| அழகிய தீயே, மொழி, அபியும் நானும் என ராதாமோகன் இயக்கிய மூன்று படங்களும் அவரைப் போல மென்மையானவை. ராதாமோகன் படமென்றால் எப்படி இருக்கும் என படம் பார்க்கும் பாதி பேர் ஏகதேசமாக சொல்லிவிடுவார்கள். ஒரு கிரியேட்டராக இது ராதாமோகனுக்கு பின்னடைவு. இந்த இமேஜிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அடுத்து ஆக்சன் படமொன்றை இயக்குகிறார். இந்த முடிவின் காரணமாக இந்தியில் இயக்குவதாக இருந்த மொழி படத்தின் ரீமேக்கையும் அவர் தள்ளி வைத்திருப்பதாக கூறுகிறார்கள். ராதாமோகன் இயக்கிய மூன்று படங்களையும் பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் தயாரித்தது. நான்காவதாக தயாராகயிருக்கும் ஆக்சன் படத்தையும் டூயட் மூவிஸே தயாரிக்கிறது. ஆக்சன் படம் என்றதும் வழக்கமான பறந்து பறந்து அடிக்கும் பைத்தியக்காரத்தனம் இதிலும் இருக்குமா என கேட்கத் தோன்றும். கவலை வேண்டாம். எகிறி அடிப்பது, தொண்டை நரம்பு தெறிக்க பன்ச் டயலாக் பேசுவது போன்ற எதுவும் இந்தப் படத்தில் இருக்காது. உத்தரவாதம் தருகிறார் ராதாமோகன். டூயட் மூவிஸ் அலுவலகத்தில் ஸ்கிரிப்ட் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. |

0 comments