Content feed Comments Feed
Showing posts with label News - India. Show all posts
Showing posts with label News - India. Show all posts


மேற்கு வங்க மாநிலத்தில் லால்கர் மாவட்டத்தில் உள்ள சுமார் 30 கிராமங்கள் இன்னமும் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் பிடியில் உள்ளது.
அந்த கிராமங்களை மீட்க பாதுகாப்புப் படையினர் லால்கரில் முற்றுகையிட்டுள்ளனர்.

லால்கர் புறநகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் களில் 2 பேர் திடீரென மாயமாகி விட்டனர். அவர்களை கண்டுபிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

புலபேடா காட்டுப்பகுதிக்குள் தேடுதல் வேட்டை நடத்தியபோது பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.

சுமார் 5 மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. பாதுகாப்பு படையினர் தரப்பில் யாரும் காயம் அடையவில்லை என்று மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு எம்.கே. வர்மா கூறினார்.

இந்த துப்பாக்கி சண்டையில் 3 கிராமவாசிகள் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்ததாக தெரிய வந்துள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் மேற்கு மிட்னாபூர், பன்குரா, புரூலியா ஆகிய 3 மாவட்டங் களிலும் மாவோயிஸ்டுகள் வலுவாக உள்ளனர். 21 காவல் நிலைய பகுதிக்குட் பட்ட இடங்களில் அவர்களது ஆதிக்கம் உடைக்க முடியாத படி உள்ளது.

அவர்களை விரட்ட கடந்த நவம்பர் மாதம் முதல் போலீசாரும் பாதுகாப்புப் படை வீரர்களும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.


தென்னாப்பிரிக்காவிலுள்ள காந்தி வசித்த வீட்டை வாங்க இந்திய ஜனாதிபதியிடம் அனுமதி கோரி இந்திய தொழிலதிபர் கடிதம் அனுப்பியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க நாட்டில் ஜோகனஸ்பர்க் நகரின் வடக்கு புறநகரில் ஆர்கிட் என்ற பகுதி உள்ளது. தேசப்பிதா மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் தங்கி இருந்தபோது, இங்கு அமைந்திருக்கும் “தி கிரால்” என்ற வீட்டில் 1907-ம் ஆண்டில் இருந்து 3 வருடங்கள் வசித்தார். இந்த வீட்டின் உரிமையாளர் நான்சி பால் என்பவர் ஆவார்.

அண்மையில் இவர் வீட்டை விற்றுவிட்டு வேறு நகரில் குடியேற முடிவு செய்தார். இதையடுத்து வீட்டை ஏலத்தில் விட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் விலை அதிகமாக இருந்ததால் யாரும் வாங்க முன்வரவில்லை.

இந்தநிலையில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான பிரதீப் பாவ்னானி என்பவர், காந்தி அடிகள் வசித்த வீட்டை வாங்க முன்வந்துள்ளார். அது மட்டுமல்ல, இந்த வீட்டை இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கவும் அவர் முடிவு செய்து இருக்கிறார்.

வீட்டை வாங்குவதற்காக அதன் உரிமையாளர் நான்சி பாலுக்கு பணம் அனுப்ப, தனக்கு அரசு முறைப்படி அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி, ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு தொழிலதிபர் கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் தொழில திபர் பிரதீப் பாவ்நானி கூறி இருப்பதாவது:-

தென் ஆப்பிரிக்காவில் காந்தி வசித்த வீட்டை ரூ.2 1/2 கோடிக்கு வாங்க முடிவு செய்தேன். இதற்கு வீட்டின் உரிமையாளரான நான்சி பால் சம்மதித்துள்ளார். இதற்கான நடைமுறைகள் முடிந்ததும் இந்த வீட்டை இந்திய அரசிடம் ஒப்படைப்பேன். இதன்மூலம் காந்தி வாழ்ந்த வீட்டை ஒரு அருங்காட்சியகமாகவோ அல்லது நினைவுச் சின்னமாகவோ பாதுகாக்க முடியும்.

எனவே காந்தி வசித்த வீட்டை வாங்குவதற்கு அரசு எனக்கு முறைப்படி அனுமதி தர வேண்டும். இதன்மூலம் காந்தி வாழ்ந்த வீட்டை நாட்டுக்கு அர்ப்பணிக்க முடியும்.

இவ்வாறு தொழிலதிபர் பாவ்நானி தனது கடிதத்தில் கூறி உள்ளார்.


குஜராத் மாநிலத்துக்கு கவர்னராக நியமிக்கப்பட்ட 74 அகவையான டி.என்.திவேதி உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் நவல் கிஷோர் சர்மா கவர்னராக இருந்தார். இவரது 5 ஆண்டு பதவிக்காலம் கடந்த மாதம் 24-ந் தேதியுடன் முடிந்தது.

குஜராத் மாநில புதிய கவர்னராக டி.என்.திவேதியை நியமனம் செய்து ஜனாதிபதி பிரதீபா பட்டீல் அறிவித்தார். கடந்த வாரம் திவேதி குஜராத் சென்று கவர்னராக பதவி ஏற்க திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பித்த நீர் சுரக்கச் செய்யும் கல்லீரலில் அவருக்கு கோளாறு இருப்பது தெரிய வந்தது.

டெல்லியில் உள்ள ஸ்ரீகங்காராம் மருத்துவ மனையில் அவர் கடந்த 23-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடத்த வேண்டும் என்றனர். அதன் படி திவேதி கல்லீரல் அகற்றப்பட்டு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வு எடுத்து வந்தார். நேற்றிரவு அவர் உடல் நிலை மோசமானது. இன்று அதிகாலை 4 மணிக்கு அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.

திவேதி மரணத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். திவேதி மரணம் காரணமாக குஜராத் மாநிலத்துக்கு வேறு ஒருவரை உடனடியாக கவர்னராக நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

புதிய கவர்னர் அறிவிக்கப்படும் வரை குஜராத் மாநில விவகாரங்களை மராட்டிய மாநில கவர்னர் எஸ்.சி.ஜமீர் கூடுதல் பொறுப் பாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மீனவர் வீட்டில் நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டு வீசியதில் இளம்பெண் காயமடைந்தார். இதனால் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.
ராமேஸ்வரம் நடராஜபுரத்தை சேர்ந்த மீனவர் சின்னமுனியன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி, மகள் சில ஆண்டுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டனர். அதனால் சின்னமுனியன் வீட்டில் தனியே வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இவரது வீட்டில் உறவுக்கார பெண் மகேஸ்வரியுடன் தங்கியிருந்தார். அப்போது நள்ளிரவில் வந்த மர்ம ஆசாமி வீட்டு ஜன்னல் வழியாக நாட்டு வெடிகுண்டை வீசினர்.

இதில் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அதனால் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. வீட்டினுள் இருந்த மகேஸ்வரி படுகாயமடைந்தார். அவர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

நள்ளிரவில் வெடிவெடித்ததால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தனுஷ்கோடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.
சின்னமுனியனுக்கும் அவரது தம்பி பாண்டிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. அதனால் பாண்டிதான் வெடிகுண்டு வீசியிருப்பார் என சின்னமுனியன் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source - www.newindianews.com


புதிய வெளியுறவு செயலராக நிருபமா ராவ் (58) சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) பதவியேற்கிறார். வெளியுறவு செயலராக இருந்த சிவசங்கர் மேனன் வெள்ளிக்கிழமை பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதையடுத்து நிருபமா ராவ் பதவியேற்கவுள்ளார். இவர் இந்த பதவியில் 17 மாதங்கள் நீடிப்பார்.

வெளியுறவுச் செயலர் என்ற உயரிய பதவியை வகிக்கப் போகும் இரண்டாவது பெண் நிருபமா ராவ். முன்னதாக, சோகிலா ஐயர் இந்த பதவியை வகித்தார்.

வெளியுறவு பணியில் சிறந்த அனுபவமிக்கவர் நிருபமா ராவ். அவர் வெளியுறவு பணியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார். கடைசியாக சீனாவுக்கான இந்திய தூதராக அவர் பதவி வகித்தார்.

Source - www.newindianews.com

About Us