Content feed Comments Feed


புடிக்காத புருசனா இருந்தாலும் வடிச்சு கொட்ட வேண்டியிருக்கேன்னு வருத்தப்படுற மாதிரி, “இவய்ங்களோடதான் பழக வேண்டியிருக்கு என்ன செய்ய?” என்கிறாராம் சின்ன கலைவாணர்.
இவரு சொல்றது வேற யாரையும் இல்லே. பிரஸ் ஆளுங்களதான். ஆனாலும், “நம்ம என்ன பண்றோம்னு எட்டி பார்த்து எதுக்கு எழுதணும். சொல்றத மட்டும் எழுதட்டும். சொல்லாத விஷயத்தை தேடிப் போயி ஏன் கிளறணும்?” என்றெல்லாம் பொங்கி வெடித்தாராம் ஓரிடத்தில்.

எங்கே? எப்படி? ஏன்?

இவரு ஆபிஸ்லேதான் தங்குறாரு. வீட்டுக்கே போறதில்லேன்னு லேட்டஸ்டா சில பத்திரிகைகளில் செய்திகள் வந்தது. இதுக்கெல்லாம் பதில் சொல்லி அந்த அழுக்கை மேலும் கிளறாமல் சைலண்ட்டா இருந்திட்டாரு சி.க.வா. ஆனாலும் விடாமல் எல்லா பத்திரிகையிலேயும் இது பற்றியே செய்தி வர, நடிகர் சங்கத்துக்கே போயிட்டாராம்.

“தொடர்ந்து இப்படி செய்திகள் வருது. இப்படியெல்லாம் எழுத கூடாதுன்னு கூப்பிட்டு கண்டிக்கணும். அப்போதான் மற்றவங்களுக்கும் நல்லது. இன்னைக்கு நான். நாளைக்கு நீங்க”ன்னு ஆளு சேர்த்து ஆப்பு ரெடி பண்ணினாராம். ஆனால், “இதையெல்லாம் ஏன் சங்கத்துக்கு எடுத்திட்டு வர்றீங்க? அது உங்க தனிப்பட்ட விஷயம். தப்புன்னு நினைச்சீங்கன்னா சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆபிசுக்கே நேரா போயி விளக்கம் கொடுங்க. நாங்க ஒன்ணும் செய்யுறதுக்கு இல்லே”ன்னு சொல்லிட்டாங்களாம்.

புண்ணுக்கு மருந்து தடவுவாங்கன்னு போனா, மேலும் புண்ணாக்கி அனுப்பிட்டாங்களேன்னு வருத்தப்படுது சி.க கோஷ்டி!

0 comments

Post a Comment

About Us