Content feed Comments Feed


அம்மா கேரக்டரா அய்யய்யோ வேணாம் என்று தலை தெறிக்க ஓடும் நடிகைகளுக்கு மத்தியில் நடிகை அபர்ணா ‘கண்ணுக்குள்ளே’ படத்தில் 5 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார்.
புதுக்கோட்டை சரவணன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார் அபர்ணா. அந்தப் படம் காலை வாரி விட்டுவிட்டது. அதற்குப் பின்னர் இவர் நடித்த ‘ஏபிசிடி’ படமும் சரியாக போகவில்லை. அதற்கு பின்பு ஒன்றிரண்டு படங்களில் துக்கடா கேரட்டர்கள் பண்ணிவிட்டு போனவர் இப்போது ‘கண்ணுக்குள்ளே’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் 5 வயது குழந்தைக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது பற்றி அபர்ணா ‘இந்தப் படம் எனக்கு ஒரு நல்ல பிரேக்கை கண்டிப்பாக ஏற்படுத்தித் தரும்... ஹீரோவுக்கு அம்மாவாக நான் நடிக்கவில்லை... ஒரு குழந்தைக்கு அம்மாவாகத்தானே நடிக்கிறேன்...
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சிம்ரன் கூட ஒரு குழந்தைக்கு அம்மாவாகத்தான் நடித்தார். எவ்வளவு பாராட்டைப் பெற்றார். அதைப் போல இந்தப் படமும் பேசப்படும்படியாக இருக்கும்...’ என்கிறார்.

0 comments

Post a Comment

About Us