Content feed Comments Feed

அரசியலில் மட்டுமல்ல, சினிமாவிலும் நிரந்தர நண்பர்களோ, நிரந்தர எதி‌ரிகளோ கிடையாது. கவுதம் வாசுதேவ மேனன் விஜய்க்கு கதை சொல்ல சென்ற கதை அனைவருக்கும் தெ‌ரியும்.
கவுதம் சொன்ன கதையை பொறுமையாக கேட்ட விஜய், அவர் கிளம்பும்போது தன்னுடைய திருப்பாச்சி, சிவகாசி படங்களின் டிவிடி-க்களை கவுதம் கையில் திணித்திருக்கிறார். எதற்கு? அந்தப் படங்களில் இருப்பதுபோல சீன் பிடிப்பதற்கு.

இதை கவுதம் மீடியாவில் வெளிப்படுத்திய பிறகு விஜய் சார்பில் கவுதமுக்கு பேரரசு பதிலடி கொடுத்தார். நான் கவுதமைப் போல ஹாலிவுட் படங்களின் டிவிடி பார்த்து படம் பண்றதில்லை. அவர் மாதி‌ரி நான் டிவிடி இயக்குனர் கிடையாது... இத்யாதி.. இத்யாதி...

இந்த சண்டைக்குப் பிறகு விஜய், கவுதம் இணைவார்கள் என்று கற்பனையில்கூட யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் நாம் முன்பே சொன்ன மாதி‌ரி சினிமாவில் நிரந்தர நண்பன் இல்லாத மாதி‌ரி எதி‌ரியும் கிடையாது.

கண்டிப்பாக வெற்றி கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் விஜய், கவுதமிடமும் கதை கேட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

பெ‌ரிய பட்ஜெட் படங்கள் இயக்க விஜய் மாதி‌ரி ஒரு மாஸ் ஹீரோவின் கால்ஷீட் தேவை என்று ஏற்கனவே சூழலை பதப்படுத்தியிருந்தார் கவுதம். இரண்டையும் இணைத்துப் பார்த்து கவுதம் இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதி என்கிறார்கள் ஸ்டுடியோ வட்டாரத்தில்.

மாஸும், கிளாஸும் சேர்வது நல்லதுதானே.

0 comments

Post a Comment

About Us