Content feed Comments Feed

lankasri.comபொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை “டீன்-ஏஜ்’ என்கிறோம். இந்த டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம்.

இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால், பெற்றோராகிய நீங்கள், குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்தீர்களோ அதேபோல், இந்தப் பருவத்திலும் கவனிக்க வேண்டியது அவசியம்.

டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன?

* பூப்பெய்துவதில் சில குழந்தைகளுக்கு கால தாமதம் ஏற்படலாம். உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால் 16 வயது வரை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில், உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.

* சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இது எண்ணெய் பசையுள்ள தோல், ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால், இந்த வயதுப் பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர் எனவே, இதுகுறித்து, பெற்றோர்கள் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், பருக்களை கிள்ளாமல் இருக்க அறிவுறுத்துவது அவசியம்.

* அடுத்து, இளம் பெண்களுக்கு, தன் சுத்தம் பற்றி தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது மிக மிக அவசியம். நோய் தொற்று வராமல் இருப்பதற்கு சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்தும் கவனமுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும்.

* தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித்தர வேண்டும். உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால், உணர்வுப் பூர்வமாக பலவிதமான மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

எனவே, இந்த பருவத்தில் எல்லோருக்கும் இப்படித் தான் உடல் வளர்ச்சி இருக்கும். இதுகுறித்து கவலைப்பட வேண் டாம் என்பதை பெற்றோர்கள் எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம். அதோடு, வெளியிடங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் கூற வேண்டும்.

* வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின் டீன்-ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும் மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும் பாசத்தையும் மேம்படுத்தும்.

* இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்னைகளால், டீன் ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால்,ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை சரிப் படுத்துவதுடன் ஹீமோகுளோபின் அளவை 10க்கு மேல் வைத்துக் கொண்டால், படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் ஆகியவை மேம்படும்.

lankasri.comநீங்கள்இணையத்தில் அதிகம்வலம் வருபவரா? அதுவும் பாடல்களைஒலிக்க விட்டேஇணையத்தில்இருப்பவரா? மேற்கண்டகேள்விகளுக்கு உங்களின்பதில் “ஆம்” என்றால்உங்களுக்காகவேஇருக்கிறது ஒரு இலவசமென்பொருள். அதன்பெயர் Foxy tunes.

இது Internet Explorer, Mozilla Firefox உடன்வேலைசெய்கிறது. இதைஉங்கள் கணினியில்நிறுவிவிட்டால் உங்களதுமீடியாபிளேயரைஇணைய உலாவில்இருந்துகொண்டேஇயக்கலாம். உங்களிடம்இருக்கும் பாடல்களைஉங்களது மீடியாபிளேயரில் பாடவிடவும், பின்னர் மீடியாபிளேயரை மினிமைஸ்செய்துவிட்டு இணையஉலாவியில் இருக்கும்மூலமாகஇயக்கிக்கொள்ளலாம்.. இதை பயர்பாக்ஸில்உபயோகித்தால் யூ‍‍-டியூப்தளத்தின் playlist கூடகையாளமுடியும் என்பதுகூடுதல் சிறப்பு.

lankasri.com

டவுன்லோட் லிங்க்
‌


கலைப்புலி தாணு தயாரிப்பில் விக்ரம் நடித்து வெளியாகியுள்ள கந்தசாமி படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்து ரசித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அவருக்காக சிறப்புக் காட்சி ஒன்றை சென்னை ப்ரிவியூ திரையரங்கில் ஏற்பாடு செய்திருந்தார் கலைப்புலி தாணு.

படத்தை ரசித்துப் பார்த்த ரஜினி, காட்சிகளை சிறப்பாக படமாக்கியுள்ளதாகவும், நடிப்பிலும் சண்டைக் காட்சிகளிலும் விக்ரம் மிகவும் சிரத்தை எடுத்து உழைத்திருப்பதாகவும் பாராட்டினார். படத்தின் நாயகன், நாயகி, இயக்குநர் , தயாரிப்பாளர் என ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில பாராட்டினாராம் ரஜினி.

ரஜினி இந்தப் படம் பார்த்த நிகழ்வை பெரிய அளவில் விளம்பரமாகப் பயன்படுத்த தயாரிப்பாளர் தாணு முடிவுசெய்துள்ளார்.

ரஜினி படம் பாரத்த செய்தியை மீடியாவுக்கு தெரிவிக்க தாணு முடிவு செய்த போது, ‘இப்போதுதான் கந்தசாமி பற்றிய டாக் நன்றாக உள்ளதே… இன்னும் ஓரிரு நாள் கழித்து இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல செய்தியைத் தாங்கி வந்துள்ள ஒருபடம் இன்னும் அதிக மக்களைச் சென்றடைய நானும் உதவியதாக இருக்கும்’, என்றாராம் ரஜினி. இந்தப் படம் குறித்த தனது கருத்துக்களை வீடியோ பேட்டியாகவும் வழங்கியுள்ளாராம் ரஜினி.

"ரஜினி யின் இந்தப் பெருந்தன்மையை, நட்பை வாழ்நாளெல்லாம் மறக்க மாட்டேன்...", என்றார் கலைப்புலி தாணு.


யாரைப் பார்த்தாலும் பிகினி, பிகினி என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு வேண்டாமப்பா இந்த நீச்சலுடைக் காட்சிகள் என்று கூறுகிறார் சந்தியா.
காதல் நாயகி சந்தியா இப்போதும் அதே பட்டப் பெயருடன்தான் இருக்கிறார். காரணம், இடையில் அவர் நடித்த படங்கள் அவருக்கு பெரும் பிரேக்கைத் தராததே.

தற்போது இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம், கன்னத்தில் ஆப்தரக்ஷா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறாராம்.

எந்த மொழிப் படங்களாக இருந்தாலும் ஒரு விஷயத்தில் மட்டும் படு தெளிவாக இருக்கிறார் சந்தியா. அது கவர்ச்சிகரமான, நீச்சல் உடைக் காட்சிகளில் நடிப்பதே இல்லை என்பதே.

யாரைப் பார்த்தாலும் பிகினி உடை என்கிறார்கள். கவர்ச்சிப் போட்டி என்கிறார்கள். எனக்கு இதுகுறித்தெல்லாம் கவலையே இல்லை. நான் எல்லை மீறி நடிக்கவே மாட்டேன். குறிப்பாக நீச்சல் உடைக் காட்சிகளில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன்.

எனக்கெல்லாம் அந்த உடை பொருந்துமா என்றே தெரியவில்லை. இதுவரை யாரும் அப்படி நடிக்குமாறு கேட்டதில்லை. கேட்டாலும் நடிக்க மாட்டேன் என்கிறார் தெளிவாக.

இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் படத்தில் வித்தியாசமான காஸ்ட்யூமில் பரதநாட்டியம் ஆடியிருக்கிறாராம் சந்தியா. எப்படி என்று கேட்டால் படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க என்கிறார் சிரித்தபடி.

உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.

ஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த இரண்டு மென்பொருள்கள் உதவும். இந்த மென்பொருள்களை கொண்டு அழிக்கும் போது மறுபடியும் கோப்புகள் கிடைக்காதவாறு துடைத்து விடும்.

மீராஜாஸ்மின் கதாநாயகியாக நடித்த ஆதிநாராயணா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஒரு ஆச்சர்யம். காலை பத்து மணிக்கெல்லாம் மேடையில் ஆஜராகியிருந்தார் சிம்பு.
பகல் பத்து மணி என்பது அவருக்கு பெரும்பாலும் அதிகாலைதான்! இரவெல்லாம் விழித்திருந்து பணியாற்றும் இரவு பறவையல்லவா அவர்?

ஆடியோவை வெளியிட்டு பேசிய சிம்புவின் வார்த்தைகளில் அளவு கடந்த யதார்த்தம். “இந்த விழாவுக்கு போக போறேன்னு சொன்னதும் பெரிய பட விழான்னா பரவாயில்லே. ஏன் இதுபோன்ற சின்ன படத்தோட விழாக்களில் கலந்துக்கறீங்கன்னு கேட்டாரு. நான் அவரிடம், பெரிய படம்னா ஆறு மணி நேரம் ஓடுமான்னு கேட்டேன். வெற்றி படமா இருந்தாலும் சரி, தோல்விப்படமா இருந்தாலும் சரி. எல்லாமே மூணு மணி நேரம் ஓடுறதுதான். நிறைய செலவு பண்ணி எடுக்கிற படங்கள் கூட தோல்வி அடையுது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படுகிற படங்கள் ஹிட் ஆகுது. அப்படி பார்த்தா குறைந்த பட்ஜெட்டில் எடுத்து நன்றாக ஓடிய படம்தான் பெரிய படம்”

பேப்பர் விளம்பரங்களில் கூட ரஜினி சார் நடிச்ச படத்திற்கும் ஒரே அளவுதான் டிசைன் பண்ண முடியும். என்னோட படங்களுக்கும் ஒரே அளவுதான் டிசைன் பண்ண முடியும். அதுக்கு மேல நினைச்சாலும் பிரிண்ட் பண்ண அனுமதியில்லை. அப்படி இருக்கும் போது நல்லா ஓடுற படங்கள்தான் பெரிய படம். இந்த ஆதிநாராயணா படமும் பெரிய ஹிட் ஆகி பெரிய படம் லிஸ்ட்டில் இடம் பிடிக்கணும் என்றார்.

பின்னாலேயே பேச வந்த பேரரசு, இப்போதெல்லாம் தங்கள் நடித்த படங்களுக்கான ஆடியோ வெளியீட்டு விழா, வெற்றி விழாக்களுக்கு கூட கதாநாயகிகள் வருவதில்லை. ஆனால் ஆந்திராவில் அப்படியில்லை. எல்லா விழாக்களுக்கும் ஹீரோயின்கள் வராங்க. அந்த நிலை இங்கேயும் வரணும் என்றார் கவலையோடு! இந்த விழாவில் மீராஜாஸ்மின் வரவில்லை என்பதுதான் பேரரசுவின் கவலைக்கு காரணம்.

மிஷ்கின் இயக்கத்தில் கமல்! கடந்த மாத செய்திகளில் முதலிடத்தை பிடித்தது இந்த செய்திதான். கிட்டதட்ட உறுதியான இந்த கூட்டணியில் இப்போது விரிசல் என்கிறார்கள். ஏன்?
ஸ்விங் வோட் என்ற படத்தைதான் அங்கேங்கே திருத்தம் செய்து தமிழுக்காக உருவாக்கியிருந்தாராம் மிஷ்கின். இந்த படத்தின் கதை என்ன? பிரதமர் நிற்கும் தொகுதியில் தேர்தல் முடிந்து வோட்டு எண்ணிக்கை நடக்கிறது. விழப்போகிற ஒரே ஒரு தபால் வோட்டை வைத்துதான் பிரதமர் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலை. அந்த ஒரு வோட்டு ஒரு இராணுவ வீரனுடையது. அவனை எப்படியாவது கன்வின்ஸ் செய்து அந்த வோட்டை தானே பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமரே அவனது வீட்டுக்கு போகிறார். தனது வோட்டு வேண்டும் என்றால் நீங்கள் இந்த திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறான் இராணுவ வீரன். பிரதமர் அவன் கேட்பதையெல்லாம் செய்தாரா? மக்களுக்கு உதவுகிற அந்த திட்டங்கள் நிறைவேறியதா? இதுதான் க்ளைமாக்ஸ்.

முதலில் இந்த கதையை பிடித்திருப்பதாக சொல்லி நடிக்க ஒப்புக் கொண்ட கமல், அரசியல்வாதிகளுக்கு எதிரான தோற்றத்தை உருவாக்கப் போகும் இந்த கதையில் நடிப்பதா என்று பிறகு யோசித்தாராம். விளைவு? “வேற கதை இருந்தா சொல்லுங்களேன் மிஷ்கின்” என்ற பதில் வந்திருக்கிறது அவரிடமிருந்து. அதுவும் சொந்த கற்பனையாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துவிட்டாராம். இதென்னடா வம்பா போச்சு என்று தவிக்கிறார் மிஷ்கின்.

டிவிடி இல்லாமல் ஒரு சினிமாவை உருவாக்கணும் என்றால் நடக்கிற காரியமா?


இந்தியாவிலேயே முதல் முறையாக கந்தசாமி படத்துக்காக 'மொபைல் டிக்கெட் பூத்' நேற்று சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த பஸ் சென்னை மாநகர் முழுக்க சுற்றிவர இருக்கிறது. கந்தசாமி படத்துக்கு டிக்கெட் வேண்டுவோர் இந்த பூத்திலேயே பதிவு செய்து கொள்ளலாம். இதைத் தவிர, படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலரை இந்த பூத்துக்குள்ளேயே பார்க்கலாம்.

இந்த பூத் அறிமுக விழா சென்னை அபிராமி மெகா மாலில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கொடியசைத்து துவக்கி வைத்தார். படத்தில் அபிராமி ராமநாதன், இயக்குநர் சுசி கணேசன், அபிராமி மெகா மால் செயல் இயக்குநர் நல்லம்மை ராமநாதன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கந்தசாமி படத்தின் சென்னை நகர உரிமையை அபிராமி ராமநாதன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

lankasri.comமைக்ரோசாப்ட் நிறுவனம் மிகவும் சந்தோஷமாக உள்ளது. கூகுள் நிறுவனத்தின் சர்ச் இஞ்சினுக்கு எதிராகத் தயாரித்து அண்மையில் வெளியிட்ட தன்னுடைய பிங் (BING) சர்ச் இஞ்சின் உலகில் அதிக எண்ணிக்கையில் ஆட்கள் வரும் முதல் 20 இணைய தளங்களில் ஒன்றாக இடம் பிடித்துவிட்டது. அறிமுகமாகி இரண்டு மாதங்களில் இந்த இமாலய வளர்ச்சியை இந்த சர்ச் இஞ்சின் பிடித்தது அனைவரையும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் புதுக் கண்ணோட்டத்துடன் பார்க்க வைத்துள்ளது.

இணைய தளங்களையும் அவற்றை வந்து பார்த்துச் செல்லும் மக்களின் எண்ணிக்கையும் கண்காணித்து வரும் புகழ் பெற்ற அலெக்ஸா அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பிங் சர்ச் இஞ்சினுடைய முன்னோடியான விண்டோஸ் லைவ் சர்ச் இன்னும் ஐந்தாவது இடத்தைக் கொண்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த தளத்திற்கு வரும் தேடல்களெல்லாம் முழுமையாக பிங் தளத்திற்கு திருப்பிவிடப்பட இருக்கின்றன.

முதல் 20 இடத்திற்குள் பிங் வந்துவிட்ட தனாலேயே கூகுள் கலக்கமடையுமா? கூகுள் சர்ச் இஞ்சின் இன்னும் முதல் இடத்திலேயே அதிக பலத்துடன் அமர்ந்துள்ளது. இரண்டாவது இடத்தில் யாஹூவும் அதனை அடுத்து கூகுளின் இன்னொரு சொத்தான யு–ட்யூப் அமர்ந்துள்ளன. இருப்பினும் இரண்டு மாதத்தில் பிங் பெற்றுள்ள வளர்ச்சி குறிப்பிடத்தக்கதுதான்.

ஆனால் கூகுளை அசைக்க இன்னும் அது அசாத்திய வளர்ச்சியைப் பெற வேண்டும். தான் தரும் வசதிகளையும் பெருக்கிக் கொள்ள வேண்டும். மொத்தப் பயன்பாட்டில் கூகுள் இன்னும் பலரும் தொட முடியாத உயரத்தில் உள்ளது.

lankasri.comஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்ட்வேர்' ஸ்நோ லெபர்ட் 'வருகிற வெள்ளிக் கிழமையன்று விற்பனைக்கு வருகிறது. ஆப்பிஸ் ஆன்லைன் ஸ்டொர்ஸ் இதற்கான ஆர்டர்களை ஆன்லைனில் எடுக்க துவங்கியுள்ளது. மேக் ஓ.எஸண., எக்ஸ் வெர்சன் (10.6) ஆப்பிள் ரீட்டெய்ல் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமை செப்டம்பர் மாதத்தில் தான் அறிமுகப்படுத்துவோம் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது ஆகஸ்ட் இறுதியிலேயே இதை வெளியிடுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த வெர்சன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7ஐ அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் ‌வெளியிடுகிறது. இதற்கு முன்னர் ஆப்பிள் தனது ஆப்பரேட்டிங் சிஸ்டமை வெளியிட்டுள்ளது.

ஆப்பிளின் புதிய வெர்சன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இ- மெயிலிங், காலண்டர் மற்றும் தொடர்புகள் குறித்த தகவல் ஸ்டோரேஜ் ஆகியவற்றிற்கு பேருதவியாக இருக்கும் ‌என கூறப்படுகிறது. ஆப்பிளின் இந்தி புதிய வெர்சன் ஸ்நோ லெபர்ட் இதற்கு முந்தைய வெர்சனை விட பாதி அளவு தான். இதை இன்ஸ்டால் செய்ய 1 கிகாபைட் ரேம் ஸ்‌டோரேஜ் கெபாசிட்டி தான் தேவைப்படுமாம்.

lankasri.comகம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று தவிக்கின்றனர். பல முறை இந்த பக்கங்களில் பைல் பாதுகாப்பு குறித்து எழுதினாலும் இந்த பைல் இழக்கும் விபத்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இழந்த பைல்களை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில, இலவச பதிப்பினையும் கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக இருக்கின்றன.அந்த வகையில் நன்றாகச் செயல்படும் டேட்டா ரெகவரி புரோகிராம் ஒன்று அண்மையில் இணையத்தில் தென்பட்டது. இதன் பெயர் ‘Raid2Raid’.

இந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளிலிருந்து பைல்களை மீட்டுத் தருகிறது. இணைத்து அறியக் கூடிய டிரைவில் உள்ள தொலைந்து போன பைல் எனில் அதனைக் கம்ப்யூட்டருடன் இணைத்து, மீட்கப்படும் பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் பதியும் படி செட் செய்யப்படுகிறது.

பிரச்சினைக் குண்டானது ஹார்ட் டிஸ்க் எனில் சம்பந்தப்பட்ட டிரைவினை ஒரு இமேஜாகவும் கொடுக்கிறது. இந்த இமேஜை எங்கேணும் பதிந்து பாதுகாக்கும் படி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடலாம். பின் இமேஜைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பைல்களைப் பெறலாம். டவுண்லோட் செய்த இந்த புரோகிராமில் டபுள் கிளிக் செய்து இதனை இயக்க வேண் டும். பின் எந்த டிரைவில் இருந்து பைல்களை ரெகவர் செய்திட வேண்டுமோ அதன் மீது டபுள் கிளிக் செய்திட வேண்டும். சில நிமிடங்களில் அந்த டிரைவில் உள்ள அனைத்து பைல்களும், மீட்கப்படக் கூடிய பைல்களின் பெயர்கள் உட்பட, காட்டப்படும்.

எந்த பைல்களை மீட்க வேண்டுமோ அவற்றின் மீது கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ‘Recover this file’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் பைல் மீண்டும் கிடைக்கும். அதற்கு முன் மீட்கப்படும் பைல் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தரவிறக்கம் செய்ய : http://www.diskinternals.com/



lankasri.comWeb 3.0 டெக்னாலஜியாம் விரைவில் இணைய உலகை ஆளப்போகிறதாம். இதற்கு முன்னாடி அதாவது தற்போது Web 2.0 அதற்கு முன்னாடி Web 1.0 எனும் தொழில்நுட்பங்கள் இருக்கின்றனவாம், இருந்ததாம். இப்படி அள்ளி விட்டுக்கொண்டு Web 3.0 எனும் புதிய தொழில்நுட்பத்தை பற்றி கொள்கை ரீதியாக(theoritically) பேசிக்கொண்டிருக்கின்றது ஒரு கூட்டம். உண்மையில் Web 1.0, Web 2.0 என்ற தொழில்நுட்பங்கள் இருக்கின்றனவா என பார்த்தால் இவையெல்லாம் வியாபார உத்திகள் போன்றே தோன்றுகிறது. காரணம் தற்போது இணையம் பாவித்து கொண்டு இருப்பதாக சொல்லப்படும் Web 2.0 தொழில்நுட்பம் தனது தனித்துவமான இயல்புகளாலேயே அதாவது முக்கியமாக comments, feedback என்ற இரு இயல்புகளாலேயே அடையாளம் காணப்பட்டது. Web 2.0 கண்டுபிடிக்கபட்டதும் அதற்கு முன்னால் இருந்த தொழில்நுட்பம் அதாவது இணையத்தில் publishing only என்ற தொழில்நுட்பம் Web 1.0 என சொல்லப்பட்டது. எல்லாம் இணையத்தில் கொட்டிக்கிடக்கும் அல்லது கொட்டுவதற்கு தயாரக இருக்கும் பணத்துக்காகவே இந்த புதிய புதிய தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்புகள். ஒரு புதிய தொழில்நுட்பம் என்றவுடன் கையில் பெட்டியை வைத்துக்கொண்டு பலபேர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்காகவே இந்த Web 3.0.

இணையமானது இதுவரை இரு தொழில்நுட்பங்களை கண்டுள்ளது. நான் முன்பு சொன்னது போல் Web 1.0, Web 2.0 என்பன தான் அவை. இதில் Web 1.0 என்ன செய்ததென்றால் இணையத்தில் பதிக்க மட்டுமே வழி செய்தது அதாவது இணையத்தில் நீங்கள் தேடும் தகவல்கள் விதவிதமான தளங்களில் கொட்டிக்கிடக்கும் நீங்கள் அவற்றை தேடி படித்தீர்கள். அவை சரியா, தவறா என சொல்லக்கூட உங்களுக்கு வழி இருக்கவில்லை. அடுத்து வந்த Web 2.0 தொழில்நுட்பம் இந்த குறையை தீர்த்தது இப்போது நீங்கள் ஒரு தகவலை பார்த்தால் அதைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றையும் சொல்கிறீர்கள். முன்பு இருந்த Web 1.0 ல் குறிப்பிட்ட காரை வாங்க வேண்டுமென்றால் அது தொடர்பான தளங்களை தேடி தேடி அந்த கார் உங்களது தேவையை தீர்க்குமா என்று தெரியாமலேயே வாங்க வேண்டியிருக்கும், ஆனால் Web 2.0 ல் உடனே facebook, Twitter போன்ற சமூக வலைதளங்களுக்கோ அல்லது வலைப்பூக்களுக்கோ செல்கிறீர்கள் அங்கே நீங்கள் இப்படி ஒரு காரை வாங்க விரும்புவதாக சொல்கிறீர்கள் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு தேவையான அந்த காரைப் பற்றிய சகல விடயங்களையும் டீடெய்லாக சொல்வார்கள். எப்படியான இடத்தில் எவ்வளவு பெற்றோல் குடிக்கும் என்பது வரையிலான தகவல்களை தெரிந்து கொண்டு நீங்கள் காரை வாங்கலாம். Web 2.0 வின் மிக மிக லேட்டஸ்ட்டான வடிவமே இந்த Facebook போன்ற சமூகவலைத்தளங்களும் tweetter ம். இந்த வடிவங்கள் நம்மை முழுதாக வந்தடையாத. அலுத்துவிடாத நிலையிலேயே அடுத்த இணைய தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சு அடிபடுகின்றது.

Web 3.0 ல் முக்கியமான இயல்பாக சொல்லப்படுவது அதன் intelligent ஆன தேடும் முறை தான். இந்த தொழில்நுட்பத்தில் அமைந்த இணையமானது உங்களது தனிப்பட்ட உதவியாளர் போன்று உங்களின் விருப்பு வெறுப்பு அறிந்து செயல்படும். Web 1.0 ல் இணையம் ஒரு நூலகம் மாதிரி உங்களுக்கு தேவையான தகவலை நீங்களே தேடி எடுத்து கொள்ள வேண்டும். Web 2.0 ல் இணையம் உங்களது நண்பர் கூட்டம் போன்றது உங்களுக்கு தேவையான தகவலை உங்களுக்கு தேவையான வடிவத்தில் நண்பர்கள் தேடி தருவார்கள். Web 3.0 ல் இணையமே உங்களுக்கு தேவையான தகவலை தேடி எடுத்து தரும். Web 3.0 கால இணையம் SEMANTIC WEB என சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க metadata எனப்படும் தகவல்களின் தகவல்களால் ஆனது. உதாரணமாக ஒரு கைக்குட்டையை பார்க்கிறீர்கள் அது நீங்கள் உங்கள் காதலிக்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை போன்ற ஒன்று அதை பார்த்ததும் உங்களுக்கு உங்களின் காதலியின் ஞாபகம் வரலாம் உடனே நேற்று காதலிக்கு தெரியாமல் கடலை போட்ட காதலியின் நண்பியின் ஞாபகமும் வரலாம் நீங்களும் அந்த கைக்குட்டையை படமெடுத்து facebook ல் போட்டு உங்கள் காதலியின் பெயரை tag ம் பண்ணுகிறீர்கள். அதே போல்தான் இணையமும், இப்போ உங்கள் காதலி உங்களை அல்லது உங்கள் Facebook profile ஐ இணையத்தில் தேடினால் உங்கள் facebook profilம் அந்த கைக்குட்டை படமும் காதலியின் நண்பியின் facebook profile ம் முடிவாக வரலாம். உங்களுக்கு பிடித்த, தேவையான தகவல்களை மட்டுமே தந்து நேரத்தை மீதப்படுத்துவதே Web 3.0 இன் முக்கியமான நோக்கம். உங்களது தொடர்ச்சியான இணைய தேடல்களின் மூலம் இணையம் உங்களை பற்றி அறிந்துக் கொள்ளும். RSS எனப்படும் இணைய செயலி மூலமாக இப்போது உங்களுக்கு பிடித்த தளங்களில் இருந்து புதிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது இதே RSS, Web 3.0 ல் உங்களுக்கு பிடித்த தளத்தில் உங்களுக்கு பிடித்த தேவையான தகவலை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கும். உங்களது தொடர்ச்சியான இணைய தேடல் இதை சாத்தியமாக்கும்.

ஒருவரின் Search history ஐ கொண்டு அவரை பற்றியே தெரிந்து கொள்ளும் இந்த தொழில்நுட்பம் பாவனைக்கு வந்தால் எதிர்காலத்தில் திருமண பொருத்தங்கள், வேலைக்கு ஆள் தேடுதல் என்பன இணையத்திலேயே முடிந்துவிடும் அதே நேரம் நீங்கள் ஷகிலாவை பற்றி தேடியிருந்தால் அதுவும் உங்களை பற்றிய தகவலாக, நீங்கள் ஷகிலா ரசிகர் என்று தேடலில் தெரிவிக்கப்படும். முழுக்க முழுக்க Web 1.0 போன்று தகவல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சுகள் ஆரம்பித்திருக்கும் நிலையில் இப்போதே Web 4.0 க்கான குறிசொல்லல்கள் தொடங்கிவிட்டன. அதாவது Web 1.0 தகவல்களுக்கு முக்கியத்துவம் வழங்கியனிலையில் Web 2.0 ஆனது தகவல்களை சிறப்பாக பெற்றுக்கொள்ளும் web applications களுக்கு வழிசமைத்தது தற்போது Web 3.0 ஆனது தகவல்களை சிறப்பன வடிவத்தில் சேமிக்கவும் பெற்றுக்கொள்ளவும் உதவும் என சொல்லப்படும் நிலையில் Web 4.0 ஆனது தற்போது இருக்கும் Facebook, Tweetter தளங்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை தரும் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்பொது கொள்கை அளவிலேயே இருக்கும் இத்தொழில்நுட்பம் வருவதற்கு கொஞ்ச காலம் ஆகும் போலத்தான் தெரிகிறது.

lankasri.comசெயற்கையான முறையில் மனிதன் தான் விரும்பிய வடிவில் பரம்பரை அலகுகளை வடிவமைத்து அதன் படி செயற்படக் கூடிய தானே, இனப்பெருக்கம் செய்யக் கூடிய உயிரினங்களை அல்லது உயிர்க் கலங்களை தயாரிக்கும் நிலையை மனிதன் எட்டிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கின்றனர் உயிரியல் ஆய்வாளர்கள்.

ஒரு பக்ரீரியாவின் பரம்பரை அலகுத் தொகுதியை (genome) மதுவம் (yeast) எனப்படும் ஒரு கல பங்கசுவில் செலுத்தி குறிப்பிட்ட பரம்பரை அலகுத் தொகுதியில் தேவையான மாற்றங்களைச் செய்த பின் அதனை மீண்டும் பிறிதொரு வகை பக்ரீரியாவினுள் செலுத்தி அந்த பக்ரீரியா பல்கிப் பெருகும் வகையில் தயாரித்து வெற்றி கண்ட பின் இந்தத் தகவலை உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வகையில் மனிதன் தனக்கு விரும்பிய பொருளாதார உபயோகமுள்ள பரம்பரை அலகுகளை கொண்ட பக்ரீரியா வகை அல்லது உயிர்க்கலங்களை உருவாக்கி உயிர் எரிபொருட்கள் (Biofuel) போன்ற அவசியமான உபபொருட்களை கழிவு சேதன பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆனால் இந்த ஆராய்ச்சி வழிமுறைகள் தவறானவர்களின் கைகளுக்குப் போயின், மனித இனத்தையே அழிக்கக் கூடிய நுண்ணுயிரிகளை உருவாக்கி மனிதனின் இருப்பையே இந்த உலகில் இருந்து நிரந்தரமாகவும் அழித்து விட முடியும் என்ற பயங்கரமும் இதில் அடங்கி இருப்பதை விஞ்ஞானிகள் உணரத்தான் செய்திருக்கின்றனர். அதனால் எச்சரிக்கையோடு இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளனர்.

lankasri.comதற்கொலைத் தாக்குதல் பயங்கரவாதிகள் உலக அமைதிக்கு எதிரானவர்கள். இவர்களால் ஏற்படும் பெரும் இழப்புகளை நாம் அவ்வப்போது செய்தி களாக படிக்கிறோம். இதுபோன்ற தற்கொலைப் படை யினரை தடுக்க என்ன செய்யலாம் என்று உலக நாடுகள் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கும் வேளையில் மாணவர்கள் இதற்காக புதிய டிடெக்டரை வடிவமைத்து சாதனை படைத்து உள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர் நில்டன் ரென்னோ என்பவர் தலைமையில் இதை வடிவமைத்து உள்ளனர். இந்த டிடெக்டர்கள் ஏற்கனவே உள்ள மேக்னடோ மீட்டர், மெட்டல் டிடெக்டர்கள் போல செயல்படும். இதில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்றால் இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும், கையடக்க அளவு உடையது. நெகிழும் தன்மை உடைய சென்சாரை கொண்டது. இந்த சென்சார் 2 பவுண்ட் எடையே இருக்கும். வயர்லஸ் முறையில் இயங்கும் இந்த சென்சார், வெடிகுண்டுகளை மேஜை, பூ ஜாடி உள்பட எங்கு மறைத்து வைத்திருந்தாலும் எளிதில் அடையாளம் காட்டிவிடும்.

மேலும் இதை உடலில் பொருத்திக் கொண்டு இருந்தால் தற்கொலைப் படையினர், ஆயுதம் தாங்கிய எதிரிகள் அருகில் நெருங்கினாலோ, நமக்கு அருகில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தாலோ சென்சார் எச்சரிக்கை விடுக்கும். இதனால் நாம் உஷாராகிவிடலாம்.

இந்த நவீன டிடெக்டருக்கு ஐ.ஈ.டி. (இம்ப்ரோவைஸ்டு எக்ஸ்புளோசிவ் டிவைசஸ்) என்று பெயரிட்டு உள்ளனர். சமீபத்தில் நடந்த விமானப்படை கண்காட்சியில் இந்த டிடெக்டர் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறந்த கண்டுபிடிப்பாக தேர்வு செய்யப்பட்டது.

இதை உருவாக்கிய மாணவர்கள் 7 பேர். அவர்கள் 1.ஸ்டீவ் போலண்ட், 2.ஆண்ட்ரி சுபைன், 3. பிரைன் கேல், 4.கெவின் குவாங், 5.மைக்கேல் சின், 6.விட்டலி சாட்கோவிஸ்கி, 7. அஸ்வின் லாலன்ட்ரன். இவர்கள் அனைவரும் வெவ்வேறு பாடப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிடெக்டரை ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளின் போர் எல்லையில் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.


நாதஸ்வரங்கள் முழங்க ஆதவன் படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. டைரக்டர் ஷங்கர் வெளியிட திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் நடிகர் விஜய், சூர்யா, சசிக்குமார், விவேக், கவுதம் மேனன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, எந்த படத்திற்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்தார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். அவர் இசையமைத்த மற்ற படங்களுக்கு பாடல்களை ஒரே நேரத்தில் அவர் கொடுத்ததில்லை. பகுதி பகுதியாக பிரித்துதான் கொடுப்பார். அவரிடமிருந்து பாடல் வரிகள் வர வர படப்பிடிப்பை நடத்துவார்கள். ஆனால் இந்த படத்திற்கு மட்டும்தான் மொத்தமாக ஒரே நேரத்தில் பாடல்களை கொடுத்தார். எங்களது அடுத்த படத்திற்கும் அவர்தான் இசையமைப்பாளர் என்றார் சந்தோஷமாக.
பின்னாலேயே பேச வந்த ஹாரிஸ், “இந்த படத்திற்கு நான்கே மாதத்தில் ஆறு பாடல்களை அமைத்துக் கொடுத்தேன். அதற்கு காரணம் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஆர்க்கெஸ்ட்ராவுக்கு உடனுக்குடன் பணத்தை கொடுத்ததுதான். இப்படி எனது டென்ஷனை தயாரிப்பாளர் குறைத்ததால்தான் ட்யூனில் என்னால் கவனம் செலுத்த முடிந்தது” என்றார்.

சசிக்குமார் பெயரை சொல்லும் போதெல்லாம் அரங்கமே அதிரும்படி கைதட்டினார்கள் ரசிகர்கள். “பாராட்டுற மனசு வேணும். இங்கே நிறைய பேருக்கு அது இருப்பதில்லை. என்னோட சுப்ரமணியபுரம், பசங்க, நாடோடிகள் படத்தை பார்த்திட்டு உடனுக்குடன் பாராட்டுவார் சூர்யா சார். இப்படி இன்னொருவரை பாராட்டுகிற மனசு இருப்பதால்தான் அவர் மற்றவர்களால் பாராட்டுகிற அளவுக்கு உயர்கிறார்” என்றார் சசி.

“வாரணம் ஆயிரம் பாடலை கேட்டுட்டு “மாப்பு... ஸாங் சூப்பர்டா” என்று மெசேஜ் அனுப்பினார் விஜய். ஸ்கிரீன்லே ஆதவன் பாடல் ஓடும் போது என்னோட டான்ஸ்சை விஜய் பார்க்கிறாருங்கிற குறுகுறுப்பு இருந்திச்சு. இந்த விழாவுக்கு வந்த அவருக்கு நன்றி” என்றார் சூர்யா.

“சூர்யாவோட ஒவ்வொரு படம் வரும்போது அவரோட அசுர உழைப்பும், பிரமாண்ட வளர்ச்சியும் நல்லா தெரியுது. இந்த படம் பெரிய ஹிட் ஆகணும்” என்று வாழ்த்தினார் விஜய்.

முன்னதாக திரையிடப்பட்ட இரண்டு பாடல்கள் அசத்தலோ அசத்தல்!

About Us