Content feed Comments Feed


அனுஷ்கா, நயன், த்ரிஷ், இலியானா ஏரியாக்களில் 16 ரிக்டர் அளவுக்கு பூகம்பம்! தெலுங்கு ஃபீல்டை கலக்கியடிக்குது ‘காஜல் சுனாமி’ என்கிறார்கள்.
பாரதிராஜாவின் பொம்மலாட்டத்தில் அறிமுகமாகி, பழனியில் பரத்துடன் கடலை போட்டு, மோதி விளையாடு படத்தில் முழுமை பெற்றார் காஜல் அகர்வால். கொய்யாப்பழ கன்னமும், கோதுமை அல்வா இனிப்புமாக இப்படி ஒரு ஹீரோயினா என்று ஜொள்ளாபிஷேகம் நடத்தினார்கள் ரசிகர்களும். இனிமேல் மார்க்கெட் பிச்சுக்கும் என்று விமர்சனங்களில் ஆரூடம் கூறியது பத்திரிகை வட்டாரம். இவர்களின் பேனாவுக்கு சர்க்கரைதான் போட

சிரஞ்சீவியின் மகன் சரண் தேஜாவுடன் இவர் நடித்த மஹ தீரா என்ற படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது. அந்த ஊரில் கோடி கோடியாக அள்ளி குவித்த அருந்ததியின் கலெக்ஷனை மஹதீரா முந்தும் என்கிறார்கள். இதுவும் அருந்ததி மாதிரியே மறுபிறவி கதைதான்.

அங்குள்ள பத்திரிகைகள் சரண் தேஜாவை புகழ்வதைவிட, காஜல் அகர்வாலைதான் கட்டம் கட்டி கலக்குகிறார்களாம். ஏற்கனவே எண்பது லட்சம் கேட்டு மிரட்டி வந்த காஜல், இனி அனுஷ்காவை தாண்டுவார் என்கிறார்கள். இவரே இப்படின்னா அவரு எவ்ளோ கேட்கிறாராம்? சுமார் ரெண்டு கோடியாம்.

வரவர ரூவாய்க்கு மதிப்பு கொறஞ்சு போச்சா? இல்லே, இவங்களுக்குதான் மதிப்பு ஏறிப்போச்சா? என்னவோ போங்கப்பா...
வேண்டும். தெலுங்கை பொறுத்தவரை காஜல்தான் இப்போ, உசத்தியோ உசத்தி.

0 comments

Post a Comment

About Us