இந்தப் படத்தின் படப்பிடிப்பு குற்றலாத்தில் நடைபெற்றது. இதில் விக்னேஷூக்கு ஜோடியாக லக்க்ஷணா நடிக்கிறார். பாலகணேஷா என்பவர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். படத்தில் காதலின் மிகுதியால் கதாநாயகி கன்னத்தைக் கடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. காட்சியைப் பற்றி விக்னேஷ் - லக்க்ஷணாவிடம் விளக்கிச் சொல்லிய இயக்குநர் ‘இந்தக் காட்சி தத்ரூபமாக வர வேண்டும்...’ என்று சொன்னார். லக்க்ஷணாவின் கன்னத்தில் வாய் வைத்து கடிக்க ஆரம்பித்த விக்னேஷ் ஒரு கட்டத்தில் பலமாகக் கடித்துவிட்டார். லக்க்ஷணாவோ வலியால் அலறினார். இதைப் பார்த்த படப்பிடிப்புக் குழுவினர் நன்றாக நடிக்கிறார்கள்... என்று நினைத்துக் கொண்டிருக்க லக்க்ஷணாவின் கன்னத்தில இருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. இதனால் கோபம் அடைந்த லக்க்ஷணா ஹீரோவை திட்ட ஆரம்பித்தார். பின்பு இயக்குநர் தலையிட்டு சமாதானப்படுத்தினார். |
இந்தப் படத்தை இயக்கி வருகிறார். படத்தில் காதலின் மிகுதியால் கதாநாயகி கன்னத்தைக் கடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. 
0 comments