Content feed Comments Feed
Showing posts with label Movie Reviews/விமர்சனம். Show all posts
Showing posts with label Movie Reviews/விமர்சனம். Show all posts

சிவகிரி

Posted by Admin 9/3/09

தமிழ்சினிமாவுக்கு ஒரு ‘வெயிட்டான’ புது வரவு இந்த படத்தின் ஹீரோ சிவகிரி. ஆர்வம் இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்ற இவரது தன்னம்பிக்கைக்கு வேண்டுமானால் முதல் சல்யூட் போடலாம்! நடிப்பா? அடுத்த பாராவுக்கு போங்க சாரு...
கல்லூரிக்குள்ளேயே தீவிரவாதத்தை வளர்க்கிற ஒரு குரூப்பை கையும் களவுமாக பிடிக்கிறார் சிவகிரி. அதுவும் எப்படி? தானே மாணவராக அட்மிஷன் ஆகி! அட, நல்லாருக்கே என்று நிமிர வைக்கிற மாதிரி சில காட்சிகளும் உண்டு அந்த கல்லூரி கலாட்டாவில். ஈவ் டீசிங் செய்கிற மாணவர்களை கண்டு அஞ்சி நடுங்கும் அந்த மலை மலை ஹீரோ, அவர்கள் சொல்லுவதையெல்லாம் செய்கிற போது தியேட்டரில் சிரிப்பலை. அசமஞ்சம் என்று அவர்கள் நினைத்தால் அடுத்த சீனிலேயே அதிரடி என்ட்ரி கொடுத்து வில்லன்களை வெளுக்கிற போது, பின்னணியில் “சிவகிரி சிவகிரி” என்று ஆர் ஆர் இசைத்து மிரளடித்திருக்கலாம்!

பிறகுதான் பிரச்சனையே. நான்தாண்டா இந்த ஊரு ஏசி என்று வேடத்தை கலைக்கிறார் சிவகிரி. அதுவரைக்கும் இருந்த மீசையையும் ஷேவ் செய்துவிடுகிறாரா? அசல் அமுல்பேபி எபெஃக்ட்! காக்கி சட்டைக்குள் எரிமலையை எதிர்பார்த்தால், ஐஸ்கிரீமாக உலா வருகிறார் மனுஷன்.
அவ்வப்போது வெளிநாடுகளில் இவர் ஆடும் டூயட்டும், அவ்வளவு பெரிய உடம்போடு இவர் கொடுக்கிற மூவ்மென்ட்டும் ரசனை பெப்பர்மென்ட்!
கூட இருந்தே குழி பறித்தால் பரவாயில்லை. வெடிகுண்டு, தீவிரவாதம் என்று தமிழ்நாட்டையே மிரள வைக்கிறார் வில்லன் குகன். அவர் ஏன் இப்படி ஆனார் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக். சிவகிரியின் காதல் மனைவி ருக்ஷனாவை இவரும் காதலிக்கிறார். எனக்கு கிடைக்காதவள் உனக்கும் கிடைக்கக் கூடாது என்று அவர் வில்லன் சிரிப்பு சிரிக்க, கடைசியில் சிவகிரியின் புல்லட்டில் தீவிரவாதி கம் நண்பன் அவுட்.

வெங்கல கடையில் யானை புகுந்த மாதிரி, சிவகிரியின் ஃபைட் சீன்கள் களை கட்டுகிறது. கொஞ்சம் மெனக்கட்டால் குணச்சித்திர வேடங்களில் கலக்கலாம். மூன்று கதாநாயகிகள். யாருமே நடிப்பை நம்பவில்லை என்பதை ஒவ்வொரு கோணத்திலும் உணர்த்துகிறார்கள். தலைமை ஆசிரியர் வெண்ணிறாடை மூர்த்தியும், ப்யூன் நெல்லை சிவாவும் சவசவ என்று பேசினாலும் லேசாக கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.

ஒளிப்பதிவாளரை விட, இசையமைப்பாளர் முந்துகிறார். கட்டிடம் கட்டுகிற ஆசையில் கல்லை அடுக்கியிருக்கிறார்கள். அஸ்திவாரத்தில்தான் ஆட்டம்!

பொம்மாயி

Posted by Admin

காதருகே வந்து படீர் என்று எதையோ போட்டு உடைக்கிற ரீரெக்கார்டிங், குளேஸ் அப்பில் பயம் அப்பிய கண்களோடு திரியும் கேரக்டர்கள், ஜாடாமுடி, பில்லி சூனிய பார்வையோடு அலைகிற மந்திரவாதிகள், எல்லாமாக கூடி ரசிகனின் மடியில் பயத்தை கொட்டுகிற படம்.
இந்தியில் வந்த பூங்க் என்ற படத்தின் தமிழாக்கமாம். டைரக்ஷன் ராம்கோபால் வர்மா என்பது கூடுதல் அதட்டல்!

தன்னுடன் பிசினஸ் பார்ட்னராக இருக்கும் அஸ்வினியை அவமானப்படுத்தி விரட்டியடிக்கிறார் தொழிலதிபர் சுதீப். பிரச்சனையை பில்லி சூனிய உதவியோடு எதிர்கொள்கிறார் அஸ்வினி. எப்படி? சுதீப்பின் பெண் குழந்தை ரக்ஷாவின் கால் மண்ணை எடுத்து பில்லி சூனியம் வைக்கிறார். பள்ளிக்கு போகிற பிஞ்சு, திடீரென்று ஆண் குரலில் சிரிக்க அதிர்ந்து போகிறது ஸ்கூல். இந்த காலத்திலே கூடவா பேய் பிசாசுன்னு பேசுவீங்க. இதுக்கு பேரு என்று புரியாத சில விஷயங்களை எடுத்துவிடுகிறார்கள் மருத்துவர்கள்.

நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வரும் குழந்தையை கண்டு துடியாக துடிக்கும் நாத்திக அப்பா முதன் முதலாக பில்லி சூனியத்தை நம்புகிறார். அதற்கான ஸ்பெஷலிஸ்டோடு வீட்டுக்கு வந்தால், அங்கேதான் ட்விஸ்ட். இன்னும் கொஞ்ச நேரத்திலே உங்க பொண்ணு இறந்திருவா என்கிறார் அவர். அதற்குள் ஆவியிடமிருந்து பிள்ளையை காப்பாற்ற வேண்டும். எப்படி? தேடி தேடி சூனியத்தை எடுக்கிறார். கடைசியில்...? நுனி சீட்டுக்கு ரசிகனை தள்ளிவிடுகிற க்ளைமாக்ஸ்.

எல்லா கேரக்டர்களுமே விதிர் விதிர்த்து போகிற அளவுக்கு நடிப்பை வழங்குகிறார்கள். குறிப்பாக குழந்தை ரக்ஷா. இவளையா அந்த பாழாப்போன பேய் வாட்டி எடுக்கணும்? என்று ரசிகர்களை பரிதாப்பட வைக்கிறாள் குழந்தை. திடீரென்று காணாமல் போவதும், ஒரு சீக்கு பிடித்த காக்காய் இவளை கண்ட்ரோல் பண்ணி வைத்திருப்பதும் பகீர். அம்மா, ரொம்ப வலிக்குதும்மா என்று குழந்தை அழும் போது மனசு வலிக்கிறது.

தனி அறையில் குழந்தையை படுக்க வைக்கும் மேற்கத்திய கலாச்சாரம் ஓகேதான். அதற்காக பிரச்சனைக்குள்ளான பிறகும் குழந்தையை தனி அறையில் படுக்க வைப்பதுதான் ஏறி மிதிக்கிற லாஜிக்.

வீட்டு வேலைக்காரியில் இருந்து, குழந்தையின் பாட்டி வரைக்கும் டெரர் எªஃக்ட் கொடுப்பதுதான் புஸ்வாண பில்டப்! இந்த பில்டப் சும்மா கிடக்கிற பொம்மைகளையும் விட்டு வைக்கவில்லை.

சவீதாசிங்கின் ஒளிப்பதிவு மிரட்டல். பின்னணி இசைதான் பேய் படங்களின் பலமே. அதை சரியாக செய்திருக்கிறார் இசையமைப்பாளர் பப்பி.

பொம்மாயி... ஹையோடா!

ஈசா

Posted by Admin

உப்பள பின்னணியில் மனசை அப்பளம் போல் நொறுக்குகிற கதை. காதல் மனைவியின் இறப்புக்கு காரணமானவர்களை சக்கையாக பிழிந்து சாவு கொடுக்கிற வேலைதான் விக்னேஷ§க்கு!
வழக்கமான இந்த கதையை, சொல்லியிருக்கும் விதத்தில்தான் மிரட்டல்! புதுமுக இயக்குனர் பாலகணேசாவுக்கு ஒரு 'பலே' போடுங்கப்பா...

எடுத்தவுடனே ஸ்கீரினை ஓப்பன் பண்ணி, இருப்பதையெல்லாம் காட்டாமல், விக்னேஷின் குடிசைக்குள்ளே லக்ஷணா உயிரோடு இருப்பது போல துவங்குகிறது படம். கிடைக்கிற அண்ணாச்சிகளையெல்லாம் அண்ணாசி பழம்போல துண்டு போடுகிறார் விக்கி. இன்டர்வெல்லில்தான் தெரிகிறது, அதுவரை விக்னேஷ் பேசிக் கொண்டிருந்தது லக்ஷணாவுடன் அல்ல. அவரது பிணத்துடன் என்று! ஏன் இந்த கொலை வெறி துரத்தல்? காதலும், கவலையுமாக ஒரு பிளாஷ்பேக். தனது மனைவியின் சாவுக்கு காரணமானவர்களை போட்டுத்தள்ளும் விக்னேஷை துரத்துகிறது போலீஸ். கையில் சிக்கினாரா? விறுவிறுப்பான சுபம்.

இந்த படமே முதல், அல்லது கடைசி என்ற வெறியோடு உழைத்திருக்கிறார் விக்னேஷ். இப்படி ஒரு வெறித்தனமான ஹீரோ இல்லையென்றால், அந்த க்ளைமாக்ஸ் சண்டையை நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது இயக்குனர். பாம்புகள், தவளைகள் நடுவே ஒரு தவம் போலவே கிடந்து ஊர்ந்திருக்கிறார் விக்னேஷ். மனசு நிறைய பாராட்டலாம். பிதாமகன் விக்ரமை இமிடேட் செய்வதை தவிர்த்திருந்தால் விக்னேஷின் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் கிடைத்திருக்கும். அதுதான் கொஞ்சம் உறுத்தல்.

லக்ஷணா, நிஜமாகவே லட்சணம். சற்றே அர்ச்சனாவின் சாயல். நடிப்பில் அவரையே மிஞ்சுவார் போலிருக்கிறது. தன்னை காதலிக்கும் விக்னேஷ் அதை வெளிப்படுத்த தடுமாறும்போது தானே முன் வந்து காதலை சொல்வது பேரழகு. இவருக்கும் விக்னேஷ¨க்குமான நெருக்கத்தில் நிழலை மிஞ்சிய நிஜம்.

கவனிக்கத்தக்க புதுமுகம் அந்த கருப்பு வில்லன். கடைசி வரை 'டவுசரு...' டயலாக்கை விடாமல் பற்றிக் கொள்வதுதான் சற்றே அலுப்பு. எல்லா ரீல்களிலும் அலட்டிக் கொள்ளாமல் நடந்து, கடைசி ரீலில் ஆக்ரோஷமாக மோதி செத்துப்போகையில் 'ஒழிஞ்சாண்டா துரோகி' என்று நெட்டி முறிக்கிறது தியேட்டர்.

காமெடிக்கென்று ஒரு லாரி ஆட்களை இறக்கியிருக்கிறார்கள். அதில் ஜம்மென்று முந்தி நிற்பது லொள்ளு மனோகரும், சுவர் முட்டி சுப்புராஜூம்தான்.

மிகவும் பிரமிக்க வைத்திருக்கிறார்கள் சண்டை இயக்குனர் ட்ரேகன் சிங்லீயும், ஒளிப்பதிவாளர் ஆர்.பி.பாலகணேஷ§ம். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் ஃபைட், ஆங்கில படங்களுக்கு இணையானது.

இசை- புதுமுகம் ஹரண். எல்லா பாடல்களும் இனிமை. குறிப்பாக யாரடி நீ மோகினி ரீமிக்ஸ் துள்ளல். பின்னணி இசையும் காட்சிகளை கவுரப்படுத்துகின்றன.

அவித்த உப்புமாவையே தாளிக்காமல், தனக்கென்று தனி அடையாளத்தோடு அறிமுகம் ஆகியிருக்கும் புதுமுக இயக்குனர் பாலகணேசாவுக்கு சின்ன சின்ன குறைகளை மறந்து தரலாம் ஒரு பூச்செண்டு.

ஈசா- நிச்சயம் லேசா இல்லை!

பொக்கிஷம்

Posted by Admin

தொடர்ந்து வறண்ட திரைப்படங்களாகப் பார்த்துச் சலித்துப்போய் பெரும் எதிர்ப்பார்ப்புகளோடு பொக்கிஷம் பார்க்கப் போனால்... ஒரு நல்ல சிறுகதையை ஜவ்வாக இழுத்து பார்வையாளர்களின் பொறுமையைச் சோதித்திருக்கிறார் சேரன்.
கதை மிக மிக சின்ன ஒரு முடிச்சுதான்.

உடல்நலம் சரியில்லாத தன் தந்தையை (விஜயகுமார்)அரசு மருத்துவமனையில் ஆபரேஷனுக்காக சேர்க்கிறார் லெனின் (சேரன்). அதே மருத்துவமனையில் தன் தாயைச் சேர்த்துவிட்டு இறுதி நேரத்தில் பணம் கட்ட முடியாமல் தவிக்கிறார் நாதிரா (பத்மப்ரியா). இலக்கியம் படிக்கும் கல்லூரி மாணவி. அந்த இக்கட்டான நேரத்தில் கைகொடுக்கிறார் லெனின். அடிப்படையில் கம்யூனிஸ்ட். தொழில், கொல்கத்தாவில் மெரைன் இஞ்ஜினியர். ஓரிரு நாட்களில் இருவருக்கும் ஏற்படும் பழக்கம், இலக்கியங்களை விவாதிக்கும் அளவு நட்பாகிறது.

பின்னர் கொல்கத்தா செல்லும் சேரன், தொடர்ந்து நாதிராவுக்கு கடிதம் அனுப்புகிறார். அவரும் பதிலுக்குக் கடிதம் அனுப்ப, நாளடைவில் அதுவே காதலாகிறது.

இந்தக் காதலுக்கு நாகூரைச் சேர்ந்த முஸ்லிம்களான நாதிரா குடும்பம் ஆரம்பத்தில் எதிர்ப்புக் காட்டுகிறது. ஆனால் மகனைக் கூட்டிக் கொண்டு நாகூருக்கே போய் சம்பந்தம் பேசுகிறார் விஜயகுமார். எதிர்பாராதவிதமாக, நாதிராவின் தந்தை இதற்கு ஒப்புக் கொள்கிறார்.

ஆனால் கொஞ்ச நாள் பொறுத்திருக்க வேண்டும் என்கிறார். தொடர்ந்து கடிதங்கள் எழுதக் கூடாது என்றும் மாதம் ஒன்று என எழுதிக் கொண்டால் போதும் என்றும் நிபந்தனை விதிக்க, சந்தோஷத்துடன் அதற்கு அதற்கு ஒப்புக் கொண்டு கொல்கத்தா செல்கிறார் லெனின்.

ஆனால் நாதிராவிடமிருந்து தொடர்ந்து கடிதங்கள் வருவது நின்று போக, மனமுடைந்த லெனின் நாகூருக்கே சென்று பார்க்கிறார். அங்கே நாதிரா குடும்பமே இல்லை. எங்கே போனார்கள் என்று சொல்லவும் ஆளில்லை. கடைசி வரை கண்டுபிடிக்கவே முடியாமல் நொந்து போகிறார்.

தந்தையின் வற்புறுத்தலால் வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். ஒரு மகனுக்குத் தந்தையாகிறார். ஆனால் தன் பழைய காதலியின் தேடலைத் தொடர்கிறார். தனது ஏக்கங்கள், ஏமாற்றங்களை கடிதங்களாக எழுதி வைக்கிறார். ஆனால் கடைசிவரை நாதிராவைப் பார்க்க முடியாத பெருங்குறையுடன் மரித்துப் போகிறார்.

நாதிராவுக்கு என்ன ஆனது... லெனினின் கடிதங்கள் அவரைச் சென்று சேர்ந்தனவா... என்பது க்ளைமாக்ஸ்.

லெனின் பாத்திரத்தில் சேரன் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. எழுபதுகளில் ஆரம்பமாகிறது கதை. இறந்துபோன சேரனின் டைரி மற்றும் கடிதங்களை அவர் மகன் படிக்க ஆரம்பிக்கும்போது, ப்ளாஷ்பேக் துவங்குகிறது.

காதல் நினைவுகள்... அதுவும் தோற்றுப் போன காதல் நினைவுகளை எத்தனை சுவாரஸ்மாகச் சொல்லியிருக்கலாம்... ம்ஹூம்... சேரனிடம் அந்த ஆட்டோகிராப் டச் இந்தப் படத்தில் நூறு சதவிகிதம் மிஸ்ஸிங்.

தகவல் தொடர்புக்கு வேறு வழியே இல்லாத கடிதப் போக்குவரத்துக் காலத்தில் கதை நடக்கிறது என்பதற்காக படம் முழுக்க இருவரும் மாறி மாறி கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பதையே காட்டுவது பெரும் சலிப்பை வரவழைக்கிறது.

தொழில்நுட்ப ரீதியில் சேரனின் மிகச் சிறந்த படம் இது என்றாலும், ஒரு காட்சியில் கூட, மனம் லயிக்க முடியாத அளவுக்கு படு வீக்கான திரைக்கதை.

எழுபதுகளில் இருந்த 'கல்கத்தா', ட்ராம் வண்டிகள், கார்கள், தபால் அலுவலகம், தந்தி அலுவலகம், மைக்கூடு, பேனா முனை, தபால் முத்திரை... இப்படிப் பார்த்துப் பார்த்து காட்சிகளுக்குத் தேவையான பின்னணியை கச்சிதமாக வடித்த சேரனால் அழுத்தமான காட்சிகளை அமைக்க முடியாமல் போயிருக்கிறது.

தோற்றுப் போன காதல்களே காவியங்களாகின்றன... ஆனால் இந்த காதலில் அழுத்தமான, சுவாரஸ்யமான சம்பவங்களே இல்லை என்பதை எந்தக் கட்டத்திலும் இயக்குநர் சேரன் உணராமல் போனதை என்னவென்பது!.

ஒரு நடிகராகவும் இந்தப் படத்தில் சேரனை ரசிக்க முடியவில்லை. மேனரிசம், அழும் பாங்கு, வசன உச்சரிப்பு... எல்லாவற்றிலுமே சேரன் புதிதாய் பிறந்தாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

பத்மப்ரியாவை அழகாகக் காட்ட ரொம்பத்தான் மெனக்கெட்டிருக்கிறார்கள். அந்த அக்கறையை கொஞ்சம் திரைக்கதையிலும் காட்டியிருக்கலாம்.

இளவரசு, விஜயகுமார், ஜெய்ப்பிரகாஷ் ஆகியோர் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

வேறு பாத்திரங்களே இந்தக் கதையில் இல்லை.

டைட்டானிக், அவள் அப்படித்தான் இசையை மறுபடியும் வாசித்துக் காட்டியிருக்கிறார்கள் சபேஷ் முரளி. பாடல்களில் இரண்டு பரவாயில்லை ரகம்.

ராஜேஷ்யாதவின் காமிராவும், வைரபாலனின் கலை இயக்கமும் முதல் தரம்.

தான் தரும் எல்லாமே நல்ல படைப்புகள்தான்... அதை மக்களுக்கு ரசிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற பிடிவாதத்தை இயக்குநர் சேரன் தவிர்க்க வேண்டும். பாத்திரங்களின் இயல்பைத் திரித்து, தனக்கேற்ப அதைச் சிதைக்கும் நடிகர் சேரன் மாறியாக வேண்டும்.

காரணம், சேரன் என்ற கலைஞனுக்குள் இன்னும் பொக்கிஷமாக புதைந்து கிடக்கும் கலைப் படைப்புகள் இந்த தமிழ் சினிமாவுக்கு நிறைய தேவைப்படுகிறது!.

மாந்திரீகமும், சூனியமும் மூடநம்பிக்கை, அது நமக்கு நடக்காத ‌வரை... எனும் பயமுறுத்தும் உண்மையையும், தன் வினை தன்னை சுடும் எனும் பழகிய பழமொழியையும் சொல்லி வந்திருக்கும் மந்திர - தந்திர, மாயா ஜால திகில் படம்தான் பொம்மாயி.

பிரபல பில்டிங் கான்டிராக்டர் ராஜீவ்வாக ஹீரோ சுதிப். அவரது மனைவி ஆர்த்தியாக புதுமுகம் அம்ரிதா. இவர்களது ஆசை பெண் குழந்தை ரக்ஷா. இவர்களது கட்டுமான கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு தம்பதி பெரிய அளவில் ராஜீவ்வுக்கு து‌ரோகம் செய்துவிட, அவர்களை அசிங்கப்படுத்தி வேலையை விட்டு தூக்குகிறார் ஹீரோ. பலர் முன்னிலையில் அவமானப்பட்ட ஜோடி., ஹீரோவின் ஆசை மகளுக்கு பில்லி சூனியம் வைக்கிறார்கள். அதனால் அவரது ஆசைமகள் ரக்ஷாவிற்கு உயிர் போகும் ஆபத்தான நிலை. கடவுளை நம்ப மறுக்கும் ஹீரோ, மாந்திரீகத்தையும் நம்ப மறுத்து மருத்துவத்தை நம்புகிறார். மருத்துவமும் கைவிட, ஹீரோ கடவுளை நம்பினாரா? மகளை காப்பாற்றினாரா? நயவஞ்சக ஜோடியை நசுக்கினாரா, இல்லையா? என்பதற்கு முரட்டு தொனியில் விடை சொல்கிறது மீதி கதை!

காண்ட்ராக்டர் ராஜீவ்வாக தமிழுக்கு புதுமுக நாயகர் சுதீப் பாசமான தம்பியாக பளிச்சிடுகிறார். அம்மாவாக அம்ரிதாவும் குழந்தை பாசத்தால் நம்மையும் கலங்க வைக்கின்றார். ஆவி பிடித்த பெண்ணாகவும், பிடிக்காத பெண்ணாகவும் குழந்தை ரக்ஷாவின் நடிப்பும் திகில் மிரட்டல். பெண் மதன்பாபோ? என கேட்குமளவிற்கு சிரித்தபடியே வந்து ஹீரோவின் குடும்பத்தை சிதறடிக்கப் பார்க்கும் வில்லியும், அவரது கணவர் முட்டைமுழி, மொட்டைத்தலையரும் வித்தியாச விஸ்வரூபம். வேலைக்காரி, கார் டிரைவர் உள்ளிட்ட சஸ்பென்ஸ் பாத்திரங்களுக்காகவே இயக்குனர் ராம் கோபால் வர்மாவிற்கு சபாஷ் சொல்லலாம்.

சாதாரண சுவரைக்கூட திக், திக் திகிலாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குனருக்கு, சவீதா சிங்கின் ஒளிப்பதிவும், அமர்மோஹ்லியின் இசையும், பப்பி துத்துலின் பின்னணி இசையும், சரிவிகிதத்தில் கைகொடுத்து சபாஷ் சொல்ல வைக்கின்றன. நம்ப முடியாத கதையை, தனது திரைக்கதை, இயக்கத்தின் மூலம் நம்ப வைத்திருக்கிறார் ராம்கோபால் வர்மா.

பொம்மாயி - மாயாஜால மந்திரக்காரி!

கந்தசாமி

Posted by Admin 8/22/09


ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிரான சூப்பர் ஹீரோவின் போராட்டம் என்ற 'எவர்கிரீன் சப்ஜெக்ட்'தான் மீண்டும் ஒரு முறை கந்தசாமி எனும் பிரமாண்ட திரை வடிவாய் விரிந்திருக்கிறது.
ஒரு வரியில் படிக்கும்போது இந்தக் கதை பழக்கமான ஒன்றாகத் தெரிந்தாலும், அதை எடுத்துள்ள விதம், கதையின் பின்னணி, நிகழ்விடம், டெக்னிகல் சமாச்சாரங்கள் எல்லாமே சேர்ந்து அதை வெற்றிப் படமாக்கியிருக்கின்றன.

இருப்பவனிடம் பிடுங்கி இல்லாதவனுக்குத் தரும் ராபின் ஹூட்தான் கதையின் மையப் புள்ளி.

திருப்போரூர் கந்தசாமி கோயில் மரத்தில் மக்கள் தங்கள் குறைகளை, கோரிக்கைகளாக பேப்பரில் எழுதிக் கட்டி வைத்துவிட்டால் போதும், உடனே அவர்களுக்கு கேட்ட உதவி கிடைக்கும். காரணம் கோயிலில் உள்ள சாமி அல்ல... ஒரு ஆசாமி. அவர் பெயரும் கந்தசாமிதான் (விக்ரம்). சேவல் வேடமிட்ட கந்தசாமி இவர்.

கொஞ்ச நாளிலேயே, அந்த கிராமமும் சுற்றுப் பகுதியும் 'ப வைட்டமின்' புண்ணியத்தில் பசுமையாகிவிட, போலீசுக்கு மூக்கில் வேர்க்கிறது. 'ஏதோ கோக்கு மாக்கு நடக்குதுடோய்!' என்ற உள்ளுணர்வில், விசாரணையை ஆரம்பிக்கிறார் உள்ளூர் டிஐஜி பிரபு.

அடுத்த சில காட்சிகளில் நேர்மை, புஜ பல பராக்கிரமம் கொண்ட சிபிஐ பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரி கந்தசாமி (விக்ரம்தான்... ஆனால் இரட்டை வேடமல்ல!) அறிமுகமாகிறார்.

நாட்டில் நிலவும் அனைத்து குற்றங்களின் அடிப்படையும் பணம், லஞ்சம்தான் என்பதை ஆணித்தரமாக நம்பும் அவர் கறுப்புப் பணத்தை வெளிக் கொணரும் முயற்சிகளில் தீவிரமாகிறார்... அதில் பெரும் பணக்கார தொழிலதிபர் ஆசிஷ் வித்யார்த்தியுடன் மோதுகிறார். அவரது 1000 கோடி கறுப்புப் பணம், அதனுடன் மெக்ஸிகோ வரை நீளும் அந்நியத் தொடர்புகளைக் கண்டுபிடிக்கிறார்.

இதற்கிடையே ஆசிஷ் வித்யார்த்தியின் மகள் சுப்புலட்சுமி (ஸ்ரேயா)... தந்தைக்காக கந்தசாமியை பழிவாங்கப் புறப்படுகிறார். காதலிப்பது போல் நடிக்கத் துவங்கி காதலிக்கிறார்... எனப் போகிறது படம்.

கொஞ்சம் அந்நியன், கொஞ்சம் சிவாஜி என ஏற்கெனவே நாம் பார்த்துப் பழகிய அதே கதைதான். ஆனால் இந்தக் கதைக்காக விக்ரம் ரொம்பவே மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. குறிப்பாக அந்தப் பெண் வேட விக்ரமும், அவரிடம் மாட்டிக் கொள்ளும் மயில்சாமி, சார்லியும் வெடிச் சிரிப்புக்கு உத்தரவாதம்.

சூப்பர் ஹீரோவாக விக்ரம் கச்சிமாகப் பொருந்துகிறார். சேவல் வேடத்தில் அவர் பறக்கும் காட்சியை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். மெக்ஸிகோ சண்டைக் காட்சியில் லாஜிக் மீறல் நிகழாமல் பார்த்துக் கொண்டிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.

படத்தில் இன்னொரு சிறப்பு அம்சம் தேங்காய்கடை தேனப்பனாக வரும் வடிவேலு. வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார் மனிதர்.

ஸ்ரேயா கிட்டத்தட்ட அரை அல்லது முக்கால் நிர்வாணத்தில்தான் வருகிறார். ஆனாலும், அதைக் கவர்ச்சி என்றோ, கிளுகிளு தோற்றம் என்றோ கூட சொல்ல முடியவில்லை. ஒரு ஆண்பிள்ளை கணக்காகவே திரிகிறார் படம் முழுக்க. உடம்பைத் தேத்துங்க அம்மணி!

போலீஸ் ஆபீஸர் வேடத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் பிரபு. சுசி கணேசனும் ஒரு காட்சியில் வந்துபோகிறார்.

படத்தில் நம்மை மகா எரிச்சலுக்குள்ளாக்குவது தேவையற்ற நீளம். 3.15 மணிநேரப் படம் இது. நியாயமாக இரண்டு இடைவேளை விட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு காட்சியையும் இத்தனை நீளமாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லையே.

அதேபோல காட்சியமைப்புகளில் எந்த சஸ்பென்ஸும் இல்லாத தன்மையை ஆரம்பத்திலிருந்தே தொடர்வதைத் தவிர்த்திருக்கலாம் சுசி கணேசன். சீட் நுனிக்கு ரசிகனை வரவழைக்கும் விறுவிறுப்புத் தன்மை இல்லாததும் ஒரு குறைதான்.

மற்றபடி, ஒளிப்பதிவு, ஒலித் துல்லியம், வித்தியாசமான லொக்கேஷன்கள், இசை என தொழில்நுட்ப ரீதியில் ஏ கிளாஸ் இந்தப் படம் என்றால் மிகையல்ல.

தொடர்ந்து இலக்கில்லாமல் வந்து கொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் ஒரு நல்ல செய்தியோடு வந்திருக்கிற இந்த கலர்புல் 'கருத்து' கந்தசாமியை வரவேற்கலாம்.

கந்தசாமி - பொழுதுபோக்குக்கு உத்தரவாதம்!

ராகவன்

Posted by Admin 8/5/09



சாஃப்ட்வேர் ஆளுங்களையெல்லாம் சகட்டு மேனிக்கு போட்டுத்தள்ளும் ஹார்டு(வேர்) ஆசாமியின் கதை.
இந்த சைக்கோவை பொறி வைத்து பிடிக்கிற போலீஸ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது அவனை. ஏன் அப்படி செய்தான் என்பதை சிவப்பு ரோஜா கலரில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ரோஜா கலரை விட, துருத்திக் கொண்டிருக்கும் முள்தான் கலவரப்படுத்துகிறது.

சிறுவயதில் தப்பான அம்மாவை, அப்பா போட்டுத்தள்ளும் அந்த கொடூர காட்சியை பார்த்துவிட்டு பொம்பளைங்களே இப்படிதான்ங்கிற முடிவுக்கு வர்றாரு ஹீரோ. அதிலே ஒண்ணும் தப்பில்லேடா ராசாங்கிற மாதிரியே அமையுது சந்தர்ப்பங்கள். சென்னைக்கு வந்து தங்குற இடத்திலேயும் ஒரு ஆன்ட்டி, ரொம்ப வேண்(ட்)டி வேண்டி வில்லங்கத்துக்கு கூப்பிடுது. அவ்வளவுதான், ரத்தம் பார்த்திட்டு அங்கேர்ந்து கிளம்புறாரு ஹீரோ.

ஆட்டோ ஓட்ட போனாலும் அங்கேயும் வில்லங்கம். பின் சீட்டிலே படம் ஓட்டுற இன்னொரு ஜோடியை போட்டுத்தள்ளுகிறார். பிறகென்ன? சிட்டி அலர்ட் ஆகுது. இடையிலே இவரை காதலிக்கும் மாடல் ராதிகா மல்ஹோத்ரா, ராகவன் ரொம்ப நல்லவன்னு அவரை மீட்க போராடுறாரு. இப்படி போகுது கதை...

புதுமுகம் விஜித்துக்கு ஏமாளி முகம். அதுவே கதைக்கு சரியா செட் ஆகிறதுதான் நல்ல பொருத்தம். பீச்சில் பொம்பளைங்க மேலே கையை வைக்கும் ரவுடிகளை அவர் புரட்டி புரட்டி தாக்குவதில் கொஞ்சம் ஆக்ஷன் இமேஜூம் எட்டிப்பார்ப்பதால், அடுத்த படத்தில் அந்த ஏரியாவையும் யோசிக்கலாம்.

கலாச்சாரத்துக்கு எதிரா இருக்கிறவங்களை போட்டு தள்ளும் ராகவன் பக்கத்திலேயே அரைகுறை டிரஸ்சோட இருக்கிற ராதிகாவுக்கு அட்வைஸ் பண்ணணும்னு தோணலையே ஏன்? அது போகட்டும், ராதிகா கொப்பும் குலையுமா இருக்கார். நடிக்க வரலேன்னாலும், எதிர்காலத்தில் ஐட்டம் டான்சுக்கு தயாராகலாம்.

துங்கும் சிறுமியின் பாவாடையை சரி செய்யும் ராகவன், பறக்கிற அதன் மேலே ஒரு கல்லை வைத்துவிட்டு போவது டச்சிங். இன்னொரு காட்சியில் தனது டிரஸ்சை போட்டுக் கொள்ள சொல்லி அன்பு செலுத்தும் சாப்ட்வேர் வாலிபன், போதை தலைக்கேறியதும் அதை கழற்ற சொல்வது பணக்கார திமிரின் அடையாளம். இப்படி நுணுக்கமாகவும் சிந்தித்திருக்கிறார் இயக்குனர் பரந்தாமன்.

நீண்ட நாட்களுக்கு பிறகு கங்கை அமரன். இளையராஜா வாய்சில் பாடியிருக்கும் அந்த ஒரு பாடல் ஆஹா. ஒளிப்பதிவும் நேர்த்தி.
அட ராகாவன்னு அலுத்துக் கொள்ளும்படி இல்லை!



ஒரே கல்லூரியில் படிப்பவர்கள் பிரசன்னா, சந்தியா. அவர்களை காதலர்களாக பார்க்கின்றனர் சக மாணவர்கள்.
சந்தியா அக்காள் தாரிகாவுக்கு திருமணம் நிச்சயமாகிறது. பிரசன்னாவையும், இதர நண்பர்களையும் திருமணத்துக்கு அழைக்கிறார். சந்தியா அழகில் மயங்கும் மாப்பிள்ளை ஆர்.கே, தாரிகாவுக்கு பதில் சந்தியாவை மணக்க விரும்புகிறார். மின்சார ஷாக் கொடுத்தும் விஷம் தந்தும் தாரிகாவை கொல்ல முயற்சிக்கிறார். அதிலிருந்து தப்புகிறார் தாரிகா. மனமேடையில் தாரிகா சர்க்கரை நோயால் மயக்கமாகி விழ திருமணம் நிற்கிறது. நோயாளி பெண்வேண்டாம் என எதிர்க்கிறார் ஆர்.கே.யின் தாய். தாரிகாவுக்கு பதில் சந்தியாவை கட்டித்தர நிர்ப்பந்திக்கின்றனர். தந்தை நிழல்கள் ரவி சம்மதிக்கிறார்.

அதிரும் சந்தியா பிரசன்னாவுடன் ஊரை விட்டு ஓடுகிறார். எம்.எஸ். பாஸ்கரிடம் அடைக்கலமாகிறார்கள். அவர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முயற்சிக்க நாங்கள் காதலர்கள் இல்லை, நண்பர்கள் என்று குண்டு தூக்கி போடுகின்றனர்.

பிளாஷ்பேக்கில் பாலா, சந்தியா காதல் விரிகிறது. பாலாவை தேடி அலைகிறார் பிரசன்னா. அவரை கண்டு பிடிக்கும் போது வில்லன்களால் குத்தப்பட்டு கோமா நிலைக்கு போகிறார். பிரசன்னாவை அந்த நிலையில் விட்டு பாலாவுடன் போக மறுக்கிறார் சந்தியா. பிறகு நடப்பது கிளைமாக்ஸ்...

நட்பு, காதலுக்குள், கதையை புகுத்தி மனதை வருடியபடி நகர்த்துகிறார் இயக்குனர் வசீகரன். பிரசன்னா, சந்தியா நட்பு அழுத்தம். இருவரும் காதலர்கள் இல்லை என மறுப்பது திருப்பம். பாலாவுடன் பிரசன்னா மோதுவது... சந்தியா, அவரை விரும்புவது தெரிந்து கோவில் மணி அடித்து இருவரையும் சேர்ப்பது வலுவானவை.

காதலன் பாலாவை தேடி அலைவது வில்லனிடம் இருந்து அவரை காப்பாற்றி விட்டு வேனில் அடிபட்டு குற்றுயிராய் கிடப்பது என மனதை தொடுகிறார். சந்தியா துறு துறுவென வருகிறார்.

பாலாவுடன் காதல் வயப்படுவது கவிதை.... காதலனை தேடி பிரசன்னா படும் கஷ்டங்கள் அறிந்து காதலே வேண்டாம் ஊருக்கு போகிறேன் என்று அழும் போது நடிப்பில் மெருகு.... பாலாவும் நடிப்பில் போட்டி போட்டு உயர்கிறார். ஆர்.கே. வில்லத்தனம் மிரட்டல். பேராசிரியராக இருந்து ஆட்டோ டிரைவராக மாறும் எம்.எஸ்.பாஸ்கர் சிரிக்க வைக்கிறார். பரத்வாஜ் இசையில் பாடல்கள் இனிமை.. கவியரசு ஒளிப்பதிவில் ஊட்டி அழகு.

நட்பு, காதல் உணர்வுகளை இன்னும் உயிரோட்டமாக செதுக்கி இருக்கலாம்.

ஞாபகங்கள்

Posted by Admin



காதலி ஞாபகங்களில் வாழ்வை முடிக்கும் ஒரு கவிஞன் கதை....
பாடலாசிரியர் பா. விஜய் கதாநாயக அவதார மெடுத்துள்ளார். நண்பனின் நிஜக்கதை என்ற டைட்டிலுடன் படம் துவங்குகிறது. சினிமாவில் பாட்டு எழுதும் லட்சிய வேட்கையுடன் சென்னை வருகிறார் பா. விஜய். வடநாட்டை சேர்ந்த ஸ்ரீதேவிகா வீட்டின் மாடியில் வாடகைக்கு தங்குகிறார். இருவரின் சந்திப்புகள் காதலை விதைக்கிறது.

ஒரு கட்டத்தில் பிரிவினைவாத கும்பலுடன் பா. விஜய்க்கு தொடர்பு இருப்பதாக கருதி போலீஸ் பிடித்து சென்று ஜெயிலில் போடுகிறது. பிறகு அவர் நிரபராதி என அறியப்பட்டு விடுவிக்கப்படுகிறார்.

அதற்குள் ஸ்ரீதேவிகாவுக்கும் டார்ஜிலிங்கில் வசிக்கும் வைர வியாபாரிக்கும் கட்டாயபடுத்தி திருமணம் நிச்சயம் செய்து விடுகின்றனர். புகழ் பெற்ற சினிமா பாடலாசிரியர் ஆகனும் நிறைய விருதுகள் குவிக்கனும் அதுதான் என் ஆசை என்று கண்ணீரோடு சொல்லிவிட்டு கணவனுடன் பறக்கிறார் ஸ்ரீதேவிகா. காதலி பிரிவில் நொறுங்கும் பா.விஜய் அவர் ஆசைப்படி படிப்படியாக உயர்ந்து முன்னணி கவிஞராகிறார். ஒரு பாடலுக்கு தேசிய விருதும் பெறுகிறார்.

டெல்லி போய் விருதை பெறும் அவர் பழைய காதலியை பார்த்து விட்டு வர டார்ஜிலிங் செல்கிறார். தொழில் நஷ்டத்தில் கணவன் தூக்கில் தொங்கி சாக சொத்துக்களை இழந்து வறுமை பிடியில் காதலி தவிப்பதை ஒருவர் சொல்ல உடைகிறார்.

ஸ்ரீதேவிகாவோ கணவர் வெளியூர் போய் இருப்பதாக பொய் சொல்லி வீட்டுக்கு வந்த பா.விஜயை உபசரிக்கிறார். அதன் பிறகு நடப்பவை மனதை உருக்கவும் பிழியவும் செய்கின்றன.

லட்சிய வெறி... காதல் வலி பாத்திரத்தில் நடிகராக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் பா. விஜய். ஸ்ரீதேவிகா அழகை கவிதையில் வர்ணித்து காதல் வயப்படும் அவர் இன்னொருத்தனுக்கு அவளை நிச்சயம் செய்ததும் அழுது துடித்து பரிதாபபடவைக்கிறார்.

கணவனை இழந்து வீடும் ஜப்தியாகி சிதிலடைந்த அறையில் சாப்பாட்டுக்கே வழி இன்றி கஷ்டப்படும் காதலி நிலை கண்டு இடிந்து போகும் சீன்கள் அழுத்தமானவை... காதலி பிடி கொடுக்காமல் பேசியதால் அவர் விருப்பப்படி பெரிய கவிஞனானதை சொல்லாமல் வெளியேறுவது... டெல்லியில் தமிழ் சங்கத்தினர் நடத்தும் பாராட்டு விழாவில் காதலிக்காக எழுதிய ஞாபகம் இல்லையோ என் தோழி என்ற பாடலை பாடுவது... அந்த வழியே செல்லும் ஸ்ரீதேவிகா விழாவை ஏதேச்சையாக பார்த்து நிலை குலைவது... வீட்டுக்கு ஓடோடி வந்து பீரோவை திறக்க பா. விஜய் சொல்லாமல் வைத்து விட்டு போன விருது சான்றிதழ், செக் போன்றவைகளை பார்த்து தவிப்பது... கண்கணீல் நீர் கசிய வைக்கும் ஜீவனுள்ள பதிவுகள்...

ஸ்ரீதேவிகா அழகிலும், நடிப்பிலும் பளிச்சிடுகிறார். திருமணத்துக்கு முந்திய நாள் காதலனிடம் போய் விடிவதற்குள் என்னை முழுசாக அனுபவித்துக்கோ என்று அழுது புலம்புவது... விதவை கோலம், வறுமை வேதனைகளை மறைத்து காதலனிடம் சரளமாக பேசுவது... புகழ் பெற்ற கவிஞனான பிறகும் இன்னும் தன் ஞாபகத்திலேயே இருக்கிறான் என்ற உண்மைகளை அவன் பாடலிலும் வீட்டில் வைத்து போன விருது வகைகளிலும் கண்டு அழுது உடைவது... என நடிப்பின் உச்சம் தொட்டுள்ளார். ஆத்மார்த்தமான காதலை உயிரோட்டமான காட்சியமைப்புகளுடன் தொகுத்துள்ளார். இயக்குனர் ஜீவன். பிளாஷ்பேக்கை துண்டு துண்டாக காட்டியதால் மனதில் ஒட்டாமல் செல்கின்றன.பா.விஜய், ஸ்ரீதேவிகா இடையே காதல் மலரும் காட்சிகளையும் இன்னும் அழுத்தமாக்கி இருக்கலாம். பா. விஜய் உதவியாளராக வரும் சந்துரு, தமிழ்ச்சங்க பிரதிநிதியாக வரும் இயக்குனர் ஜீவன் பாத்திரங்களும் கச்சிதம். ஜேம்ஸ் விக் பின்னணி இசை பலமாக கை கொடுக்கிறது.

காவிய காதல்...


அந்தோணி யார்?னு அதிகம் குழம்ப தேவையில்லை. அவர் ஒரு அநாதைன்னு முதல் ரீலிலேயே சொல்லிவிடுகிறார்கள்.
பிறகு ஏன் இப்படி ஒரு டைட்டில்? அந்தோணியார் கோவிலை அடிக்கடி காட்டுவதால் இருக்கலாம். மேற்படி அநாதைதான் ஷாம். அந்த ஊரே போற்றி கொண்டாடுகிற அளவுக்கு பெரிய மனசு இவருக்கு. உடம்புக்கு சுகமில்லே. கடலுக்கு போகலே என்று கலங்கினால், அந்த குடும்பத்திற்காக வலையை எடுத்துக் கொண்டு கடலுக்கு போகிறார். கஞ்சா கடத்தலில் சிக்குகிற ஆசாமியை மீட்க, தானே கடத்தியதாக தலையை கொடுத்து இடுப்பை புண்ணாக்கிக் கொள்கிறார். இப்படி ஷாமின் பாத்திரத்தில் வழிய வழிய கருணை!

வாடகைக்கு படகு கொடுக்கிறார். தங்குவதற்கு வீடு கொடுக்கிறார். ஆனால், மீனவர்களின் உழைப்பையெல்லாம் குறைந்த விலைக்கு கூறு போடுகிறார் வில்லன் லால். ஏலம் என்ற பெயரில் இவர் நடத்தும் அராஜகம் பொறுக்காமல் குமுறும் ஊர் ஜனங்களுக்கு ஆதரவாக ஷாம் குரல் கொடுக்க, இவரை கண்டம் துண்டமாக வெட்டி கடலில் போட உத்தரவிடுகிறார் லால். கடலுக்குள் விழுந்த ஷாம், காய கல்பம் சாப்பிட்ட மாதிரி எழுந்து வர, ஆரம்பமாகிறது அதிரடி ஆட்டம். இடது கையால் இருபது பேரையும், வலது கையால் நாற்பது பேரையும் பறக்கவிடும் ஷாம் லாலுக்கு கொடுக்கிற இறுதி முடிவு என்ன? ஆங்.. சொல்ல மறந்தாச்சு. இடையில் ஷாமுக்கு லவ் டிராக்கும் உண்டு.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யனாக இந்த படத்திலும் பேராடியிருக்கிறார் ஷாம். சண்டைக்காட்சிகளில் அவர் காட்டும் உக்கிரம் பலே. ஆரம்பத்தில் அமைதியாகவும், அப்புறம் புயலாகவும் சீறும் போது நரம்புகளில் உஷ்ணம் ஏறுகிறது. காதல் டூயட்டுகளிலும் மின்னல் வேக ஆட்டம்.

ஹீரோயின் மல்லிகா கபூருக்கு மேக்கப்தான் ஓவர். நடிப்பென்னவோ டல். கடல் ஆராய்ச்சி செய்கிறவரிடம், நண்டு பிடி போடுகிற ஷாம் அவ்வப்போது இவரை கலகலக்க வைப்பது ஒரு சில டூயட்டுகளுக்கு உதவியிருக்கிறது.

விவேக்கின் மீனவ நண்பன் கெட்டப் தியேட்டரையே திக்கு முக்காட வைக்கிறது. காதலி மீளாள் உதவியோடு இவர் முன்னறே முயல்வதும், கூடவே இருக்கிற குளுவான்களே அதை கெடுத்துவிடுவதுமாக ஒரே அமர்க்களம்.

வில்லன் லால் எரிமலையாக பொங்கினாலும், ஒரே மாதிரி ஸ்டைலை ஃபாலோ பண்ணுவது சற்றே அலுப்பு.

கடலும், கடல் சார்ந்த பகுதிகளையும் ஒரு அலையின் பாய்ச்சலை போல புத்துணர்ச்சியோடு கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சாண்டோனியா. தினாவின் இசையில் மல்லாக்கொட்டை கண்ணு..., மணியோசை கேட்கலியோ... இனிமை.

திமிங்கலத்தை நினைத்து வலை வீசியிருக்கிறார் புதுமுக இயக்குனர் சி.டி.பாண்டி. கிடைத்ததென்னவோ வெறும் கெண்டை குஞ்சுகள்!

Vamanan / வாமனன்

Posted by Admin 8/2/09

Well much ahead for the first 15mins of this film, I felt so fascinated with the gripping start of tale. A Political murder and a new-fangled camera attached to mini-chopper capturing those shots.

Indeed, I was so enthralled with the very stylish making. But sooner, on the very next moments I had to regret for feeling so-high about Ahmed. Know what? He has so cleverly copycatted the not-so famous Hollywood film ‘Following’ directed by Christopher Nolan. Of course, Christopher Nolan has been a great inspirer for many filmmakers in our Kollywood. Even Murugadoss had polished his ‘Mementoes’ and turned it into Ghajini.

Anand (Jai) with the dreams of becoming a great actor comes to Chennai and dwells in his friend’s place (Santhanam). He falls in love with Divya as he meets her over the railway station and with his friend’s advice of imitating the natural mannerisms of strangers; Anand keeps following a stylish man (Raghuman). Cut to a different track, Vinod an ad filmmaker uses a new-modeled mini-helicopter that works on remote control that has camera attached. Accidentally, the control is lost and camera flies over to a altitude capturing the murder of well-renowned politician (Delhi Ganesh) by Anbu (Sampath).

Vinod is murdered by Anbu’s henchmen and Actress Pooja (Lakshmi Rai) tends to be the next victim. Anand becomes so friendly with Raghuman and he’s none other than an unique burglar who loves breaking into the people’s house and get to know about their privacy. But things turn to be topsy-turvy for Anand when he’s accused of murdering Pooja.

Jai has matured a lot on his performance and has gone ahead in places with the instructions of Ahmad. Priya Anand doesn’t get much scope to showcase her potentials while Lakshmi Rai has done a good job. Raghuman again as a baddie steals the show and Santhanam adds to the humor quotients. His encounters with Oorvasi are mind-boggling and sense-of-timing is unbeatable. Sampath and Thalaivasal Vijay as usual have done justice to their roles.

Ahmad as mentioned earlier has carefully inherited the narration of ‘Following’ and tried to implement some smart moves during the penultimate sequences.

Musical score by Yuvan is middling and background score offers more to the pace of screenplay. Aravind Krishna’s glossy shots are quite impressive.

‘Vamanan’ is a film you can watch if you aren’t aware about ‘Following’ and it’s a good start by Ahmed.

Verdict: Once and not more than that.

Banner: Dream Valley Corporation
Production: Ravendran
Direction: Ahmed
Star-casts: Jai, Priya, Lakshmi Rai, Raghuman, Sampath, Santhanam, Oorvasi and many others.
Music: Yuvan Shankar Raja


வாமனன்

சுப்பிரமணியபுரம் வெற்றிக்குப்பிறகு ஜெய் நடித்திருக்கும்படம். சூப்பர் ஹீரோவாக பன்ச் டயலாக் பேசி எதி‌ரிகளையும், நம்மையும் வதம் பண்ணாமல் யதார்த்தமாக வந்து போவதற்கு முதலில் சபாஷ்.


webdunia photoWD
இரண்டு டிராக்காக பயணிக்கிறது கதை. ஜெய்க்கு சினிமாவில் ஹீரோவாகும் ஆசை. ஊ‌ரிலிருந்து கிளம்பி வந்து நண்பன் சந்தானத்தின் அறையில் தங்கி சென்னையில் வாய்ப்பு தேடுகிறார். ஊ‌ரிலிருந்து கிளம்பி வரும் ஹீரோவுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காகவே சென்னையில் ஒரு காமெடி நண்பர் இருப்பது இந்தப் படத்திலும் ‌ரிப்பீட்.

ஜெய் நடிக்க வாய்ப்பு கேட்டு போகும் இடங்கள் வாய்ப்பு தேடுகிறவர்களுக்கு பாடசாலை. திட்டு வாங்கிக் கொண்டு அதை சமாளிக்கும் இடத்தில் ஜெய் ' 'ஜெய்'க்கிறார்.

ப்‌ரியாவை பார்த்ததும் காதல் வருவதும், மோதலில் தொடங்கும் காதல் பிறகு கூடலில் முடிவதும் பழம் பஞ்சாங்க எபிசோட். ப்‌ரியாவின் அம்மா ஊர்வசியை சமையல் நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பு நடத்துவதாக கூறி ஜெய்யும், சந்தானமும் கலாய்க்கும் இடத்தில் வயிறு புண்ணாகிறது. ஊர்வசியின் நடிப்புக்கு நகைச்சுவை மாமணி பட்டமே தரலாம்.

காதலும் கலாட்டாவுமாக செல்லும் கதையில் க்ரைமை சேர்க்கிறது லட்சுமிராயின் மரணம். மாடலாக வந்து சொற்ப நேரத்திலேயே உயிரை விடுகிறார் லட்சுமிராய். அவரது கொலைப்பழி ஜெய் மீது விழ, பரமபத ஆட்டம் தொடங்குகிறது.

வாய்ப்பு தேடும் இளைஞனாக யதார்த்தத்தை மீறாமல் நடித்திருக்கிறார் ஜெய். ப்‌ரியாவுக்கு அதிக வேலையில்லை. கவர்ச்சியுடன் முடிந்து போகிறது லட்சுமிராயின் அத்தியாயம். ஆச்ச‌ரியம் என்றால் அது சந்தானம். இரட்டை அர்த்த வசனம் இல்லாமலே காமெடியில் கலக்குகிறார்.

அரசியல் சண்டையில் டெல்லி கணேஷை தீர்த்து கட்டும் சம்பத், அவருக்கு உதவி செய்யும் போலீஸ் அதிகா‌ரி தலைவாசல் விஜய், எதிர்பாராத வில்லன் ரகுமான் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

போலீசிடமிருந்து தப்பித்து ரகுமானிடம் அடைக்கலமாகும் ஜெய்யிடம், நான்தான் லட்சுமிராயை கொலை செய்தேன் என ரகுமான் கூறும்போது சூடு பிடிக்கிறது திரைக்கதை.

தமிழ்ப்பட கிளைமாக்சில் வரும் கட்டி முடிக்கப்படாத பில்டிங்கில்தான் இந்தப் படத்தின் கிளைமாக்சும். ரகுமானும்., ஜெய்யும் மோதும் காட்சியை ஆக்ரோஷத்துடன் எடுத்த அதே நேரம் புத்திசாலித்தனமாக மோதலை முடித்ததற்கு இயக்குனரை பாராட்டலாம்.

யுவனின் இசை படத்தின் ப்ளஸ். அதிலும் ஏதோ செய்கிறாய் பாடல் தாலாட்டுகிறது. படத்தின் குவாலிட்டியை உயர்த்தியிருக்கிறது அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு. பழக்கமான கதையை ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள். ஒருமுறை பார்க்கலாம்.




Firstly, I would like to appreciate Arun Vaidyanathan for bringing technical revolution to Tamil Cinema at contemporary times. Of course, he had pioneered with the concept of ‘Red One Camera’ over here. Perhaps, it was really great to heed for the appreciations rendered to this film across various film festivals.

But, it’s different when it comes to analyzing the film ‘Acchamundu Acchamundu’. Moreover, I just would like to refer this film to a Hollywood movie titled ‘When a Stranger Calls’. I’m sure this isn’t a remake or nothing more off same conceptualization. Both the films have good concept on the papers but failed on the screenplay.

One thing Arun Vaidyanathan should’ve done is ‘Market Research and Audiences’ Psychology of South Indian people.

Senthil (Prasanna) with an executive job in New Jersey leads a happy life with his wife (Sneha) and child Rinku. Here enters a painter Robinson (John Shea) who’s basically a psychotic person interested in child abuse of sexual harassment. How Senthil saves his child from the evil plans forms crux of the story.

On the performance line, Prasanna hasn’t done anything more appreciable. Director Arun Vaidyanathan has just made the performers to enunciate English with ‘Stupid American slang’. Most of the times, their mannerisms looks more artificial and rest of the characterizations caricatured.

John Shea looks so pudden-head in his acts and maybe Arun has tried depicting him so naturally.

Karthik Raja’s musical score is just mediocre and background score by Martio is somewhat good. Of course, Arun has tried to scare the children and few weak-hearted audiences with loud music and sound editing by Kunal.

If the filmmaker had intentions about passing on a social message, he could’ve made a short film or documentary. But why drag so long for couple of hours and finally project the computerized presentation.

So, ‘Acchamundu Acchamundu’ has only limited probabilities of surviving in the box office as it fails to impress the B and C centres. As well miniscule audiences and some wannabe filmmakers would appreciate Arun Vaidyanathan for some technical achievements.

Verdict: Average


Home ------------------------------------ ------ Movie Reviews/விமர்சனம்



அச்சமுண்டு அச்சமுண்டு

பேச்சில் மட்டுமே வெளிப்படும் இந்திய கலாச்சாரத்துக்குப் பயந்து சினிமாக்காரர்கள் விலகிச் செல்லும் பிரச்சனைகளில் ஒன்றை அலசுகிறது அறிமுக இயக்குனர் அருண் வைத்தியநாதனின் அச்சமுண்டு அச்சமுண்டு.

முழுக்க அமெ‌ரிக்காவில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் ஆவி பேய் கதையல்ல. குலை நடுங்க வைக்கும் க்ரைம் கதையுமல்ல. ஆனால், அச்சத்தில் பல நேரம் நம் முதுகு ஐஸ்கட்டியாக சில்லிடுகிறது.

பிரசன்னாவும், சினேகாவும் அமெ‌ரிக்காவில் தங்களது எட்டு வயது மகளுடன் தனியாக வசிக்கிறார்கள். பிரசன்னா சாஃப்ட்வேர் இன்‌‌ஜினியர். வெண்ணையாக வழுக்கிச் செல்லும் வாழ்க்கையில் வெங்காயத்தை நசுக்கிவிட்ட மாதி‌ரி சில சம்பவங்கள் நடக்கின்றன.

தங்களது வீட்டை யாரோ கண்காணிப்பது போலவும், மகளை யாரோ கடத்த முயல்வது போலவும் சினேகாவுக்கு தோன்றுகிறது. முதலில், தனிமையின் பயம் என அதை ஒதுக்கும் பிரசன்னா, முகமூடி அணிந்த உருத்தைப் பார்த்ததும் சினேகாவின் பயத்தில் தானும் பங்கு போட்டுக் கொள்கிறார்.

அந்த மர்ம நபர் யார்? எதற்காக அவன் வீட்டை நோட்டம் போடுகிறான்? பிரசன்னா விடைகளை கண்டுபிடிக்கும் போது அவருடன் நாமும் அதிர்ந்து போகிறோம்.

உலகம் முழுவதும் உள்ள, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதலை படமாக்கியிருப்பதற்காக இயக்குனருக்கு முதல் பாராட்டு. இளம் இந்திய தம்பதிகளின் வாழ்க்கையை, ரொமான்ஸை, அவர்களின் சின்னச் சின்ன உரசல்களை அவர்களுக்கே தெ‌ரியாமல் படம் பிடித்தது போன்ற மேக்கிங் படத்தின் ஆரோக்கியமான அம்சம்.

பிரசன்னாவும், சினேகாவும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஹீரோ, ஹீரோயின் கெமிஸ்ட்‌ரி என்பார்களே, பிரசன்னா, சினேகா காட்சிகள் அதற்கு சிறந்த உதாரணம்.

பெயின்டராக வரும் ஜான் ஷா நல்ல தேர்வு. வீக்னஸை கட்டுப்படுத்த முடியாமல் அவர் காட்டுக் கூச்சல் போடுகையில் நமக்கு வியர்க்கிறது. பயத்தை மீட்டுவதில் பெரும் பங்கு வகிக்கிறது கார்த்திக் ராஜாவின் வயலின். அவர் இசைக்காமல் விட்ட மவுனங்களையும் ரசிக்க முடிகிறது.

ரெட் ஒன் கேமராவில் காட்சிகள் கண்ணை கவர்கின்றன. மெதுவாக நகரும் படத்தின் யதார்த்தமே பல நேரம் படத்துக்கு வில்லனாகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் சொல்ல வந்த விஷயத்தில் மேலும் சுவாரஸியம் கூடியிருக்கும்.

சினிமா என்றால் இரண்டரை மணி நேரம் ஓட வேண்டும் என்பதையும் துணிச்சலாக உடைத்திருக்கிறார் இயக்குனர். ஒன்றரை மணி நேரப் படத்தில் பாடல்கள் இரண்டும் துருத்தி நிற்கின்றன. துணிந்து கத்தி‌ரி போட்டிருக்கலாம்.

அச்சமுண்டு அச்சமுண்டு - குறைகள் இருந்தாலும் குறைத்து மதிப்பிட முடியாத படம்.



‘For every action, there’s an equal and opposite reaction’ – Newton’s innovative and pragmatic law seems to be the sole backdrop of every aspect in human life. Debutant Ananda Narayanan has made it appealingly presented on the screens.

The film doesn’t carry any big star casts on title cards and yet the strong content makes it big. But the small diminishing factor comes through the entangled screenplay. It’s well and good Maestro Ilayaraja has scored music, but why insert unwanted songs. When things are gripping, songs for heroines’ introduction is really disappointing.

The opens with Pandi (Akil), a Jail warden filing the record about a convict who has snatched gold and valuable articles and one of the surprisal comes through a statement, ‘Pandi, he has got your Vandana’s gold chain too’. Within fraction of moments, the film swaps backs to the past days of Pandi, a pickpocket in Chennai with his gan
g of friends. They’re so talent in cutpurse acts. Naturally, after committing fraudulent acts Pandi starts realizing his mistakes with the victims affected by his deed. On the pars, there’s his ladylove (Meera Nandan) correcting his ways. But finally, when things come clear on the way, he has to go through a great loss that will turn his life upside down.

It’s all about the concept ‘ You throw a ball on wall, it bounces back to you’ and it has a good social message.

Akil seems to have gone ahead from his debut film ‘Kalloori’. He’s so good looking on his physiques and improvised a lot on gestures and dialogue deliveries. On the pars, Meera Nandan from God’s own country makes a good start in Kollywood. Shruthi Nair as flower vendor does an appealing touch on her Tamil Slang and strong characterization.

Director Ananda Narayanan has well delineated each characterization doesn’t let them loose with an incomplete approach. But, the elite group of audiences may not love this film for a raw naturalistic touch.

Cinematography by Azhagappan on Chennai is perfect and so does the editing of VT Vijayan.

Dialogues are okay on certain points. Ilayaraja’s musical touch works better than songs on background score.

On the whole, ‘Vaalmiki’ will bring home the bacon for producers with B and C centres getting with likeliness for the film.

Verdict: Watch it once for a different experience…

Banner: Vikatan Talkies
Production: Srinivasan
Direction: Ananda Narayanan
Star-casts: Akil, Meera Nandan, Shruthi Nair, Gopi and many others.
Music: Maestro Ilayaraja
Cinematography: N. Azhagappan
Editing: V.T. Vijayan




வால்மீகி


கெட்டவனை திருத்தும் ஹீரோயின். தமிழ் சினிமா பலமுறை அடித்து துவைத்து காயப் போட்ட கதை. அறிமுக இயக்குனர் அனந்த நாராயணன் கதையை சொல்ல எடுத்துக் கொண்டிருக்கும் களம் தமிழுக்கு புதுசு.

அழுக்கான மனிதர்கள், குப்பையும் கூளமும் நிறைந்த குறுகலான தெருக்கள், மனிதன் வசிக்கவே முடியாத சே‌ரி குடியிருப்புகள், கைவிடப்பட்ட கல்லறைத் தோட்டம்... தமிழ் சினிமா தனது கேமரா கண்களிலிருந்து மறைக்க விரும்பும் சென்னையின் அசலான முகத்தை அதன் அழுக்கோடும், அழகோடும் அள்ளி வந்திருக்கிறது அழகப்பனின் கேமரா.

பிக்பாக்கெட்டாக வரும் அகில் தனது கேரக்டருக்காக நிறைய உழைத்திருக்கிறார். சென்னை தமிழில் இன்னும் சிரத்தை கூடியிருந்தால் அவரது அழுக்கு கேரக்டருக்கு மேலும் அழகு சேர்ந்திருக்கும்.

மீரா நந்தன் கிண்டர் கார்டன் டீச்சர். பைத்தியத்திடம் சிக்கிக் கொள்ளும்; அவரை அகில் காப்பாற்ற, அகில் மீது பைத்தியமாகிறார் மீரா. அவருக்கொரு கொடுமையான பிளாஷ்பேக்.

அகில் திருந்துவதற்காக இயக்குனர் வைத்திருக்கும் காட்சி, நமது கட்டுப்பட்டை மீறி கண்ணீரை துளிர்க்க வைக்கிறது. பாலியல் தொழிலாளியாக மாறிய பெண், என்னை ம‌ரியாதையா அடக்கம் பண்ணுவியா என கேட்பது பொட்டில் அறையும் வசனம்.

பூக்கா‌ரியாக வரும் தேவிகா அகிலிடம் தனது திருமணத்தின் போது அடுக்கும் நீள வசனத்தை தன்னம்பிக்கை நூலில் சேர்க்கலாம். அவரது ஆடம்பர திருமணம் இயக்குனர் கோட்டைவிட்ட இடங்களில் ஒன்று.

அஜயன் பாலா‌விடம் சே‌ரி பாஷை அருவியாக கொட்டுகிறது. அவரது சகோத‌ரி பாசம் சென்டிமெண்ட் குறையை போக்குகிறது. ஆண்களிடம் மட்டுமே பழகும் பெண் நல்ல கற்பனை.

ஒவ்வொரு திருட்டின் பின்னணியிலும் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் இருக்கிறது என்ற கருத்தை வால்மீகியில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த காட்சிகள் பலவற்றில் நாடகத்தனம்.

என்னடா பாண்டி பாடலை தவிர மற்றவை இளையராஜாவா இசை என்று கேட்க வைக்கின்றன. பின்னணி இசையில் மட்டுமே ராஜா தெ‌ரிகிறார்.

படத்தின் கதைக் களத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருப்பது படத்தின் மிகப் பெ‌ரிய பலம். பலவீனம் நிறைய. அகில் ஒரு பிக்பாக்கெட் என்பதை மீரா தெ‌ரிந்து கொள்ள வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட அந்த அணிவகுப்பு, மீராவின் பிளாஷ்பேக், அவரது திடீர் மரணம்...

அ‌ரிதாரம் பூசாத கதாபாத்திரங்களுக்காகவும், வழக்கமான குத்துப் பாடல்களை தவிர்த்ததற்காகவும் வால்மீகியை ஒருமுறை பார்க்கலாம்.

Modhi Vilayadu Movie Review

CAST: Vinay, Kajal Agarwal, Kalabhavan Mani, Santhanam, Yuva, Haneefa etc

DIRECTOR: Saran

The break that Saran took after his box office success Vattaram seems to have been worthwhile. His new film Modhi Vilayadu has all the makings of becoming a hit what with a well picked group of actors, a good screenplay and stylish rendition.

Kalabhavan Mani plays Rajan Vasudev who is the millionaire owner of the OPM Group of companies. This globetrotting business magnate has a suave son Uday Vasudev (Vinay) who zips around in his Ferrari and has a good time, thanks to the stash of money which his father gives him.

Uday lives with Madan (Yuva) who is his father's business partner. Rajan Vasudev is very protective about his son and so has a personal security guard (Datu Ram) trail Uday as he parties around the city. Uday's Ferrari is one day dented by the carelessness of a college student L R Eswari (Kajol Agarwal). Uday is livid and decides to punish her in his inimitable style as Eswari does not apologise for damaging his car.

She pays for her carelessness by doing the household chores in Uday's house and while she is straightening out the house, Madan finds himself in love with her. Uday is unaware of this development though.

Uday too now has a soft corner for Eswari which she reciprocates. Madan is oblivious of this triangular development.

Just when Madan and Uday get ready to sort this out with Eswari, tragedy strikes in the form of Rajan's rival who sets out to kill Uday. Unfortunately it is Madan who gets killed.

Rajan's rivals take over Madan's property and Uday finds himself on the streets running for cover and he finally gets to Rajan, who now has a new tale to unfold. Rajan tells Uday that Madan was his true heir and not Uday. Uday understands that he was a mere front for Rajan who wanted to protect his son Madan.

Uday is bewildered at this game playing and resolves to teach Rajan a lesson. With his friends Kadugu (Santhanam) and Chanakya (Cochin Haneefa) Uday lays out a plan. The rest of the film is all about how the plan is executed. The screenplay and plot are well written. Starting with the good-looking Vinay, Kalabhavan Mani the mimicry specialist, Cochin Haneefa and Santhanam who contribute to the comedy sequences, everyone has done their bit to make this film enjoyable.

Vinay's acting skills have vastly improved.

Kajol plays her role to the best of her ability.

The music is yet another highlight of this film ­ with the Hariharan ­ and Leslie Lewis team debuting in Kollywood with music that is young and refreshing. Even though Karun's cinematography is commendable, a slightly faster pace would have added value to this film.




அம்பானி மாதி‌ரி பெரும் பணக்கா
ரர் கலாபவன் மணி. அவரது ஒரே மகன் வினய். வளர்ப்பு மகன் யுவா. கலாபவன் மணியால் பாதிக்கப்பட்ட மகாதேவன் வினய்யை கொலை செய்ய பாங்காங்கிலிருந்து கில்லர் ஒருவனை வரவை
க்கிறார். கில்ல‌ரின் துப்பாக்கிக்கு வினய்க்குப் பதில் யுவா பலியா
கிறான்.

அன்றிலிருந்து வினய்யின் ஆடம்பர வாழ்க்கை பறிக்கப்படுகிறது. அவரை கொலை செய்ய எதி‌ரிகள் துரத்துகிறார்கள். அடைக்கலம் தேடி அப்பா கலாபவன் மணியிடம் சென்றால், “நீ சாக வேண்டியவன்தான்” என்று புதுக்குண்டை போடுகிறார். அவர் அப்படி சொல்ல என்ன காரணம்? வினய் இழந்த தனது ஆடம்பர வாழ்க்கையை மீட்டெடுத்தாரா?

ஆறு வ‌ரியில் சுவாரஸியமாக தெ‌ரியும் கதை பதினாலு ‌‌ரீலில் படுத்தியெடுக்கிறது. கலாபவன் மணியின் உண்மையான மகன் யுவா. தொழில் எதி‌ரிகளிடமிருந்து மகனை காப்பாற்ற அவனுக்கு பினாமி போல் வினய்யை வளர்க்கிறார். இந்த உண்மையை கலாபவன் மணி வெளியே சொன்னால்தான் அவரது எதி‌ரிகளிடமிருந்து வினய் தப்பிக்க முடியும். மகன் இறந்த ஆத்திரத்தில் அதை செய்ய மறுக்கிறார் கலாபவன் மணி.

இந்த நேரத்தில் ஹீரோ என்ன செய்வார்? கோபத்தில் பொங்கியெழ வேண்டும். கலோனியல் கஸின்சும், தேவாவும் மோதி விளையாடு என்று ஹைபிட்‌ச்சில் பாட்டுப் பாட வினய்யும் பொங்கியெழுகிறார். அதற்கு அடுத்துவரும் காட்சிகள்தான் காமெடி.

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் கலாபவன் மணியை அவரது செக்யூ‌ரிட்டி அலுவலகத்தில் நுழைய மறுப்பதோடு கன்னத்தில் அறைகிறான். பர்சனல் செக்ரட்ட‌‌ரி முதல் லோக்கல் போலீஸ் வரை யாருக்கும் அவரை அடையாளம் தெ‌ரியவில்லை.

ரோட்டோரத்தில் பிச்சைக்காரர்களுடன் சாப்பிட்டு, தெருவோரம் உறங்கி, லாக்கப்பில் அடைபட்டு... அட, என்னதான் நடக்கிறது என்று கலாபவன்மணி மாதி‌ரியே நாமும் குழம்பினால், எல்லாம் வினய்யின் திருவிளையாடல் என்கிறார் இயக்குனர். வினய் சொன்னதற்காக கலாபவன்மணியின் ஆட்கள் அவரையே அடையாளம் தெ‌ரியாத மாதி‌ரி நடித்தார்களாம். காதுல பூ கேள்விப்பட்டிருக்கோம். சரண் பாத்தி கட்டி தோட்டமே வைக்கிறார்.

காஜல் அகர்வாலின் காதல் எபிசோட் இன்னொரு காமெடி. வினய்யின் விலையுயர்ந்த காருக்கு 3 லட்சம் செலவு வைக்கிறார் காஜல். அதை ஈடு செய்ய வினய்யின் வீட்டில் வேலை செய்கிறார். காமெடி என்னவென்றால் காஜலும் ஒரு மில்லியன‌ரின் மகள்.

வினய்க்கு பணக்கார வேஷம் கச்சிதமாக பொருந்துகிறது. அவரது அரைகுறை தமிழ் சில நேரம் தேன், பல நேரம் தேள். யுவா நம்பிக்கை தரும் அறிமுகம். ஹனிஃபாவின் டயலாக் டெலிவ‌ரியும், மயில்சாமியின் லிக்கர் காமெடியும் படத்தின் ‌ரிலீஃப். சந்தானத்திடம் சத்தம் அதிகம்.

கலோனியல் கஸின்சின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். பாடல்கள் படத்தின் மிகப்பெ‌ரிய பலம். அதற்கு திருஷ்டி ப‌ரிகாரமாக பின்னணி இசை. பல இடங்களில் இசைக்கருவிகளை மீறி டயலாக்கை பு‌ரிந்து கொள்ள தனித் திறமை வேண்டும்.

கலை இயக்குனர் ‌ரிச்சான பொருட்களால் ஃபிரேமை நிறைத்திருக்கிறார். அதனால் ஒளிப்பதிவாளருக்கு அதிக வேலையில்லை. படத்தின் இரு பெரும் பகுதிகள் காஜல் அகர்வால் - வினய் காதல் மற்றும் கலாபவன்மணி - வினய் மோதல். இரண்டுமே நம்ப முடியாத நாடகமாகிவிட்டதால் மோதி விளையாடு பாதி கிணறே தாண்டுகிறது.

ஊசிப் போன வடையை ஏசி அறையில் ப‌ரிமாறினால் எப்படியிருக்கும்? மோதி விளையாடு அந்த வகை.

About Us