| ராமேஸ்வரம் நடராஜபுரத்தை சேர்ந்த மீனவர் சின்னமுனியன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி, மகள் சில ஆண்டுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டனர். அதனால் சின்னமுனியன் வீட்டில் தனியே வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டில் உறவுக்கார பெண் மகேஸ்வரியுடன் தங்கியிருந்தார். அப்போது நள்ளிரவில் வந்த மர்ம ஆசாமி வீட்டு ஜன்னல் வழியாக நாட்டு வெடிகுண்டை வீசினர். இதில் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அதனால் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. வீட்டினுள் இருந்த மகேஸ்வரி படுகாயமடைந்தார். அவர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நள்ளிரவில் வெடிவெடித்ததால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தனுஷ்கோடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். சின்னமுனியனுக்கும் அவரது தம்பி பாண்டிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. அதனால் பாண்டிதான் வெடிகுண்டு வீசியிருப்பார் என சின்னமுனியன் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source - www.newindianews.com |

0 comments