Content feed Comments Feed



‘அயன்’ வெற்றிக்குப் பிறகு அந்தப் படத்தை இந்தியில் வாங்கிய தயாரிப்பாளர் கே.வி. ஆனந்திடமே அந்தப் படத்தை இயக்கித் தருமாறு கேட்டார்.
ஆனால் கே.வி. ஆனந்த் மறுத்துவிட்டார். இந்தியில் தயாராகும் இந்தப் படத்தில் சல்மான்கான் ஹீரோவாக நடிக்கிறார். கே.வி. ஆனந்த் சூர்யாவை வைத்து அடுத்த படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு இசை ஹரிஸ் ஜெயராஜ்தான். படத்திற்கு டைட்டில் இன்னும் வைக்கவில்லை. கதாநாயகியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அல்லு அரவிந்த் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரியில் துவங்கும் என்று தெரிகிறது.
அயன் படத்தின் வெற்றிக்கு பிறகு கே.வி. ஆனந்த் இயக்கும் படம் என்பதால் அயனை விட இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற தனிக்கவனத்தில் கே.வி. ஆனந்த் டீம் திரைக்கதை உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறது.

0 comments

Post a Comment

About Us