Content feed Comments Feed


புதிய வெளியுறவு செயலராக நிருபமா ராவ் (58) சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) பதவியேற்கிறார். வெளியுறவு செயலராக இருந்த சிவசங்கர் மேனன் வெள்ளிக்கிழமை பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதையடுத்து நிருபமா ராவ் பதவியேற்கவுள்ளார். இவர் இந்த பதவியில் 17 மாதங்கள் நீடிப்பார்.

வெளியுறவுச் செயலர் என்ற உயரிய பதவியை வகிக்கப் போகும் இரண்டாவது பெண் நிருபமா ராவ். முன்னதாக, சோகிலா ஐயர் இந்த பதவியை வகித்தார்.

வெளியுறவு பணியில் சிறந்த அனுபவமிக்கவர் நிருபமா ராவ். அவர் வெளியுறவு பணியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார். கடைசியாக சீனாவுக்கான இந்திய தூதராக அவர் பதவி வகித்தார்.

Source - www.newindianews.com

0 comments

Post a Comment

About Us