Content feed Comments Feed

தமிழ்ப் படங்களை இங்குள்ளவர்களைவிட பாலிவுட் ஸ்டார்கள்தான் அதிக அக்கறையோடு கவனிக்கிறார்கள். க‌ஜினி, கம்பக்த் இஸ்க் படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்த கவனிப்பு அதிக‌ரித்திருக்கிறது.


விக்ரம் நடிக்கும் கந்தசாமியை தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தியிலும் வெளியிடும் வேலைகள் நடந்து வருகின்றன. விக்ரமின் படங்கள் இதற்கு முன்பும் இந்தியில் டப் செய்து வெளியாகியிருக்கின்றன. ‌‌ரீமேக்கும் செய்யப்பட்டிருக்கின்றன.

தரணி இயக்கத்தில் நடித்த தி‌ல், தம் என்ற பெய‌ரில் விவேக் ஓபராய் நடிப்பில் இந்தியில் ‌‌ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் தமிழ் திலபட‌த்தை இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். விக்ரமின் கந்தசாமி, ராவண் படங்கள் இந்தியில் வெளியாக இருப்பதால் இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

ஒரு படத்தை ‌‌ரீமேக் செய்துவிட்டு, அதே படத்தை டப் செய்து வெளியிடுவது இந்திய அளவில் இதுவே முதல் முறையாக இருக்கும். அப்படின்னா சீயானின் மார்க்கெட் எகிறியிருக்கிறது என்று அர்த்தம்.

0 comments

Post a Comment

About Us