Content feed Comments Feed

'
ஹ்ருத்திக்ரோஷன் நடித்து இந்தியில் வெளியான படம் ‘க்ரிஷ்’. இந்தப் படத்தில் ஹ்ரித்திக்குக்கு ஜோடியாக ப்ரியங்கா சோப்ரா நடித்திருந்தார்.
இந்தப் படம் இந்தியில் வெளியாகி ஹிட் லிஸ்டில் இடம் பிடித்தது. தமிழில் விக்ரம் ஸ்ரேயா நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘கந்தசாமி’ படத்தின் கதை ஏறக்குறைய க்ரிஷ் படத்தின் கதையின் சாயலில் இருக்கிறதாம்.
படத்தின் சில காட்சிகளை ரஷ் பார்த்த சிலரால் இந்த விஷயம் கசிந்துள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் படத்தில் விளம்பரங்களும் க்ரிஷ் படத்திற்கு வெளியானது போலவே வெளியிடப்பட்டு வருகின்றன.
க்ரிஷ் படத்தில் பயன்படுத்துவது போன்ற முகமூடியைதான் கந்தசாமியிலும் பயன்படுத்துகிறார்கள். க்ரிஷ் கதையை சுட்டு எக்ஸ்ட்ரா கொஞ்சம் சேர்த்து தமிழ் நாட்டிற்கு தகுந்தாற் போல் கந்தசாமியை சுசிகணேசன் எடுத்திருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் ஒரு செய்தி உலா வரத்துவங்கியுள்ளது..
கந்தசாமி வெளிவந்த பின்புதான் அது க்ரிஷ் படத்திலிருந்து சுட்டதா? இல்லை சக்திமான் டிவி தொடரில் இருந்து சுடப்பட்ட கதையா என்று தெரியும்...

0 comments

Post a Comment

About Us