நாற்காலி நாலு கால் இருந்தும்
நடக்க முடியாத பாவி.
நடப்பவரையும்,
நடக்க முடியாதவரையும்
தாங்கும் தைரிய சாலி.
பாராளு மன்றுக்குள்
பல தடைவ
மந்திரிமார் கரங்களில்
காத்திரமான ஆயுதமாவாய்
நீ வசிக்கும் இடங்களைப்
பொறுத்தே உன் விலை வாசி.
உன் மீது அமர்பவர்
தரத்தால் என்றென்றும்
தனி மரியாதை.
ஆளும் கட்சிக்கும்
எதிர் கட்சிக்கும்
உன்னால் தானே
பெரும் மோதல்.
ஆசைப்பட வைத்து
ஆர்ப்பாட்டங்களை
தொடக்கி வைப்பாய்
சாம்ராச்சியம் பல
அழிந்து போவதற்கு
நீயும் பாத்திரவாளி.
குற்றச் சாட்டுகள்
பல இருந்தாலும் ,
கேட்டு விசாரிக்க
வேண்டியவர்களையு மல்லவா
நீயே தாங்கிக் கொள்கின்றாய்.
அதிசயப் படையல்
வாழ்க பல்லாண்டு.
தயாநிதி
பிரான்ஸ்

Very correct