விண்டோஸ் 7 குறித்த தகவல்கள் நிறைய வரத்தொடங்கிவிட்டன. ஒவ்வொருவரும் அதுகுறித்த செய்திகளைப் படித்தவுடன்விண்டோஸ் 7 தொகுப் பினைப் பயன்படுத்திப்பார்த்துவிட வேண் டியதுதான் என்ற முடிவிற்குவந்துள்ளனர். ஆனால் தங்களின் கம்ப்யூட்டரில்விண் டோஸ் 7 தொகுப்பினைப் பதிந்து இயக்கமுடியுமா என்ற சந்தேகம் அனைவருக்கும்உள்ளது.உங்கள் கம்ப்யூட்டரில் விஸ்டா தொகுப் பினைப் பதிந்து இயக்கிக் கொண்டிருந்தால் நிச்சயம் அதில் விண்டோஸ் 7 ஆப் பரேட்டிங் சிஸ்டத்தை பதிந்து இயக்கலாம்.
வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வைத் திருப்பவர்களுக்கென மைக்ரோசாப்ட் நிறு வனம் விண்டோஸ் 7 அப்கிரேட் அட் வைசர் ஒன்றைத் தந்துள்ளது.

இந்த அப்கிரேட் அட்வைசரை டவுண் லோட் செய்து இயக்கினால் அது உங்கள் கம்ப்யூட்டரின் அனைத்து பாகங்களையும் ஆய்வு செய்து விண்டோஸ் 7 பதிக்க முடியுமா என்பதற்கான அறிவுரையை வழங் கும். பிரச்சினைகள் இருந்தால் அவற்றைத் தீர்ப்பதற்கான தீர்வுகளும் தரப்படுகின்றன. எப்படி விண்டோஸ் 7 தொகுப்பிற்கு அப்கிரேட் செய்திடலாம் என்றும் ஆலோசனை தரப்படும்.

0 comments