| யுனெடெட் ஸ்டேட் மற்றும் இந்திய எஜுகேஷனல் பவுன்டேசன் இணைந்து உலக அளவில் ஆசிரியர் பரிமாற்றம் மூலம் கலாசாரம் மற்றும் கல்வி முறைகள் பற்றிய கருத்தரங்கை அமெரிக்காவில் நடத்துகின்றன. இதில் பங்கேற்பதற்காக இந்திய அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். மூன்று கட்டமாக டெல்லியில் தேர்வு நடந்தது. இறுதிச்சுற்றுக்கு 80 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியில் தென்னிந்திய அளவில் 2 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கோவையைச் சேர்ந்த ஆசிரியை பிரமிளாராஜும் ஒருவர். சூலூரில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நாளை அமெரிக்கா செல்கிறார். ஆசிரியை பிரமிளாராஜ் கூறுகையில், "இந்திய கலாசாரம் மற்றும் கல்வி முறையை அமெரிக்காவில் கற்றுத் தருவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை" என்றார். அமெரிக்கா செல்லும் ஆசிரியைக்கு சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். |

0 comments