கொண்டதால் அடுத்தப் படத்தை உடனே தொடங்க திட்டமிட்டிருக்கிறார் சுசி.கணேசன். படத்தின் ஒன் லைன் ஏற்கனவே தயாராகிவிட்டது. திரைக்கதை எழுதும் பணி நடந்து வருகிறது.

படத்தின் ஒன் லைனை கேட்ட ஆர்யா கால்ஷீட் தர ஒப்புக் கொண்டிருக்கிறார். அ‌ஜித்தின் ஐம்பதாவது படத்தை சீமான் இயக்கத்தில் தயா‌ரிக்க திட்டமிட்டிருந்தார் தாணு. அதற்கான சிக்னல் தல-யிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை.

அப்படியே கிடைத்தாலும் படப்பிடிப்பு தொடங்க இன்னும் பல மாதங்களாகும். அதற்குமுன் சுசி.கணேசன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தை தயா‌ரிக்க முடிவு செய்துள்ளார். கந்தசாமியின் வெளியீட்டுக்குப் பிறகு அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

0 comments

Post a Comment

About Us