Content feed Comments Feed


‘மதராஸி’ படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகம் ஆனார் வேதிகா. அதன்பின்பு தமிழில் ‘முனி’, ‘காளை’, ‘சக்கரக்கட்டி’ போன்ற படங்களில் நடித்தார்.
எந்தப் படமும் சொல்லிக் கொள்ளும்படியாகப் போகவில்லை. இப்போது அருண் விஜய்யுடன் வேதிகா நடித்துள்ள ‘மலை மலை’ வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் இவர் நடிப்பு பாராட்டுப்படியாக உள்ளது.
இதனால் சந்தோஷத்தில் இருக்கும் வேதிகா. நீச்சல் உடையில் நடிக்கமாட்டேன் என்கிறார். கதைக்கு அவசியம் என்றால் கூட நீச்சல் உடையில் நடிக்கமாட்டேன் என்று கறாராகக் கூறுகிறார் வேதிகா. இவர் ‘பாலிவுட்டுக்குப் போகமாட்டேன்... தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மட்டும்தான் கவனம் செலுத்துவேன்...’ என்றும் சொல்கிறார் வேதிகா.

ஆமாமா... இவர் ஏன் சும்மா பாலிவுட்டுக்குப் போகப் போகிறார்? யாராவது வாய்ப்பு இருக்குன்னு சொல்லட்டும் அப்புறம் இவர் போகிறாரா இல்லையான்னு பார்க்கலாம்...

0 comments

Post a Comment

About Us