கல்லூரி சம்பந்தமான காட்சிகள் என்றாலே காதல், அது இது என்று எக்கச்சக்கமாக மசலாவுடன் கலந்தே இருக்கும். ஆனால் புகைப்படம் படத்தில் இந்த மாதிரியான ஐட்டங்கள் எதுவும் இல்லாமல் கல்லூரியின் யதார்த்தமான வாழ்க்கையை மட்டும் பதிவு செய்திருக்கிறார்களாம்.
இதுவரைக்கும் வந்த தமிழ் படங்களில் எதுவும் கல்லூரி நட்பைப் பற்றி புகைப்படம் அளவுக்கு விவரித்ததில்லை என்றே சொல்லாம். புகைப்படத்தின் இயக்குநர் ராஜேஷ் லிங்கம் ‘புகைப்படம் என்பது ஒரு மந்திரச் சொல். ஒரு போட்டோவை கையில் எடுத்துப் பார்த்தோமானால் அந்த காலகட்டத்துக்கே நாமளும் போயிடுவோம். 1980ல் எடுத்த போட்டோவை இப்போது பார்த்தீங்கன்னா... உடனே நம்ம நினைவுகளும் பின்னோக்கி போயிடும்.. நம்ம மைண்ட் முழுக்க அங்க இருக்கும். அந்த மாதிரி நினைவுகளை பின்னோக்கிப் பார்க்கிறது ரொம்ப பேருக்குப் பிடிக்கும். நிறைய பேரு நிகழ்கால வாழ்க்கையில் வாழ்வதே இல்லை... கடந்த காலத்தை நினைத்துக் கொண்டே வாழ்ந்துட்டு இருக்காங்க.... கடந்து போன வாழ்க்கையும் தொலைந்து போன சந்தோஷங்களும் திரும்ப கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதை இந்தப் போட்டோவை வைத்துத்தான் ஞாபகப்படுத்துகிறோம். அப்படிப்பட்ட ஒரு கற்பனை உலகத்துக்குப் பேருதான் புகைப்படம்...’ என்கிறார் அழுத்தம் திருத்தமாக. |
0 comments