Content feed Comments Feed

lankasri.com
விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்துவதை தடுக்கும் உலக ஊக்க மருந்து தடுப்பு பேரவையின் விதிமுறைகள் ஏற்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் கையெழுத்திட மறுத்துள்ளதை அடுத்து அது குறித்து முடிவெடுக்க நாளை கிரிக்கெட் வாரிய செயற்குழு கூடுகிறது.

உலக ஊக்க மருந்து தடுப்பு பேரவையின் (World Anti Doping Agency - WADA) விதிமுறைகளை ஏற்று பன்னாட்டு கிரிக்கெட் வாரியம் கையெழுத்திட்டுள்ளது. எனவே அதன் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் ஏற்றுக் கொண்டு கையெழுத்திட வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது.

ஆனால் உலக ஊக்க மருந்து தடுப்பு விதிமுறைகளில் ஒன்று, அதில் கையெழுத்திடும் ஒவவொரு வீரரும் தாங்கள் எப்போது எங்கிருந்தோம் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டுமென்கிறது. இதனை தங்களுடை தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதாக உள்ளதென கூறிய நமது நாட்டின் மூத்த கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், மஹேந்திர சிங் தோனி ஆகியோர் விதிமுறை ஏற்பு படிவங்களில் கையெழுத்திட மறுத்துவிட்டனர்.

இப்பிரச்சனைக்குத் தீர்வு காண இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்குழு நாளை மும்பையில் அவசரமாகக் கூடுகிறது. இதில் கலந்துகொள்ள விருப்பப்பட்டால் கலந்து கொள்ளலாம் என்று சச்சின், தோனி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0 comments

Post a Comment

About Us