Content feed Comments Feed


குஜராத் மாநிலத்துக்கு கவர்னராக நியமிக்கப்பட்ட 74 அகவையான டி.என்.திவேதி உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் நவல் கிஷோர் சர்மா கவர்னராக இருந்தார். இவரது 5 ஆண்டு பதவிக்காலம் கடந்த மாதம் 24-ந் தேதியுடன் முடிந்தது.

குஜராத் மாநில புதிய கவர்னராக டி.என்.திவேதியை நியமனம் செய்து ஜனாதிபதி பிரதீபா பட்டீல் அறிவித்தார். கடந்த வாரம் திவேதி குஜராத் சென்று கவர்னராக பதவி ஏற்க திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பித்த நீர் சுரக்கச் செய்யும் கல்லீரலில் அவருக்கு கோளாறு இருப்பது தெரிய வந்தது.

டெல்லியில் உள்ள ஸ்ரீகங்காராம் மருத்துவ மனையில் அவர் கடந்த 23-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடத்த வேண்டும் என்றனர். அதன் படி திவேதி கல்லீரல் அகற்றப்பட்டு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வு எடுத்து வந்தார். நேற்றிரவு அவர் உடல் நிலை மோசமானது. இன்று அதிகாலை 4 மணிக்கு அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.

திவேதி மரணத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். திவேதி மரணம் காரணமாக குஜராத் மாநிலத்துக்கு வேறு ஒருவரை உடனடியாக கவர்னராக நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

புதிய கவர்னர் அறிவிக்கப்படும் வரை குஜராத் மாநில விவகாரங்களை மராட்டிய மாநில கவர்னர் எஸ்.சி.ஜமீர் கூடுதல் பொறுப் பாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments

Post a Comment

About Us