Content feed Comments Feed
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

கடைசியாக வெளியான வில்லு, குருவி இரண்டும் சுமார் படங்கள். 49 வது படமான வேட்டைக்காரனை எப்படியாவது ஓட்டியாக வேண்டும்.
விஜய் அடிக்கும் அரசியல் ஸ்டண்ட் கூட வேட்டைக்காரனை ஓட வைக்க‌த்தான் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கும் அளவுக்கு வேட்டைக்காரன் வெற்றி அவருக்கு தேவைப்படுகிறது. கும்பிட போன தெய்வம் பைபாஸில் குறுக்கே வந்த மாதி‌‌‌‌ரி வேட்டைக்காரன் வெற்றிக்கு ஒரு வழி பிறந்திருக்கிறது. படத்தின் தயா‌‌‌‌ரிப்பாளர் சன் பிக்சர்சுக்கு படத்தை விற்றிருக்கிறார்.

சுமார் படங்களையே அபி‌‌‌‌ரிதமான விளம்பரத்தால் சூப்பர் ஹிட்டாக்கி பலரது வயிற்றில் அமிலத்தை அள்ளி தெ‌ளித்து வருகிறது சன் பிக்சர்ஸ். இவர்கள் வாங்கிய அயன் கண்டபடி ஓடி கலெக்ஷனில் சாதனைப் படைத்தது தெ‌ரியும். இப்போது வேட்டைக்காரனையும் இவர்களே வாங்கியிருக்கிறார்கள். எப்படி விளம்பரம் செய்வார்கள் என கற்பனை செய்வதே கடினம்.

சன் வேட்டைக்காரனை வாங்கியதால் படம் எப்படியும் ஓடிவிடும் என்ற தெம்பு விஜய்க்கு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு ஏற்பட்டிருக்கிறதோ இல்லையோ, அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.


கலைப்புலி தாணு தயாரிப்பில் விக்ரம் நடித்து வெளியாகியுள்ள கந்தசாமி படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்து ரசித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அவருக்காக சிறப்புக் காட்சி ஒன்றை சென்னை ப்ரிவியூ திரையரங்கில் ஏற்பாடு செய்திருந்தார் கலைப்புலி தாணு.

படத்தை ரசித்துப் பார்த்த ரஜினி, காட்சிகளை சிறப்பாக படமாக்கியுள்ளதாகவும், நடிப்பிலும் சண்டைக் காட்சிகளிலும் விக்ரம் மிகவும் சிரத்தை எடுத்து உழைத்திருப்பதாகவும் பாராட்டினார். படத்தின் நாயகன், நாயகி, இயக்குநர் , தயாரிப்பாளர் என ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில பாராட்டினாராம் ரஜினி.

ரஜினி இந்தப் படம் பார்த்த நிகழ்வை பெரிய அளவில் விளம்பரமாகப் பயன்படுத்த தயாரிப்பாளர் தாணு முடிவுசெய்துள்ளார்.

ரஜினி படம் பாரத்த செய்தியை மீடியாவுக்கு தெரிவிக்க தாணு முடிவு செய்த போது, ‘இப்போதுதான் கந்தசாமி பற்றிய டாக் நன்றாக உள்ளதே… இன்னும் ஓரிரு நாள் கழித்து இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல செய்தியைத் தாங்கி வந்துள்ள ஒருபடம் இன்னும் அதிக மக்களைச் சென்றடைய நானும் உதவியதாக இருக்கும்’, என்றாராம் ரஜினி. இந்தப் படம் குறித்த தனது கருத்துக்களை வீடியோ பேட்டியாகவும் வழங்கியுள்ளாராம் ரஜினி.

"ரஜினி யின் இந்தப் பெருந்தன்மையை, நட்பை வாழ்நாளெல்லாம் மறக்க மாட்டேன்...", என்றார் கலைப்புலி தாணு.


யாரைப் பார்த்தாலும் பிகினி, பிகினி என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு வேண்டாமப்பா இந்த நீச்சலுடைக் காட்சிகள் என்று கூறுகிறார் சந்தியா.
காதல் நாயகி சந்தியா இப்போதும் அதே பட்டப் பெயருடன்தான் இருக்கிறார். காரணம், இடையில் அவர் நடித்த படங்கள் அவருக்கு பெரும் பிரேக்கைத் தராததே.

தற்போது இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம், கன்னத்தில் ஆப்தரக்ஷா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறாராம்.

எந்த மொழிப் படங்களாக இருந்தாலும் ஒரு விஷயத்தில் மட்டும் படு தெளிவாக இருக்கிறார் சந்தியா. அது கவர்ச்சிகரமான, நீச்சல் உடைக் காட்சிகளில் நடிப்பதே இல்லை என்பதே.

யாரைப் பார்த்தாலும் பிகினி உடை என்கிறார்கள். கவர்ச்சிப் போட்டி என்கிறார்கள். எனக்கு இதுகுறித்தெல்லாம் கவலையே இல்லை. நான் எல்லை மீறி நடிக்கவே மாட்டேன். குறிப்பாக நீச்சல் உடைக் காட்சிகளில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன்.

எனக்கெல்லாம் அந்த உடை பொருந்துமா என்றே தெரியவில்லை. இதுவரை யாரும் அப்படி நடிக்குமாறு கேட்டதில்லை. கேட்டாலும் நடிக்க மாட்டேன் என்கிறார் தெளிவாக.

இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் படத்தில் வித்தியாசமான காஸ்ட்யூமில் பரதநாட்டியம் ஆடியிருக்கிறாராம் சந்தியா. எப்படி என்று கேட்டால் படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க என்கிறார் சிரித்தபடி.

மீராஜாஸ்மின் கதாநாயகியாக நடித்த ஆதிநாராயணா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஒரு ஆச்சர்யம். காலை பத்து மணிக்கெல்லாம் மேடையில் ஆஜராகியிருந்தார் சிம்பு.
பகல் பத்து மணி என்பது அவருக்கு பெரும்பாலும் அதிகாலைதான்! இரவெல்லாம் விழித்திருந்து பணியாற்றும் இரவு பறவையல்லவா அவர்?

ஆடியோவை வெளியிட்டு பேசிய சிம்புவின் வார்த்தைகளில் அளவு கடந்த யதார்த்தம். “இந்த விழாவுக்கு போக போறேன்னு சொன்னதும் பெரிய பட விழான்னா பரவாயில்லே. ஏன் இதுபோன்ற சின்ன படத்தோட விழாக்களில் கலந்துக்கறீங்கன்னு கேட்டாரு. நான் அவரிடம், பெரிய படம்னா ஆறு மணி நேரம் ஓடுமான்னு கேட்டேன். வெற்றி படமா இருந்தாலும் சரி, தோல்விப்படமா இருந்தாலும் சரி. எல்லாமே மூணு மணி நேரம் ஓடுறதுதான். நிறைய செலவு பண்ணி எடுக்கிற படங்கள் கூட தோல்வி அடையுது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படுகிற படங்கள் ஹிட் ஆகுது. அப்படி பார்த்தா குறைந்த பட்ஜெட்டில் எடுத்து நன்றாக ஓடிய படம்தான் பெரிய படம்”

பேப்பர் விளம்பரங்களில் கூட ரஜினி சார் நடிச்ச படத்திற்கும் ஒரே அளவுதான் டிசைன் பண்ண முடியும். என்னோட படங்களுக்கும் ஒரே அளவுதான் டிசைன் பண்ண முடியும். அதுக்கு மேல நினைச்சாலும் பிரிண்ட் பண்ண அனுமதியில்லை. அப்படி இருக்கும் போது நல்லா ஓடுற படங்கள்தான் பெரிய படம். இந்த ஆதிநாராயணா படமும் பெரிய ஹிட் ஆகி பெரிய படம் லிஸ்ட்டில் இடம் பிடிக்கணும் என்றார்.

பின்னாலேயே பேச வந்த பேரரசு, இப்போதெல்லாம் தங்கள் நடித்த படங்களுக்கான ஆடியோ வெளியீட்டு விழா, வெற்றி விழாக்களுக்கு கூட கதாநாயகிகள் வருவதில்லை. ஆனால் ஆந்திராவில் அப்படியில்லை. எல்லா விழாக்களுக்கும் ஹீரோயின்கள் வராங்க. அந்த நிலை இங்கேயும் வரணும் என்றார் கவலையோடு! இந்த விழாவில் மீராஜாஸ்மின் வரவில்லை என்பதுதான் பேரரசுவின் கவலைக்கு காரணம்.

மிஷ்கின் இயக்கத்தில் கமல்! கடந்த மாத செய்திகளில் முதலிடத்தை பிடித்தது இந்த செய்திதான். கிட்டதட்ட உறுதியான இந்த கூட்டணியில் இப்போது விரிசல் என்கிறார்கள். ஏன்?
ஸ்விங் வோட் என்ற படத்தைதான் அங்கேங்கே திருத்தம் செய்து தமிழுக்காக உருவாக்கியிருந்தாராம் மிஷ்கின். இந்த படத்தின் கதை என்ன? பிரதமர் நிற்கும் தொகுதியில் தேர்தல் முடிந்து வோட்டு எண்ணிக்கை நடக்கிறது. விழப்போகிற ஒரே ஒரு தபால் வோட்டை வைத்துதான் பிரதமர் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலை. அந்த ஒரு வோட்டு ஒரு இராணுவ வீரனுடையது. அவனை எப்படியாவது கன்வின்ஸ் செய்து அந்த வோட்டை தானே பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமரே அவனது வீட்டுக்கு போகிறார். தனது வோட்டு வேண்டும் என்றால் நீங்கள் இந்த திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறான் இராணுவ வீரன். பிரதமர் அவன் கேட்பதையெல்லாம் செய்தாரா? மக்களுக்கு உதவுகிற அந்த திட்டங்கள் நிறைவேறியதா? இதுதான் க்ளைமாக்ஸ்.

முதலில் இந்த கதையை பிடித்திருப்பதாக சொல்லி நடிக்க ஒப்புக் கொண்ட கமல், அரசியல்வாதிகளுக்கு எதிரான தோற்றத்தை உருவாக்கப் போகும் இந்த கதையில் நடிப்பதா என்று பிறகு யோசித்தாராம். விளைவு? “வேற கதை இருந்தா சொல்லுங்களேன் மிஷ்கின்” என்ற பதில் வந்திருக்கிறது அவரிடமிருந்து. அதுவும் சொந்த கற்பனையாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துவிட்டாராம். இதென்னடா வம்பா போச்சு என்று தவிக்கிறார் மிஷ்கின்.

டிவிடி இல்லாமல் ஒரு சினிமாவை உருவாக்கணும் என்றால் நடக்கிற காரியமா?


இந்தியாவிலேயே முதல் முறையாக கந்தசாமி படத்துக்காக 'மொபைல் டிக்கெட் பூத்' நேற்று சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த பஸ் சென்னை மாநகர் முழுக்க சுற்றிவர இருக்கிறது. கந்தசாமி படத்துக்கு டிக்கெட் வேண்டுவோர் இந்த பூத்திலேயே பதிவு செய்து கொள்ளலாம். இதைத் தவிர, படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலரை இந்த பூத்துக்குள்ளேயே பார்க்கலாம்.

இந்த பூத் அறிமுக விழா சென்னை அபிராமி மெகா மாலில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கொடியசைத்து துவக்கி வைத்தார். படத்தில் அபிராமி ராமநாதன், இயக்குநர் சுசி கணேசன், அபிராமி மெகா மால் செயல் இயக்குநர் நல்லம்மை ராமநாதன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கந்தசாமி படத்தின் சென்னை நகர உரிமையை அபிராமி ராமநாதன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நாதஸ்வரங்கள் முழங்க ஆதவன் படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. டைரக்டர் ஷங்கர் வெளியிட திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் நடிகர் விஜய், சூர்யா, சசிக்குமார், விவேக், கவுதம் மேனன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, எந்த படத்திற்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்தார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். அவர் இசையமைத்த மற்ற படங்களுக்கு பாடல்களை ஒரே நேரத்தில் அவர் கொடுத்ததில்லை. பகுதி பகுதியாக பிரித்துதான் கொடுப்பார். அவரிடமிருந்து பாடல் வரிகள் வர வர படப்பிடிப்பை நடத்துவார்கள். ஆனால் இந்த படத்திற்கு மட்டும்தான் மொத்தமாக ஒரே நேரத்தில் பாடல்களை கொடுத்தார். எங்களது அடுத்த படத்திற்கும் அவர்தான் இசையமைப்பாளர் என்றார் சந்தோஷமாக.
பின்னாலேயே பேச வந்த ஹாரிஸ், “இந்த படத்திற்கு நான்கே மாதத்தில் ஆறு பாடல்களை அமைத்துக் கொடுத்தேன். அதற்கு காரணம் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஆர்க்கெஸ்ட்ராவுக்கு உடனுக்குடன் பணத்தை கொடுத்ததுதான். இப்படி எனது டென்ஷனை தயாரிப்பாளர் குறைத்ததால்தான் ட்யூனில் என்னால் கவனம் செலுத்த முடிந்தது” என்றார்.

சசிக்குமார் பெயரை சொல்லும் போதெல்லாம் அரங்கமே அதிரும்படி கைதட்டினார்கள் ரசிகர்கள். “பாராட்டுற மனசு வேணும். இங்கே நிறைய பேருக்கு அது இருப்பதில்லை. என்னோட சுப்ரமணியபுரம், பசங்க, நாடோடிகள் படத்தை பார்த்திட்டு உடனுக்குடன் பாராட்டுவார் சூர்யா சார். இப்படி இன்னொருவரை பாராட்டுகிற மனசு இருப்பதால்தான் அவர் மற்றவர்களால் பாராட்டுகிற அளவுக்கு உயர்கிறார்” என்றார் சசி.

“வாரணம் ஆயிரம் பாடலை கேட்டுட்டு “மாப்பு... ஸாங் சூப்பர்டா” என்று மெசேஜ் அனுப்பினார் விஜய். ஸ்கிரீன்லே ஆதவன் பாடல் ஓடும் போது என்னோட டான்ஸ்சை விஜய் பார்க்கிறாருங்கிற குறுகுறுப்பு இருந்திச்சு. இந்த விழாவுக்கு வந்த அவருக்கு நன்றி” என்றார் சூர்யா.

“சூர்யாவோட ஒவ்வொரு படம் வரும்போது அவரோட அசுர உழைப்பும், பிரமாண்ட வளர்ச்சியும் நல்லா தெரியுது. இந்த படம் பெரிய ஹிட் ஆகணும்” என்று வாழ்த்தினார் விஜய்.

முன்னதாக திரையிடப்பட்ட இரண்டு பாடல்கள் அசத்தலோ அசத்தல்!


கத்தியே துரு பிடிச்சிருச்சு. ஆனா அது ஏற்படுத்தின காயம் அப்படியேதான் இருக்குங்கிற மாதிரி, சிம்பு சரியான நேரத்துக்கு ஸ்பாட்டுக்கு வந்தாலும், லேட்டா வர்ற மாதிரியே தோணுதாம்.
அதுதான் அவரோட இமேஜ். இந்த பாழாப்போன இமேஜை பள்ளம் தோண்டி புதைக்கிறதுதான் சிம்புவோட இப்போதைய தலையாய கடமையா இருக்கு.

சிலம்பாட்டம் படத்திலே நான் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தேன். அதோட பாதிப்பு இப்பவும் இருக்கு. மறுநாள் காலையிலே எழுந்து கொள்ளவே முடியலே. தசைப்பிடிப்பு, நரம்பு கோளாறு என்று ஏகப்பட்ட பிரச்சனையை அந்த ஒரு மூவ்மெண்ட் பண்ணிருச்சு. இப்படி டெடிக்கேட்டிவா ஒரு வேலையை செய்யும்போது சில பிரச்சனைகள் வரதான் செய்யும். விண்ணை தாண்டி வருவாயா ஷ§ட்டிங்கிலே சொன்ன நேரத்துக்கு முன்னாடியே நின்னுருக்கேன் என்கிறார்.

த்ரிஷாவுக்கும் இவருக்கும் காதல்னு எழுதி பத்திரிகையாளர்களுக்கும், அப்படி இல்லே இல்லேன்னு மறுத்து சிம்புவுக்கும் அலுத்தே போயிருக்கும். இருந்தாலும் அந்த கேள்விக்கு மறுபடியும் ஒருமுறை பதில் சொல்கிறார் சிம்பு. “எனக்கும் நயன்தாராவுக்கும் இருந்த காதலை வெளிப்படையா ஒத்துக்கிட்டேன். அது மாதிரி காதல் இருந்தா மறைக்காம ஒத்துக்கிற டைப் நான். எதுக்காக இப்போ காதல் வந்தா மறைக்கணும்? அம்மாவிடம் பொண்ணு பார்க்க சொன்னேன். ஆனா பொண்ணு இப்படிதான் இருக்கணும்னு நான் போட்ட கண்டிஷனை கேட்டு அடிக்கவே வந்திட்டாங்க” என்றார். அப்படி என்ன கேட்டாரு?

“அது எதுக்கு உங்களுக்கு?” என்கிறார் பொல்லாத சிரிப்புடன். அட ஆமான்ல...

Vijay confirms his political entry

Posted by Admin 8/5/09

Vijay


Actor Vijay has confirmed his political entry once again at a public meeting held in Pudukkottai recently.

According to the actor, he will be setting foot into politics very soon, once his recently launched people’s movement reaches its high.

This announcement was made at the inauguration of a computer centre in Pudukkottai, which was organized by his fans.

Vijay commented, “Everybody wants my newly formed ‘Makkal Iyakkam’ (people’s movement) to become a political movement soon and I am also interested in it.

I am getting ready for this now. Unlike cinema, politics needs a lot of ground work and I am preparing myself for that.

Now I am reading the writings of Gandhi and Nehru about politics and how to behave towards others. Tolerance is very important for a politician. Now I’m learning all these things through the experiences of our legendary politicians….”

Karthi

Paruthiveeran fame Karthi’s next film Aayirathil Oruvan will hit the screens in a month or two. Now the actor is concentrating on his third film Paiyya with Tamanna under Lingusamy’s direction.

The actor has also signed a new project for his home productions Studio Green. Titled as Siruthai (Cheetah), the film will be directed by Kathir (Director of Thenavattu). According to sources, Anushka may be the heroine; it is believed that Karthi will be essaying two roles in the film.

Remember, his brother Surya is going to act in a film titled Singam (Lion) for Hari.

So, a ‘lion’ and a ‘cheetah’ will be coming from the same den!

Vettaikkaran

Vijay’s Vettaikkaran set was completely destroyed in a big fire accident which occurred in the early morning hours of Friday at the AVM studios, Chennai.

The fire is said to have started actually on Floor number six at a set put up by a private television channel for one of their reality dance shows and spread to Vettaikaran sets on the smaller floor seven.

Nobody was injured as the day’s shooting was over and all the employees and technicians had left from the place.

The sixth floor set put up by the television company and the entire studio fittings, including the roofing was totally gutted. The smaller floor seven was partially burnt with some of the studio fittings and roofing still intact.

The producer of Vettaikkaran and Studio owner AVM Balasubramaniyam said that the shooting of Vettaikaran will resume tomorrow.

A R RahmanOscar award winner A R Rahman’s six years old son Alim is going to make his debut in Hollywood as a singer.

He has sung a song under his father’s music for the Hollywood film Couples Retreat. The film is a romantic comedy, which has been directed by Peter Billingsly with the lead actors Vince Vaughn, Kristen Bell and Jason Bateman.

Alim has sung a complete song in this film and the entire family is proud of his talent.

Rahman has introduced many new talents to Indian film industry. Earlier Rahman had introduced his nephew GV Prakash Kumar as a singer in Gentleman.

Ajith Kumar

Ultimate Star Ajith Kumar and Saran were busy shooting for ‘ASAL’ across various countries. Precisely, they were exactly in Singapore when the film ‘Modhi Vilayadu’ was released and the duo couldn’t make up for the premiere show herein Chennai.

Finally, a red carpet premiere was held in Singapore with Ajith Kumar, Saran and few other crew members heading the for the show. Ajith Kumar was curious to witness the latest film of Saran and got astounded withthe stylish sleek visuals and good story.

SocialTwist Tell-a-Friend



தன்னுடைய எல்லா படத் தயாரிப்புகள் மற்றும் படங்களின் விழாக்களிலும் ரஜினி இருக்க வேண்டும் என்ற 'பேராசை'க்கு சொந்தக்காரர் ஷங்கர்.
காரணம், "என் வீ்ட்டில் என் மூத்த சகோதரரைப் போலவே ரஜினி அவர்களை நான் மதிக்கிறேன்... வீட்டில் விசேஷம் நடக்கும்போது, நமது சகோதரர் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைப் போன்றதுதான் என் படங்கள் தொடர்பான அனைத்து விழாக்களிலும் இருக்க வேண்டும் என ஆசைப்படுவதும். அவர் வந்தால் எனக்கு ஒருவித மனத் திருப்தியும் நிம்மதியும் கிடைக்கிறது!"

ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் தொடங்கி, காதலன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அவர் தயாரித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி... இப்படி பல படங்களின் பூஜை, ஆடியோ வெளியீடு அல்லது வெற்றி விழா முதலானவற்றில் ரஜினிதான் சிறப்பு விருந்தினர்.

இப்போது ஷங்கர் 'வீட்டில்' மீண்டும் ஒரு விசேஷம். ஒரு தயாரிப்பாளராக அவர் தனது நான்காவது படத்தை வெளியிடுகிறார். படத்தின் பெயர் ஈரம். இயக்கம் அறிவழகன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, ஆடியோ வெளியீடு நடக்கிறது.

சத்யம் திரையரங்கில் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி நடக்கும் இந்த விழாவின் தலைமை விருந்தினர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.

முதல் ஆடியோ சிடி மற்றும் கேசட்டை ரஜினி வெளியிடுகிறார். இயக்குநர் எம் சசிகுமார் பெற்றுக் கொள்கிறார். தமிழ் திரையுலகப் பிரமுகர்கள் ராம நாராயணன், சிவசக்தி பாண்டியன், கலைப்புலி சேகரன், அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.


Rajnikanth to release audio of Shankar’s ‘Eeram’


Chennai, Aug 5 (IANS) Tamil film superstar Rajnikanth will release the audio of “Eeram”, produced by Shankar’s ‘S’ Pictures and directed by newcomer Arivazagan.
The audio of the film is slated to be released Aug 9 in Chennai.

When Shankar reportedly sent a list of VIPs to Rajnikanth to select one who would be accepting the audio-cassettes and CDs of the film, the superstar is said to have struck down all the names and asked Shankar to call film director Sasikumar for the function, industry insiders said.

Meanwhile, the film is reported to have overshot its estimated budget by several lakhs of rupees and this hasn’t gone down well with Shankar. Arivazhagan, however, is said to have assured Shankar that the film would be worth spending for.

**

Trisha stays away from Gopichand’s birthday bash

Trisha is presently doing a Telugu film “Shankam” opposite Gopichand. The actor, who has made a name for himself, decided to celebrate his birthday on location in grand style, unit sources said.

Cakes were ordered and the place was decorated beautifully. Everything was ready and the birthday boy and the rest of the crew were waiting for the leading lady of the film to turn up.

Trisha, however, was said to be inside her make-up van unmindful of the birthday bash that was being planned outside, unit sources added.

Though Gopichand was about to cut the cake, he was made to wait by the director who assured him that Trisha would join them.

She, however, never came out and finally the birthday celebrations took place in her absence, sources said.




உள் மனசில் வைத்த ஐஸ் கிரீம் மாதிரி ஜில்லென்று இருப்பவர் சரண்யா மோகன். யாரடி நீ மோகினி, ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடிக்குழு என்று இவர் நடித்த படங்களில் பாதி சூப்பர் ஹிட்! மீதி படங்களோ சோக லிஸ்ட்!
வெண்ணிலா ஹிட்டுக்கு பிறகு சென்னையில் பங்களா பிடித்து செட்டில் ஆகிவிடுவார் என்று எதிர்பார்த்தால், கேரளாவில் பி.ஏ.ஆங்கில இலக்கியம் படிக்க போய்விட்டாராம். அவ்வளவுதானா தமிழ்? கேரளாவுக்கு போன் போட்டு கேட்டால், “ஐய்யே... கொஞ்சம் கேப் விட்டா அப்படியே வீட்டுக்கு அனுப்பிடுவீங்களே” என்றார். (ஆஹா மூச் வந்திருச்சுங்க..) தமிழ்ல நடிக்க நல்ல கதையா கேட்டுட்டு இருக்கேன். சீக்கிரம் அறிவிப்பு வரும் பாருங்க. வெண்ணிலா கபடிக் குழு படத்திற்கு பிறகு ஏராளமான படங்களில் நடிக்க ஆஃபர் வந்திச்சு. வந்தோமா, போனோமான்னு இல்லாம நல்ல கதையா இருக்கணும் என்று மெனக்கெடுறேன். அதனாலதான் இந்த கேப் என்றார்.

ஓய்வு நேரத்தில் சங்கீதம் கத்துக்கிறேன். யாராவது பாட கூப்பிட்டா சொல்லுங்க என்று ஐஸ்கிரீமில் மேலும் கொஞ்சம் சர்க்கரையை கொட்டுது பொண்ணு. ரீசண்ட்டா ஒரு கதை கேட்டேன். அப்படியே பிரமிச்சு போயிட்டேன். உடனே ஓ.கே சொல்லிட்டு ஷ§ட்டிங் போயாச்சு. கெமிஸ்ட்ரின்னு படத்து பேரு. வுஜி தம்பின்னு மலையாளத்திலே பேமஸ் ஆன டைரக்டர். புதுமுக ஹீரோவுடன் பாதி படத்துக்கு மேலே முடிஞ்சாச்சு. இதுக்கு பிறகு தமிழ்தான் என்றவரிடம், கிளாமரா நடிப்பீங்களா என்ற கேள்வியை கேட்டது தப்பா போச்சு. எதிர் முனை கட்! சிறிது நேரம் கழித்து நல்லாதானே பேசிட்டு இருந்தீங்க. ஏன் இப்படியெல்லாம் கேட்கிறீங்க என்றார்.

ஆஹா, கவர்ச்சிங்கிற வார்த்தையை சொன்னதுக்கே கட்டா? போச்சுரா...



மதுரை தமுக்கம் மைதானத்தில் வைரமுத்துவின் திரைப்பாட்டு திருவிழா எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மத்திய ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சர் முக அழகிரி பங்கேற்றார்.

வைரமுத்துவைப் பாராட்டிப் பேசிய அவர் கூறியதாவது:

சென்னையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடந்த பட்டமளிப்பு விழாவில் நான் கலந்து கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் கவிஞர் வைரமுத்துவின் திரை இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

ஒரு தம்பி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவிட்டாலும் இன்னொரு தம்பி வைரமுத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் பழைய பாடல்களை விரும்பி கேட்பவன். புகழ் பெற்ற பழைய கவிஞர்கள் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம், ஜி.ராமநாதன், கண்ணதாசன் போன்ற வர்களின் பாடல்களை ரசித்து கேட்பேன்.

இவர்களின் மொத்த உருவமாக வைரமுத்து இருக்கிறார். தமிழ்திரை உலகத்திற்கு கவிஞர் வைரமுத்துவின் சேவை தொடர்ந்து தேவை, என்று பாராட்டினார்.

வைரமுத்து பேசுகையில், அண்ணன் மு.க. அழகிரி மதுரைக்கு மட்டுமல்ல, மக்களுக்கே காவலன் என்று பாராட்டினார்.

தொடர்ந்து பேசுகையில், தன்னுடைய சின்னச் சின்ன ஆசைகள் பாடல்தான் ஏஆர் ரஹ்மானை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றதாகக் குறிப்பிட்டார்.



கிராபிக்ஸ் புண்ணியத்தால் 'வருஷம் 16'க்கு திரும்புகிறார் குஷ்பு. அதாவது 16 வயதுப் பெண்ணாக அவரை மாற்றப் போகிறார்கள்.
பிரஷாந்த் நாயகனாக இரட்டை வேடத்தில் நடிக்க, அவரது தந்தை தியாகராஜன் தயாரித்து இயக்க உருவாகும் பிரமாண்டப் படம் பொன்னர் சங்கர்.

கலைஞர் கருணாநிதியின் பொன்னர் சங்கர் நாவல்தான் திரைப்படமாகிறது.

இப்படத்தில் தாமரை நாச்சியார் என்ற முக்கிய கேரக்டரில் குஷ்பு நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வருபவர் ஜெயராம்.

இந்தக் கதைப்படி குஷ்பு கேரக்டருக்கு வயது 16. ஜெயராமுக்கோ 20. இந்த வயதில் குஷ்பு, ஜெயராம் இருப்பதைப் போல திரையில் காட்ட அதி நவீன கிராபிக்ஸ் உதவியை நாடியுள்ளனர்.

இதற்காக ஹாலிவுட்டிலிருந்து 12 பேர் கொண்ட டீம் ஒன்று சென்னைக்கு வந்து இறங்கியுள்ளது. இந்தக் குழு லார்ட் ஆப் தி ரிங்ஸ் படத்தில் பணியாற்றியவர்களாம்.

வள்ளுவர் கோட்டத்தில் வைத்து குஷ்பு, ஜெயராமின் உருவங்களை பதிவு செய்து அவர்களுக்கான டூப் உடல்களை உருவாக்கியுள்ளனர்.

அச்சு அசல், 16 வயதுப் பெண்ணாக இப்படத்தில் வருவாராம குஷ்பு. கிராபிக்ஸ் வேலை என்று தெரியாத அளவுக்கு தத்ரூபமாக இருக்குமாம்.

வருஷம் 16 படத்துக்குப் பிறகு, 16 வயது குஷ்புவை பார்க்கப் போவது நிச்சயம் ரசிகர்களுக்கு குஷியாகத்தான் இருக்கும்.



எனக்கும், நான் சுயம்வரம் மூலம் தேர்ந்தெடுத்த எலேஷ் பருஜன்வாலாவுக்கும் இடையே நடக்கும் திருமணத்திற்கு அனைவரையும் அழைக்கப் போகிறேன்.
எனது முன்னாள் காதலர் அபிஷேக் அவஸ்திக்கும் நிச்சயம் அழைப்புண்டு. ஆனால் எனது தாயாரை மட்டும் நான் அழைக்கப் போவதில்லை என்று கூறுகிறார் ராக்கி சாவந்த்.

இந்திய திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக, சுயம்வரம் நடத்தி தனது மணாளனை தேர்வு செய்துள்ளார் ராக்கி சாவந்த்.

படு கோலாகலமாக ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்தி நேரடியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்ய மாலை போட்டு எலேஷை தனது மணமகனாக தேர்வு செய்துள்ளார் ராக்கி.

சுயம்வரம் முடிந்த அன்றே திருமணமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. திருமணத்தைக் காண ராக்கியின் முன்னாள் காதலர் அவஸ்தியும் வந்திருந்தார். ஆனால் எலேஷ் , ராக்கியுடன் நன்கு பழகிப் புரிந்து கொள்ள அவகாசம் கேட்டதால் நிச்சயதார்த்தத்தை மட்டும் முடித்துக் கொண்டு திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர்.

அவஸ்தியின் வருகை குறித்து ராக்கி கூறுகையில், நான் அவஸ்தியை முற்றிலும் மன்னித்து விட்டேன். அவர் வந்திருந்தார் என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டு போய் விட்டேன். அவர் வந்தது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் நிச்சயம் அவரை வரவேற்றிருப்பேன்.

நேற்று வரை அவர் எனது காதலர். இன்று அவர் எனது நல்ல நண்பர் என்றார் ராக்கி.

ஆனால் தனது தாயாரை மட்டும் மன்னிக்கவே மாட்டாராம் ராக்கி. இதுகுறித்து கூறுகையில், எனது தாயாரைப் பற்றி மட்டும் கேட்காதீர்கள். அவரால் நான் நிறைய அவஸ்தைப்பட்டு விட்டேன். அவரால் ஏற்பட்ட வலியை மறக்க முயலுகிறேன். நிச்சயம் அவரை நான் திருமணத்திற்கு அழைக்கப் போவதில்ல என்றார் கோபமாக.

திருமணத்திற்குப் பின்னர் கனடாவில் செட்டிலாகும் எண்ணம் ராக்கியிடம் இல்லையாம். எலேஷ் கனடாவில்தான் தொழில் புரிந்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.

எனக்கென்று இங்கு ஒரு தொழில் உள்ளது. அதை நான் பார்க்க வேண்டும். எனக்காக வாழ ஆர்வமாக உள்ளவர் எலேஷ். எனவே அவர்தான் எப்படி இதை மெயின்டெய்ன் செய்ய வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும் என்கிறார் புன்னகையுடன்.

டோரன்டோவில் எலேஷின் சகோதரிக்கு கல்யாணம் நடைபெறவுள்ளதாம். அதற்கு எலேஷுடன் ஜோடியாக கலந்து கொள்ளப் போகிறாராம் ராக்கி.



ராவண் படத்தில் மணிரத்னம் சேர்க்க விரும்பிய காளைச் சண்டை இடம்பெறப் போவதில்லை. விலங்குகள் நல வா‌ரியத்துடன் ஏற்பட்ட கசப்பைத் தொடர்ந்து இந்த கனத்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
கேரள வனப்பகுதியில் நடந்த படப்பிடிப்பில் யானை ஒன்று மதம் பிடித்ததோடு யானைப் பாகனையும் கொன்றது. இதைத் தொடர்ந்து விலங்குகள் நல வா‌ரியம் பல கட்டுப்பாடுகளை ராவண் யூனிட் மீது திணித்தது. யானைகளை வைத்து படப்பிடிப்பு நடத்த முறைப்படி மணிரத்னம் அனுமதி வாங்கவில்லை என்று அது குற்றம்சாட்டியது.

மேலும், இந்த விவகாரத்தில் ச‌ரியான விளக்கம் அளிக்காதபட்சத்தில் காளை போன்ற விலங்குகளை வைத்து படப்பிடிப்பு நடத்த முன்பு அளித்திருந்த அனுமதியை மறுப‌ரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் எனவும் பயமுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து படத்தில் தான் வைக்க விரும்பிய காளைச் சண்டையை படமாக்கப் போவதில்லை என மணிரத்னம் முடிவெடுத்துள்ளார். படப்பிடிப்புக் குழுவும் கேரளாவிலிருந்து ஊட்டிக்கு ஷிப்டாகியுள்ளது. இன்று முதல் கேரள வனப்பகுதியில் எடுத்த காட்சிகளின் கண்டினியூட்டி காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்படுகின்றன.

ஊட்டி என்றால் பிரச்சனையில்லை. தமிழ்நாடு. கலையை, கலைஞர்களை நேசிப்பவர் ஆட்சி செய்கிறார். இடையூறு வந்தாலும் அவை காலைப் பனியாக ஆவியாகிவிடும். தை‌ரியமாக தான் நினைத்ததை மணிரத்னம் படமாக்கலாம்.



முன்னணி நடிகர்களின் பாடுதான் திண்டாட்டம். புதுமுகங்களுடன் நடிக்க முடியாது, பீல்டு அவுட்டானவர்களையும் ஜோடி சேர்க்க முடியாது. முதல் வ‌ரிசை அசின், த்‌ரிஷா போன்றவர்களோ இந்தியில் பிஸி.
இருப்பது தமன்னாவும், அனுஷ்காவும், நயன்தாராவும், இந்த மூன்று பேருடன் எத்தனை படங்களில்தான் ஜோடி சேருவது?

தனுஷ் நடிக்கும் மாப்பிள்ளை ‌‌ரீமேக்கில் அமலா நடித்த வேடத்தில் அசின் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது இயக்குனர் சுரா‌ஜின் எண்ணம். எண்ணத்தை உடனே செயல்படுத்தும் விதமாக அசினை தொடர்பு கொண்டு கேட்டதற்கு கிடைத்த பதில், நோ கால்ஷீட். அம்மணி இந்தியில் பிஸியாம்.

தமன்னாவுடன் படிக்காதவன் படத்தில் இப்போதுதான் தனுஷ் நடித்தார். ஸ்ரேயாவுடன் குட்டி படத்தில் நடிக்கிறார். த்‌ரிஷாவுடன் ஆடுகளம் இருக்கிறது. ச‌ரி, இலியானாவை கேட்கலாம் என்றால் அவர் படத்தின் பட்ஜெட்டில் 70 சதவீதத்தை சம்பளமாக கேட்டு திணறடித்திருக்கிறார்.

இறுதியில் ஹன்ஷிகாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். மணிசர்மா படத்துக்கு இசையமைக்கிறார். கேமரா வெங்கடேஷ். இத்தேஷ்ஜெபக் படத்தை தயா‌ரிக்கிறார்.

About Us