ரோமில் நடைபெற்று வரும் உலக சாம்பியன் நீச்சல் போட்டித் தொடரில் 200மீ மெட்லி பிரிவில் அமெரிக்க வீரர் லோக்டே, பீஜிங் ஒலிம்பிக், உலக சாதனை மன்னன் பெல்ப்ஸின் உலக சாதனையை முறியடித்தார்.
பீஜிங் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் உலக சாதனை புரிந்து 8 தங்கம் வென்ற மைக்கேல் ஃபெல்ப்ஸின் சாதனைகள் ஒவ்வொன்றாய் தற்போது ரோமில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகளில் முறியடிக்கப்பட்டு வருகின்றன. நேற்று பெல்ப்ஸின் 200மீ. மெட்லி பிரிவு நீச்சல் சாதனையை அமெரிக்க வீரர் ரயான் லோக்டே முறியடித்தார்.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் லோக்டே 200 மீ மெட்லி பிரிவு நீச்சலில் ஒரு நிமிடம் 54.10 வினாடிகளில் இலக்கை எட்டி ஃபெல்ப்ஸின் பீஜிங் ஒலிம்பிக் உலக சாதனை நேரமான 1 நிமிடம் 54.23 வினாடிகள் சாதனையை முறியடித்தார்.
இதே பிரிவில் ஹங்கேரியின் சீஸே இரண்டாவதாகவும், அமெரிக்க வீரர் எரிக் ஷான்ட்டூ வெண்கலமும் வென்றனர்.
லோக்டே ஏற்கனவே இந்த நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் 4x100 நீச்சல் பிரிவில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments