| ' |
| நடிகைகள் தாங்களே முன்வந்து குறைந்த பட்ச ஆடையுடன்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்கும் காலமிது. அந்த ஆடைப் புரட்சிக்கு முக்கிய காரணம் நயன்தாரா. ஆடையின் அளவு குறையக் குறைய சம்பளத்தின் அளவை உச்சத்துக்குக் கொண்டுபோனவர் அவர். குறிப்பாக பில்லா, சத்யம் போன்ற படங்களில் கவர்ச்சி ஒன்றையே பிரதானமாக நம்பினார். ஆனாலும் இப்போதைக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் இன்றி பிறமொழிப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில், பெரும் பொருட்செலவில் ராவணா எனும் படத்தை தயாரித்து இயக்கி வருகிறார் மணி ரத்னம். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ப்ரியாமணி ஏற்கெனவே நாயகிகளாக நடித்துவருகின்றனர். இறுதிக் கட்டப்படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ராவணனின் மனைவி மண்டோதரி பாத்திரத்துக்குப் பொருத்தமான ஒருவரை மணிரத்னம் தேடிவந்தார். அதற்கு நயன்தாரா பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை நடிக்கக் கேட்டுள்ளார். இதுகுறித்து நயன்தாராவிடம் மணிரத்னம் மனைவி சுஹாசினி பேசினாராம். அவரிடம், 'நான் இந்தப் படத்தில் நடிக்கத் தயார். ஆனால் மணிரத்னம் படத்தில் பெரும்பாலும் கவர்ச்சியான காட்சிகள் இருக்காது. நான் உடம்பை மூடிக் கொண்டு நடிப்பதென்றால் அதை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். எனவே அது சரியாக வருமா என்று தெரியவில்லை. எனக்கு கவர்ச்சியான காட்சிகள் இருந்தால் சம்மதம்!' என்றாராம். 'சரி, மணிரத்னத்திடம் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்!' என்று கூறியுள்ளாராம் சுஹாசினி. அக்னி நட்சத்திரம், ஆய்த எழுத்தையெல்லாம் நயன்தாரா பார்க்கவில்லை போலிருக்கிறது! |
ஆனாலும் இப்போதைக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் இன்றி பிறமொழிப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
0 comments