| அந்த கிராமங்களை மீட்க பாதுகாப்புப் படையினர் லால்கரில் முற்றுகையிட்டுள்ளனர். லால்கர் புறநகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் களில் 2 பேர் திடீரென மாயமாகி விட்டனர். அவர்களை கண்டுபிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். புலபேடா காட்டுப்பகுதிக்குள் தேடுதல் வேட்டை நடத்தியபோது பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. பாதுகாப்பு படையினர் தரப்பில் யாரும் காயம் அடையவில்லை என்று மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு எம்.கே. வர்மா கூறினார். இந்த துப்பாக்கி சண்டையில் 3 கிராமவாசிகள் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்ததாக தெரிய வந்துள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் மேற்கு மிட்னாபூர், பன்குரா, புரூலியா ஆகிய 3 மாவட்டங் களிலும் மாவோயிஸ்டுகள் வலுவாக உள்ளனர். 21 காவல் நிலைய பகுதிக்குட் பட்ட இடங்களில் அவர்களது ஆதிக்கம் உடைக்க முடியாத படி உள்ளது. அவர்களை விரட்ட கடந்த நவம்பர் மாதம் முதல் போலீசாரும் பாதுகாப்புப் படை வீரர்களும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். |

0 comments